கேட்ஜெட்டுகள் பலவிதம் உள்ளன. அவற்றில் மிக சிலவற்றை மட்டுமே நமக்கு தெரியும். அதிலும் குறிப்பாக டெஸ்லா, மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், ஸியோமி போன்ற முன்னணி நிறுவனங்களால் தயாரிக்கப்படும் வித்தியாசமான புராடக்ட்கள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மிக சிறந்த தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்ட 7 முக்கிய புராடக்ட்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
மைக்ரோசாஃப்ட் அக்லி ஸ்வெட்டர் :
கிறிஸ்துமஸ் வரவிருப்பதால் புதுவித புராடக்ட் ஒன்றை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு 'அக்லி ஸ்வெட்டர்' என்று பெயரிட்டுள்ளது. மைன்சுவீப்பர் கேம் டிசைன் இந்த ஸ்வெட்டரில் தரப்பட்டுள்ளது. இந்த ஸ்வெட்டரானது ஸ்மால், லார்ஜ், மீடியம், ட்ரிப்பில் XL ஆகிய அளவுகளில் உள்ளது. இதில் கழுத்து பகுதியில் 1990 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் விண்டோஸ் லோகோவும் தரப்பட்டுள்ளது.
டெஸ்லா விசில் :
முன்னணி தொழில்நுட்பங்கள் சார்ந்த கம்பெனிகள் வித்தியாசமான சில புராடக்ட்களை தயாரிப்பது வழக்கம் தான். அந்த வகையில் டெஸ்லா நிறுவனம் 'சைபர் விசில்' என்கிற ஒன்றை தயாரித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட 'ஆப்பிள் கிளாத்' என்பதற்கு போட்டியாக இதை எலன் மஸ்க் இதை உருவாக்கி உள்ளார். மேலும் வேடிக்கையான ஆப்பிள் கிளாத் புராடக்ட்டிற்கு பதில் இந்த சைபர் விசிலை பயன்படுத்துங்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார். இதன் விலை 50 டாலராகும். இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3,700.
Also read: 2-வது உற்பத்தி ஆலையையும் ஓசூரில் அமைக்க உள்ள ஏதெர் நிறுவனம்.. உற்பத்தியை 3 மடங்கு அதிகரிக்கிறது..
ஆப்பிள் கிளாத் :
ஆப்பிள் நிறுவனத்தின் எல்லா வகை லேப்டாப்களின் டிஸ்பிளே முதல் ஆப்பிள் கேட்ஜெட்கள் வரை அவற்றை துடைக்க 'ஆப்பிள் கிளாத்' என்கிற புராடக்ட்டை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் விலை 19.99 டாலராகும். இந்திய மதிப்பில் 1900 ரூபாய் ஆகும். இது ஆப்பிள் யூசர்களுக்கு தங்களது கேட்ஜெட்களை பாதுகாப்பாக வைக்க உதவும்.
டெஸ்லா டக்கீலா :
கடந்த ஆண்டு எலன் மஸ்க் 'டெஸ்லா டக்கீலா' என்கிற புராடக்ட்டை அறிமுகம் செய்தார். மது பிரியர்களுக்கு இந்த டக்கீலா நிச்சயம் பிடிக்கும். இடி மின்னல் வடிவத்தை கொண்ட கண்ணாடி பாட்டிலில் டக்கீலா பானம் கொண்டுள்ளது. இதன் விலை 250 டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் 18,700 ரூபாய். தெற்கு கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ஸ்பிரிட்ஸ் பிராண்டான நோசோட்ரோஸ் டெக்யுலா நிறுவனம் இதை தயாரித்துள்ளது.
ஒன்பிளஸ் பேக் :
ஒன்பிளஸ் யூசர்களுக்கு இந்த புராடக்ட்டும் மிகவும் பிடிக்கும். பயணம் செல்பவர்களுக்கு ஏற்ற வகையிலான பேக் ஒன்றை ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் 9 அடுக்குகள் உள்ளது. எனவே இது பயணம் செல்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதன் விலை ரூ. 3,699 ஆக உள்ளது. இதை ஒன்பிளஸ் இணைய தளத்தில் நீங்கள் வாங்கி கொள்ளலாம்.
ஸியோமி ஷூ :
ஸியோமி நிறுவனம் ஷூக்களை அறிமுகம் செய்துள்ளது. ஒரு ஜோடி ஷூவின் விலை 2,999 ரூபாயாகும். நீலம், கருப்பு மற்றும் கிரே ஆகிய நிறங்களில் இது கிடைக்கிறது. இந்த ஸியோமி 5 இன் 1 மாடல் ஷூவானது புதுவித மோல்டிங் தொழில்நுட்பத்தை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இது வழுக்காது, ஈரத்தை உறிஞ்சக்கூடியது.
டெஸ்லா ஆடைகள் :
மேற்சொன்ன புராடக்ட்களை போன்று டெஸ்லா நிறுவனம் ஆடைகளையும் விற்கிறது. டி-ஷர்ட், கேப், ஹூடிஸ், ஜாக்கர்ஸ், ஜாக்கெட், பீனிஸ், சாக்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் போன்ற புராடக்ட்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் ட்ரிப்பில் XL அளவு வரை உள்ளது. எனவே டெஸ்லா விரும்பிகளுக்கு இந்த பேக் நிச்சயம் பிடிக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Apple, Technology