ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ரூ.10,000-க்கும் கீழ் விற்பனை செய்யப்படும் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல்!

ரூ.10,000-க்கும் கீழ் விற்பனை செய்யப்படும் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல்!

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

ரூ.10,000க்கு கீழ் நீங்கள் வாங்கக்கூடிய சில சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை பற்றி பின்வருமாறு காண்போம்.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

இந்தியா மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தைகளில் ஒன்றாகும். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஸ்மார்ட்போன் யூசர்கள் இந்தியாவில் தான் இருக்கின்றனர். பெரும்பாலான மக்களுக்கு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களைத் தேர்ந்தெடுக்க உதவும் ஒரு சந்தையாகவும் இந்தியா விளங்குகிறது. அதன்படி ஆயிரக்கணக்கான சலுகைகள் நிறைந்த சந்தைகளில், ரூ.10,000க்கு கீழ் நீங்கள் வாங்கக்கூடிய சில சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை பற்றி பின்வருமாறு காண்போம்.

ரியல்மி நார்ஸோ 30ஏ: (REALME NARZO 30A)

Realme Narzo 30A, ஸ்மார்ட்போன் ரூ. 8,999 முதல் விற்பனை செய்யப்படுகிறது மற்றும் இந்த மொபைல் Realme.com இல் விற்பனைக்கு கிடைக்கிறது. Realme Narzo 30A ஆனது 6.5-இன்ச் HD+ டிஸ்பிளே மற்றும் ஆக்டா-கோர் MediaTek Helio G85 சிப்செட், 4GB ரேம் மற்றும் 64GB உள் சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது டூயல் சிம் கார்டுகளை ஆதரிக்கிறது. 13 மெகாபிக்சல் பிரைமரி கேமராவை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமராவை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. இது USB Type-C போர்ட் வழியாக 18W வேகமாக சார்ஜ் செய்வதை ஆதரிக்கும் 6,000mAh பேட்டரியை பெற்றுள்ளது.

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1: (MICROMAX IN NOTE 1)

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மைக்ரோமேக்ஸ் IN நோட் 1 மொபைலின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மாடல் ரூ.9,999 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த மொபைல் Micromax இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் Flipkart இல் கிடைக்கும். இது ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 அனுபவத்தை வழங்குகிறது. இது MediaTek Helio G80 செயலியில் இயங்குகிறது. மேலும் பிரைமரி 48 மெகாபிக்சல் கேமரா பின்புறத்தில் மேலும் இரண்டு சென்சார்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எப்2எஸ்(SAMSUNG GALAXY F02S)

சாம்சங்கின் இந்த நுழைவு-நிலை ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் HD+ இன்ஃபினிட்டி-V டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 SoC, 4ஜிபி வரை ரேம், மூன்று பின்புற கேமராக்கள் ஆகியவை உள்ளன. பின்புற அமைப்பில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது. மேலும் முன்பக்கத்தில் செல்ஃபிக்களுக்காக 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இதில் பெரிய 6,000mAh பேட்டரி உள்ளது. Samsung Galaxy F-2s விலை ரூ.9,499 ஆகும். Flipkart, Croma, Vijay sales, Amazon மற்றும் Samsung's official store உள்ளிட்ட இடங்களில் கிடைக்கிறது.

மோட்டோரோலா மோட்டோ ஜி10 பவர்: (MOTOROLA MOTO G10 POWER)

Moto G10 ஆனது 6.5-இன்ச் HD+ (720×1,600 பிக்சல்கள்) மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, octa-core MediaTek Helio G25 SoC மற்றும் 13 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்கள் பெரிய 5,000mAh பேட்டரியுடன் சுத்தமான Android அனுபவத்தை அனுபவிக்க முடியும். இதன் விலை ரூ.9,999 ஆகும்.

நோக்கியா சி20 பிளஸ்: (NOKIA C20 PLUS)

Nokia C20 Plus ஆனது 4,950mAh பேட்டரியுடன் இரண்டு நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்குவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் HD+ டிஸ்பிளே மற்றும் octa-core Unisoc SC9863a SoC, 3ஜிபி வரை ரேம் உடன் வருகிறது. மேலும் இதில் 8 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதன் விலை ரூ. 9,999 ஆகும்.

ரெட்மி 9 பிரைம்: REDMI 9 PRIME

Redmi 9 Prime ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 மற்றும் இது Mi.com இல் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.53-இன்ச் FHD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது MediaTek Helio G80 ப்ராசசர் மூலம் இயங்குகிறது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வரை உள் சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் 13 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ், 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய குவாட் ரியர் கேமராவுடன் வருகிறது.

மோட்டோ இ40 (MOTO E40)

Moto E40 விலை ரூ.9,499 மற்றும் Flipkart இல் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும் இது யுனிசாக் T700 செயலி மூலம் இயங்குகிறது. தவிர 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 1டிபி வரை விரிவாக்கக்கூடியது.இதில், 48 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் ரியர் கேமரா உள்ளது.

Also read... வாட்ஸ்அப் விரைவில் வெளியிட உள்ள 5 புதிய அம்சங்கள்

இன்ஃபினிக்ஸ் ஹாட் 10எஸ்: (INFINIX HOT 10S)

Infinix Hot 10S இந்தியாவில் ரூ.9,999 என்ற விலைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை Infinix இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் Flipkart இல் வாங்கமுடியும். இது 6.82 இன்ச் டிஸ்ப்ளேவுடன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. தவிர, மீடியா டெக் ஹீலியோ ஜி85 சிப்செட் மூலம் இயங்கக்கூடிய இந்த போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர் அடங்கிய மூன்று பின்புற கேமரா உள்ளது.

First published:

Tags: Smartphone, Technology