Home /News /technology /

5ஜி போன்களின் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் அரசாங்கத்தின் புதிய விதி!

5ஜி போன்களின் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் அரசாங்கத்தின் புதிய விதி!

காட்சி படம்

காட்சி படம்

5G Smartphone | இந்தியாவில் வெளியாகும் 5ஜி டிவைஸ்கள் ஆனது உள்ளூர் சோதனை மற்றும் சான்றிதழை பெறுவதை அரசாங்கம் கட்டாயமாக்கி உள்ளது.

இந்தியாவின் பிரதான டெலிகாம் ஆப்ரேட்டர்கள் ஆன பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் விஐ (வோடாபோன் ஐடியா) ஆகியவைகள், இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான பற்றாக்குறை ஏற்படலாம், அதாவது 5ஜி போன்களை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் மந்தநிலையைக் காணலாம் என்று எச்சரித்துள்ளன.

ஏனெனில் - தி எகனாமிக் டைம்ஸின் ஒரு அறிக்கையின்படி - ஜனவரி 1, 2023 முதல் இந்தியாவில் வெளியாகும் 5ஜி டிவைஸ்கள் ஆனது உள்ளூர் சோதனை மற்றும் சான்றிதழை பெறுவதை அரசாங்கம் கட்டாயமாக்கி உள்ளது. இதன் பொருள் இந்தியாவில் அறிமுகமாகும் அனைத்து புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களும் நாட்டில விற்கப்படுவதற்கு முன் உள்ளூர் சோதனை மற்றும் சான்றிதழ் செயல்முறையை கடக்க வேண்டும்.

இதன் விளைவாக எப்படி இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான பற்றாக்குறை ஏற்படும்?

சிறந்த டெலிகாம் ஆப்ரேட்டர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கமானது (Cellular Operators Association of India - COAI), 5ஜி போன்களின் மீதான உள்ளூர் சோதனை மற்றும் சான்றிதழ் அளிக்கும் இந்த நடவடிக்கை ஆனது டேட்டா நுகர்வைக் குறைக்கும், மார்க்கெட் அக்சஸை கட்டுப்படுத்தும் மற்றும் நுகர்வோர்களை லேட்டஸ்ட் ஆக அறிமுகமான 5ஜி போன்களை வாங்குவதில் இருந்து விலக்கும் என்று எச்சரித்துள்ளது.

also read : Apple, Google Chrome பயனர்களே உஷார்... மத்திய அரசு வெளியிட்ட திடீர் எச்சரிக்கை!

வெளியாகும் அனைத்து புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களையும் சோதித்து, பின் அதற்கு சான்றளிக்கும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது உலகளாவிய கைபேசி உற்பத்தி மையமாக மாறும் இந்தியாவின் அபிலாஷைகளுக்கு இடையூறாக இருக்கும் என்று டெலிகாம் ஆப்ரேட்டர்கள் கூறியுள்ளதாகவும் வெளியான தி எகனாமிக் டைம்ஸின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

பற்றாக்குறையை கட்டவிழ்த்து விடப்போகும் அரசாங்கத்தின் புதிய விதி தான் என்ன?

டாட்-ன் (DoT) தொழில்நுட்பப் பிரிவான டெலிகாம் இன்ஜினியரிங் சென்டரின் ( Telecom Engineering Centre - TEC) சமீபத்திய கூட்டத்தில், 5ஜி போன்களை மேன்டடரி டெஸ்டிங் அண்ட் சர்டிபிஃகேஷன் ஆஃப் டெலிகாம் எக்யூப்மென்ட் (Mandatory Testing and Certification of Telecom Equipment - MTCTE) ரெஜிமின் கீழ் கொண்டு வர முடிவு செய்ததாக காட்டும் ஆவணங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம், எம்டிசிடிஇ (MTCTE) ஆனது இந்தியாவில் விற்கப்படும் மின்னணு சாதனங்களின் கட்டாய சோதனை மற்றும் சான்றிதழைப் பற்றியது. இதன் கீழ், 5ஜி போன்களுக்கு, எம்டிசிடிஇ-ன் 5-ஆம் கட்டம் ஜனவரி 2023 முதல் தொடங்க உள்ளது.

also read : வாட்ஸ் அப்-பில் ஃபேக் நியூஸ் செக் செய்வது எப்படி - வந்தாச்சு புது வசதி

வேறு என்னென்ன சாதனங்கள் உள்நாட்டில் சோதிக்கப்பட்டு சான்றளிக்கப்படுகின்றன?

ஸ்மார்ட்வாட்ச்கள், வியரிபிள்ஸ் மற்றும் கேமராக்கள் ஆகியவைகளும் கூட இந்தியாவில் விற்கப்படுவதற்கு முன்பு உள்நாட்டில் சோதனை செய்யப்பட்டு சான்றளிக்கப்பட வேண்டும் என்று டிஇசி (TEC) முடிவு செய்த உடனேயே 5ஜி ஸ்மார்ட்போன்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. டெலிகாம் ஆப்ரேட்டர்கள், ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுடன் இணைந்து இந்த "உள்ளூர் சோதனை மற்றும் சான்றிதழ்" செயல்முறையை நிறுத்துமாறு டாட்-ஐ வலியுறுத்தியுள்ளனர்.

டெலிகாம் ஆப்ரேட்டர்களும், உற்பத்தியாளர்களும் என்ன சொல்கிறார்கள்?

எம்டிசிடிஇயின் 3 ஆம் கட்டத்தின் கீழ் ஸ்மார்ட்வாட்ச்கள், வியரிபிள்ஸ் மற்றும் கேமராக்கள் உள்ளூர் சோதனைக்கு உட்படுத்தப்படுவதையும், 5 ஆம் கட்டத்தின் கீழ் 5ஜி ஸ்மார்ட்போன்கள் சேர்க்கப்படுவதையும் தவிர்க்குமாறு டிஇசி-ஐ டெலிகாம் ஆப்ரேட்டர்களும், உற்பத்தியாளர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Smartphone

அடுத்த செய்தி