• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ஆண்ட்ராய்டு போன்களை முடக்கும் Joker malware: இந்த 8 செயலிகள் உங்கள் போனில் இருந்தால் உடனடியாக நீக்கவும்!

ஆண்ட்ராய்டு போன்களை முடக்கும் Joker malware: இந்த 8 செயலிகள் உங்கள் போனில் இருந்தால் உடனடியாக நீக்கவும்!

மாதிரி படம்

மாதிரி படம்

ஆண்ட்ராய்டு போனில் உள்ள தகவல்கள், எஸ்எம்எஸ் மற்றும் போனுக்கு வரும் ஓடிபி போன்ற தனிப்பட்ட தகவல்களையும் திருடுவதாக சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  • Share this:
    கூகுள் ப்ளேஸ்டேரில் உள்ள 8 செயலிகளை ஜோக்கர் மால்வேர் தாக்கியுள்ளதால், அந்த 8 செயலிகள் உங்கள் போனில் இருந்தால் உடனடியாக நீக்கவும் என கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

    கூகுள் ப்ளேஸ்டேரில் உள்ள 8 செயலிகளை ஜோக்கர் மால்வேர் என்ற மென்பொருள் தாக்கியுள்ளதாக Quick Heal Security Labs நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து, Auxiliary Message, Fast Magic SMS, Free CamScanner, Super Message, Element Scanner, Go Messages, Travel Wallpapers and Super SMS ஆகிய இந்த 8 செயலிகளும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    எனினும், இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் வைத்திருந்தால் உடனடியாக அதனை நீக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஜோக்கர் மால்வேரானது, சிறுது காலமாக கூகுளுக்கு தண்ணீ காட்டி வருகிறது. அவ்வப்போது, கூகுள் நிறுவனம் இதுபோன்ற பாதிக்கப்பட்ட செயலிகளை நீக்கி வரும்போதும், இந்த மால்வேர் மீண்டும் சில மாதங்களில் ஊடுருவி விடுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த மால்வேர்கள் தனது அடையாளத்தை மாற்றி மீண்டும் இவ்வாறு ஊடுருவி வருகிறது. இந்த மால்வேர் எவ்வளவு ஆபத்தானது என்றால், இது ஆண்ட்ராய்டு போன் செயல்பாட்டையே முடக்கும் அளவுக்கு தீவிரமாக செயல்படுகிறது.

    மேலும், இது ஆண்ட்ராய்டு பயனர்களின் தகவல்களை எளிதாக திருடுகிறது. அதேபோல், ஆண்ட்ராய்டு போனில் உள்ள தகவல்கள், எஸ்எம்எஸ் மற்றும் போனுக்கு வரும் ஓடிபி போன்ற தனிப்பட்ட தகவல்களையும் திருடுவதாக சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: