ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

உலகிலேயே முதன்மையான இடத்தில் இந்தியா..! 5ஜி தொழில்நுட்ப யூசர்கள் 690 மில்லியனாக உயரும்..!

உலகிலேயே முதன்மையான இடத்தில் இந்தியா..! 5ஜி தொழில்நுட்ப யூசர்கள் 690 மில்லியனாக உயரும்..!

5ஜி சேவை

5ஜி சேவை

உலக அளவில் 5ஜி இணைப்புகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பில்லியன் என்ற அளவில் அதிகரிக்க உள்ளது. மேலும், 2028ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 5 பில்லியனாக அதிகரிக்க உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் தற்போதுள்ள மொத்த மொபைல் வாடிக்கையாளர்களில் 53 சதவீதம் பேர் 2028ஆம் ஆண்டுக்குள் 5ஜி சேவையை பெற உள்ளனர். அதாவது இந்தியாவில் 690 மில்லியன் யூசர்கள் 5ஜி சேவையை பயன்படுத்த உள்ளனர். ஜியோ, ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நாடெங்கிலும் 5ஜி சேவையை அறிமுகம் செய்து வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 5ஜி இணைப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 31 மில்லியனாக இருக்கும்.

2022ஆம் ஆண்டில், ஒவ்வொரு ஸ்மார்ட்ஃபோனிலும் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 25 ஜிபியாக உள்ள டேட்டா பயன்பாடு, 2028ஆம் ஆண்டு ஆண்டுக்குள் 54 ஜிபியாக அதிகரிக்க உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மொத்த மொபைல் வாடிக்கையாளர்களில், ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தற்போது 77 சதவீதமாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2028ஆம் ஆண்டில் 94 சதவீதமாக அதிகரிக்கும்.

உச்சம் பெறும் 4ஜி

2024ஆம் ஆண்டில் இந்தியாவில் 4ஜி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 930 மில்லியனாக அதிகரிக்கும். இதற்கிடையே 5ஜி வளருவதன் காரணமாக 2028ஆம் ஆண்டுக்குள் 4ஜி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 570 மில்லியனாக அதிகரிக்கும். இதுகுறித்து எரிக்ஸன் நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிரிவு தலைவர் நிதின் பன்சால் கூறுகையில், “அனைவருக்கும் டிஜிட்டல் சேவைகள் சென்று சேர வேண்டும் என்ற இந்தியாவின் இலக்குகளை அடைவதற்கு 5ஜி சேவைகள் மிகவும் உதவிகரமாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.

Read More : 23 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்..

மேம்படுத்தப்பட்ட மொபைல் பிராட்பேண்ட் சேவை மற்றும் பிக்ஸடு வயர்லெஸ் ஆக்சஸ் போன்ற சேவைகள் 5ஜி சேவைக்கு முன்னதாக பயன்படுத்தப்பட்ட சேவைகளாக இருக்கும். நாட்டில் வரையறுக்கப்பட்ட அளவில் உள்ள பிராட்பேண்ட் இணைப்புகள் மற்றும் பயணத்தின்போது டேட்டா பயன்பாடு குறித்த கவலைகளை தீர்ப்பதாக இது அமையும்.

உலகிலேயே முதன்மையான இடத்தில் இந்தியா

இந்தியாவில் சராசரியாக ஒரு ஸ்மார்ட்ஃபோனில் பயன்படுத்தப்படும் டேட்டா தான் தற்போது உலக அளவில் அதிகமானதாக இருக்கிறது. இந்தியாவில் ஒரு மாதத்திற்கான மொத்த டேட்டா பயன்பாடு தற்போது 18 இபி (எக்ஸா பைட்) அளவில் உள்ள நிலையில், இது 2028ஆம் ஆண்டு 53 இபி-யாக மாற உள்ளது.

உலக அளவில் 5ஜி இணைப்புகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பில்லியன் என்ற அளவில் அதிகரிக்க உள்ளது. மேலும், 2028ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 5 பில்லியனாக அதிகரிக்க உள்ளது. உலகின் பல பகுதிகளிலும் பொருளாதார சவால்கள் நிலவி வரும் நிலையிலும், இந்த வளர்ச்சி எட்டப்பட உள்ளது.

உலகெங்கிலும் கடந்த ஜூலை - செப்டம்பர் காலகட்டத்தில் 110 மில்லியன் வாடிக்கையாளர்கள் 5ஜி சேவையை பெற்றுள்ளனர். இதன் மூலமாக மொத்த 5ஜி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 870 மில்லியனாக உள்ளது.

First published:

Tags: 5G technology, India, Technology