இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை – சாம்சங் தகவல்

5G technology service to be introduced soon – Samsung | 2019 ஜனவரி முதல் மார்ச் மாதத்துக்குள் மிகப்பெரிய அளவில் 5ஜி சோதனையை மேற்கொள்ள சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை – சாம்சங் தகவல்
சாம்சங் | பிராண்ட் மதிப்பு: 91,282 மில்லியன் டாலர்
  • News18
  • Last Updated: October 28, 2018, 11:26 AM IST
  • Share this:
நாட்டில் விரைவில் 5ஜி சேவையின் சோதனை தொடங்கப்பட உள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரியொருவர் கூறியதாவது:- சாம்சங் நிறுவனம் தற்போது தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து செயலாற்றி வருகிறது.

தற்போது 4ஜி சேவையை தொடர்ந்து 5ஜி சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதையொட்டி, 5ஜி சோதனையை தொடங்கவுள்ளோம். இதன்படி, 2019 ஜனவரி முதல் மார்ச் மாதத்துக்குள் மிகப்பெரிய அளவில் 5ஜி சோதனையை மேற்கொள்ள சாம்சங் திட்டமிட்டுள்ளது.


இந்த சோதனை டெல்லியில் மேற்கொள்ளப்படும். இது பலகட்டங்களாக நடைபெறும். இதற்கு நீண்டகாலம் பிடிக்க வாய்ப்புள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

5ஜி தொழில்நுட்பத்தின் பயன்கள்: 5ஜி தொழில்நுட்பம் வேகமான டேட்டா சேவையை வழங்க உதவும். மேலும், புதிய செயலிகளையும் (App) பயன்படுத்துவதற்கு ஆதாரமாக அமையும்.

சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட துறைகளின் பராமரிப்பு, சிறு நகரம், கிராமங்களின் கண்காணிப்புப் பணிகளில் 5ஜி தொழில்நுட்பம் பெருமளவில் பயன்படும்.Also watch

First published: October 28, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading