6வது இந்திய கைபேசி மாநாட்டில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதற்கட்டமாக டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்பட 13 இடங்களில் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்து வைத்தார்.
இதனிடையே, தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் வணிகத்தில் 5ஜி என்ன மாதிரியான தாக்கத்தை உருவாக்கும் எனப் பார்க்கலாம்.
- ஐந்தாம் தலைமுறைக்கான 5ஜி சேவையானது, 4ஜி சேவையை விட 20 மடங்கு வேகமானது. 5ஜி சேவையின் உச்சக்கட்ட வேகம் விநாடிக்கு 20 ஜிகாபிட்ஸ் ஆகும்.
- 4ஜி தொழில்நுட்பத்தின் உச்ச வேகம் 1 ஜிபிபிஎஸ். Gbps என்பது ஆப்டிகல் ஃபைபர் போன்ற டிஜிட்டல் தரவு பரிமாற்ற ஊடகத்தின் அலைவரிசையின் அளவீடு ஆகும். இது ஒரு வினாடிக்கு ஒரு பில்லியன் பிட்கள் அல்லது எளிய பைனரி அலகுகளுக்குச் சமமான தரவு பரிமாற்ற வீதத்தைக் குறிக்கிறது.
- 4ஜி தொழில்நுட்பத்தை விட 5ஜி தொழில்நுட்பத்தின் அப்லோடு மற்றும் டவுன்லோடு வேகம் மிக, மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 5ஜி நெட்வொர்க்கை பயன்படுத்தும் போது சாதனத்துடன், இணையத்தை இணைக்க ஆகும் நேரம் மிகவும் குறைவாக இருக்கும் என்பதால், வணிக பயன்பாடுகள், ஆன்லைன் கேமிங், வீடியோ கான்ஃபரன்சிங் மற்றும் தானியங்கி வாகனம் போன்ற பிற டிஜிட்டல் பயன்பாடுகளின் செயல்திறனும் மேம்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
- 4ஜி அலைக்கற்றை பரிமாற்றத்திற்கு வானுயர்ந்த டவர்கள் தேவைப்பட்ட நிலையில், 5ஜி சேவைக்கான அலைக்கற்றையைப் பரப்பக் கட்டிடங்கள், தெருவிளக்குகள் மற்றும் பிற பொருட்களுடன் இணைக்கச் சிறிய அளவிலான செல் ஆண்டெனாக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த செல் ஆண்டெனாக்களை பயன்படுத்துவது, உயர் அதிர்வெண் கொண்ட அலைக்கற்றைகளைக் குறுகிய பரப்பிலான பகுதிகளுக்கு அதிவேகமான ஸ்பீடில் வழங்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கருத்துப் படி, 5ஜி சேவைக்கான கட்டணம் 4ஜி-யை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
Also Read :மச்சான் செஸ் விளையாட தெரியுமா? நீ Ground-ல நின்னு நான் shoe போட்டு வரேன் - வைரல் மீம்ஸ்
CRISIL ரேட்டிங்ஸின் மூத்த இயக்குநர் மணீஷ் குப்தா கூறுகையில், "ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஏராளமான தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளதால், தொழில் தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு வகையான கட்டணங்களை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கிறோம். மக்கள் 5ஜி சேவைக்கு மாறுவது 4ஜி கட்டணத்தைப் பொறுத்து அமையும் எனக் கூறியுள்ளார்.
மேலும் நடப்பு நிதியாண்டில் 4ஜி சேவைக்கான கட்டணம் 3வது முறையாக உயர்த்தப்படலாம் என்பதால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 5ஜி சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 5G technology, Jio, Telecommunications