Home /News /technology /

அதிக மக்கள் விரும்புவது சி டைப் சார்ஜர் தான் - மத்திய அரசுக்குத் திட்டத்திற்கு மக்களிடம் இருந்து கிடைத்த கிரீன் சிக்னல்!

அதிக மக்கள் விரும்புவது சி டைப் சார்ஜர் தான் - மத்திய அரசுக்குத் திட்டத்திற்கு மக்களிடம் இருந்து கிடைத்த கிரீன் சிக்னல்!

அனைத்து சாதனங்களிலும் ஒரே மாதிரியான சார்ஜ்ர்

அனைத்து சாதனங்களிலும் ஒரே மாதிரியான சார்ஜ்ர்

ஆண்ட்ராய்டு, ஐபோன் உள்ளிட்ட அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் ஒரே வகையான சி டைப் சார்ஜர்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பல வகையான சார்ஜர்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டு, அனைத்து வகையான ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்களுக்கும் பொருத்தக்கூடிய வகையில் C டைப் சார்ஜர்களை அறிமுகப்படுத்தும் வேண்டுமென ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் மற்றும் அந்த துறை சார்ந்த நிறுவனங்களிடம் மத்திய அரசு வலியுறுத்த உள்ளது.

    இதனை ஸ்மார்ட்போன் யூஸர்கள் பல வகையான சார்ஜர்களை பயன்படுத்தச் சிரமப்படுவதைத் தடுக்கவும் மற்றும் எலெக்ட்ரிக்கல் கழிவுகள் உற்பத்தியைக் குறைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இதுதொடர்பாக விவாதிக்க ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன் பின்னர், செல்போன் உள்ளிட்ட அனைத்து வகையான மின்னணு சாதனங்களிலும் ஒரே வகையான சார்ஜர்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவது தொடர்பாக ஆராய நிபுணர்கள் குழு அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நுகர்வோர் துறை செயலாளர் ரோகித் குமார் சிங், பொது சார்ஜர்களை உருவாக்கும் முன்பு தயாரிப்பாளர்கள், பயனாளர்கள், சுற்றுச்சூழல், தொழில்துறையினர் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஆராய வேண்டி உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், பொது சார்ஜர் நடைமுறையால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் பொது சார்ஜர் முறைக்கு மாறியுள்ள நிலையில், அமெரிக்காவும் பொது சார்ஜர் முறைக்கு மாறுவது தொடர்பாக ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் பெரும்பாலான மக்கள் பொது சார்ஜர் முறைக்கு மாற தயாராக இருப்பது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலமாகத் தெரிய வந்துள்ளது.

    Also Read : அனைத்து போன்களுக்கும் ஒரே சார்ஜர்.. விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்.! 

    சமூக ஊடக தளமான LocalCircles வெளியிட்டுள்ள தரவுகளின் படி, பத்தில் 9 பேர் பொது சார்ஜிங் முறைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என விரும்புகின்றனர். இது சிரமத்தைக் குறைப்பதோடு, சார்ஜர் விலையைக் குறைக்கவும் உதவும் எனத் தெரிவித்துள்ளனர்.

    எந்த நிறுவனத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கும் ஒரே USB சார்ஜிங் கேபிள் இருக்க வேண்டும் என்று 78 சதவீத நுகர்வோர் கூறியிருந்தாலும், 6 சதவீதம் பேர் மட்டுமே தற்போதைய சிஸ்டம் நன்றாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

    ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் வெவ்வேறு சாதனங்களுக்கு வெவ்வேறு சார்ஜிங் கேபிள்களைக் கொண்டிருப்பதால் பெரும்பான்மையான இந்திய நுகர்வோர் மகிழ்ச்சியடையவில்லை என்றும், துணைக்கருவிகளின் விற்பனையை அதிகரிக்கவே பிராண்டுகள் அதைச் செய்கின்றன என்றும் தரவு முடிவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    Also Read : அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்.. தோசை பிரிண்ட் செய்யும் இயந்திரம் தெரியுமா மக்களே!

    பிராண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் சார்ஜர்கள் மிகவும் விலை அதிகமாக இருக்கும் நிலையில், பொது சார்ஜர் முறையைக் கொண்டு வந்தால் விலை குறைவான சார்ஜரை வாங்க உதவியாக இருக்கும் எனப் பெரும்பாலானோர் கருதுகின்றனர்.

    யூ.எஸ்.பி சார்ஜிங் கேபிள்களுக்கான பொதுவான தரநிலைகளை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும், ஏனெனில் தரநிலைப்படுத்தல் சார்ஜர் விலையைக் குறைக்கவும், தரமானதைத் தயாரிக்கவும் உதவும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Central government, Smartphone, Technology

    அடுத்த செய்தி