ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

5ஜி தொழில்நுட்பம் : டெல்லியில் இருந்து ஸ்வீடனில் உள்ள காரை இயக்கிய பிரதமர் மோடி!

5ஜி தொழில்நுட்பம் : டெல்லியில் இருந்து ஸ்வீடனில் உள்ள காரை இயக்கிய பிரதமர் மோடி!

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ்" என்ற கருப்பொருளுடன் அக்டோபர் 1 முதல் 4 ஆம் தேதி வரை ஐஎம்சி மாநாடு  நடைபெறுகிறது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  இந்தியாவின் புது டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில்  5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும்,  இந்த நிகழ்வில் இந்திய மொபைல் காங்கிரஸின் (ஐஎம்சி) 6வது பதிப்பையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

  இந்த மொபைல் காங்கிரஸ் கண்காட்சியில் பல்வேறு 5ஜி தொழில்நுட்பங்களை பிரதமர் மேற்பார்வையிட்டார். அதில், எரிக்சன் நிறுவனம் 5ஜி நெட்வொர்க் செயல்திறன் கொண்டு இயங்கும் காரை காட்சிப் படுத்தியிருந்தது.  பிரதமர் மோடி, இந்த தொலைதொடர்பு காரை முயற்சி செய்தார். புதுடெல்லியில் இருந்து ஸ்வீடன் நாட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரை இயக்கினார்.

  5ஜி தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த காரை, உலகின் எந்த பகுதியில் இருந்தும்  தங்கு தடையற்ற முறையில் இயக்க முடியும். உயர்தரவு விகிதம், விரைவான செயல்பாடு, மிகவும் நம்பகமான தகவல்தொடர்புகளை 5ஜி தொழில்நுட்பம்  கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

  2022 ஐஎம்சி: புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ்" என்ற கருப்பொருளுடன் அக்டோபர் 1 முதல் 4 ஆம் தேதி வரை ஐஎம்சி மாநாடு  நடைபெறுகிறது.

  இது டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் விரைவான நடைமுறை மற்றும் பரவலில் இருந்து வெளிப்படும் தனித்துவமான வாய்ப்புகளை விவாதிக்கவும், காட்சிப்படுத்தவும் முன்னணி சிந்தனையாளர்கள், தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை ஒன்றிணைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: 5G technology, Narendra Modi