Home /News /technology /

Amazon India | 6 வயது குழந்தையின் ஆதார் எண்ணை அமேசானில் வெளியிட்ட வியாபாரி.!

Amazon India | 6 வயது குழந்தையின் ஆதார் எண்ணை அமேசானில் வெளியிட்ட வியாபாரி.!

ஆதார்

ஆதார்

Amazon India | அமேசான் தளத்தில், வியாபாரி ஒருவர் ஆதார் கார்டுகளுக்கான பவுச்சுகளை விற்பனை செய்ய நினைத்தார். இதற்காக, அவர் தனது பிராடக்டுகளை விற்பனைக்கு காட்சிப்படுத்தியபோது, அதில் 6 வயது குழந்தையின் ஆதார் அட்டைப் படத்தையும் இணைத்துவிட்டார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
ஒவ்வொரு இந்தியருக்கும் மிக முக்கியமான ஆவணமாக ஆதார் மாறியிருக்கிறது. பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற பல ஆவணங்களுடன் ஆதார் அட்டையை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, மற்ற ஆவணங்களைக் காட்டிலும் மிகுந்த முக்கியத்துவம் கொண்ட ஆவணமாக ஆதார் இருக்கிறது. ஆதார் எண்ணில் நமது பயோமெட்ரிக் விவரங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில், ஆதார் எண்ணின் பாதுகாப்பு சென்சிட்டிவ் மிகுந்த விஷயமாக இருக்கிறது. இதனால், தான் ஆதார் எண்ணை அடையாள ஆவணமாகவும், அரசு சேவைகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளும் அதே சமயத்தில், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் அல்லது பொது இணையதளங்களில் அதை பதிவிடக் கூடாது என்று யுஐடிஏஐ அறிவுறுத்தியிருந்தது.

மேலும், பயனாளர்களின் பாதுகாப்பு கருதி மாஸ்க்டு ஆதார் கார்டு விநியோகம் செய்யும் நடவடிக்கையையும் யுஐடிஏஐ மேற்கொண்டு வருகிறது. அரசு இவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற சூழலில், சில தனி நபர்கள் அறிந்தோ, அறியாமலோ ஆதார் எண்ணை பகிரங்கப்படுத்துகின்றனர். அதுவும், வேறு ஒருவருடைய ஆதார் எண்-ஐ பொதுவெளியில் வெளியிடும்போது குறிப்பிட்ட அட்டைக்குரிய நபரின் தனியுரிமை பாதுகாப்பு குறித்து கேள்வி எழுகிறது.



அப்படியொரு நிகழ்வு தான் அண்மையில் நடைபெற்றுள்ளது. அமேசான் தளத்தில், வியாபாரி ஒருவர் ஆதார் கார்டுகளுக்கான பவுச்சுகளை விற்பனை செய்ய நினைத்தார். இதற்காக, அவர் தனது பிராடக்டுகளை விற்பனைக்கு காட்சிப்படுத்தியபோது, அதில் 6 வயது குழந்தையின் ஆதார் அட்டைப் படத்தையும் இணைத்துவிட்டார்.

Also Read : சீன ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தடை; சீனாவின் தரப்பில் விளக்கம்

இதில், ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், அமேசான் இணையதளமும் எந்தவித ஆட்சேபனையும் இல்லாமல் அந்த ஆதார் படத்தை பிரசுரம் செய்துள்ளது என்பதுதான். குறிப்பிட்ட ஆதார் அட்டை படத்தில் குழந்தையின் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், வீட்டு முகவரி மற்றும் இதர தனி விவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் தெளிவாக தெரியும் வண்ணம் இருக்கிறது.



குறிப்பிட்ட ஆதார் எண்-ஐ எடுத்து, யுஐடிஏஐ தளத்தில் நியூஸ் 18 செய்திக்குழுவினர் ஆய்வு செய்தபோது, அது உண்மையான ஆதார் எண் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இணையதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்கள், சமூக வலைதளங்கள் போன்றவற்றில் ஆதார் அட்டையை காட்சிப்படுத்தும்போது, அதில் உள்ள தனி விவரங்களை மறைக்க வேண்டும் என்று யுஐஏடிஐ ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. ஆனால், அந்த அறிவுறுத்தலை மீறும் வகையிலான நடவடிக்கையை அமேசான் நிறுவனம் அனுமதித்துள்ளது.

Also Read : 54 லட்ச யூசர்களின் தகவல் திருட்டு! டிவிட்டரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

ஆதார் அட்டையின் தனியுரிமை பாதுகாப்பு கருதி, பொதுவான கணினிகள் அல்லது பிரவுசிங் செண்டரில் இ- ஆதார் அட்டை டவுன்லோடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், அப்படியே டவுன்லோடு செய்தாலும் அதை அழித்துவிட வேண்டும் என்றும் யுஐடிஏஐ அறிவுறுத்தியிருக்கிறது.
Published by:Selvi M
First published:

Tags: Aadhaar card, Amazon, Technology

அடுத்த செய்தி