Home /News /technology /

இந்தியாவில் 5ஜி சேவைகளின் விலை நீங்கள் எதிர்ப்பார்ப்பதை விட குறைவாக இருக்கும் - காரணம் தெரியுமா.?

இந்தியாவில் 5ஜி சேவைகளின் விலை நீங்கள் எதிர்ப்பார்ப்பதை விட குறைவாக இருக்கும் - காரணம் தெரியுமா.?

 5ஜி

5ஜி

5G services in India | 5G டேட்டா சேவை எப்பொழுது கிடைக்கும் என்று 5ஜி ஃபோன்கள் வைத்திருக்கும் யூசர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இந்தியாவில் 5g சேவைகளுக்கான ஏலம் சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று, ஜியோ உள்ளிட்ட பல மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களும் ஏலத்தில் சேவைகளை எடுத்துள்ளனர். இந்நிலையில் மிக விரைவில் 5ஜி சேவை இந்தியாவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ, அதே அளவுக்கு கொஞ்சம் பயமும் இருக்கிறது. ஏற்கனவே, மொபைல் நெட்வொர்க்குகள் தங்களின் சேவைகளுக்கான விலையை அதிகரித்து வந்துள்ள நிலையில், 5ஜி சேவையின் விலை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4ஜியை விட, 5ஜி டேட்டாவின் வேகம் 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவ்வளவு வேகமான டேட்டா சேவை எப்பொழுது கிடைக்கும் என்று 5ஜி ஃபோன்கள் வைத்திருக்கும் யூசர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு அதிவேக டேட்டாவிற்கு எவ்வளவு விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. 5ஜி சேவைகளை பயன்படுத்தும் அளவுக்கு ஸ்மார்ட்ஃபோன்களும் ஏற்கனவே சந்தையில் அறிமுகமாகி அதிக அளவில் விற்பனையாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 5ஜி சேவைக்கான காஸ்ட் மிகவும் அதிகமாக இருக்கும் என்று பல அறிக்கைகள் வெளியாகி இருந்தாலும், தற்பொழுது நீங்கள் எதிர்பார்ப்பதை விட 5ஜி டேட்டா பயன்படுத்துவதற்கான செலவு குறைவுதான் என்று செய்தி வெளியாகி உள்ளது. 5ஜி டேட்டாவை அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பாளர்களும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அளவுக்கு புதிய திட்டங்களை அமல்படுத்த உள்ளனர்.



5ஜி சேவைக்கான விலை குறைவாக இருந்தால் மட்டுமே பல தரப்பில் இருக்கும் யூசர்களை இந்த சேவை சென்றடைய முடியும் என்பதை ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தியாளர்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர். ரியல் மீ உள்ளிட்ட பல பிராண்டுகள் 5ஜி சேவை வழங்கும் நெட்வொர்க் நிறுவனங்களுடன் கூட்டு சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read : குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.

ஏர்டெல் 5ஜி சேவையுடன் கூட்டு சேர்ந்துள்ள ரியல் மீ மொபைல் நிறுவனம் சி சீரிஸ் 5ஜி போனை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது. எனவே இது போன் தயாரிப்பாளர்களுக்கும் டெலிகாம் சேவை வழங்குபவர்களுக்கும் என்று இரண்டு தரப்புக்கு மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். டெல்கோ நிறுவனம் 5ஜி சேவையை வழங்கத் தொடங்கிய உடனே இந்த 5ஜி போன் மற்றும் 5ஜி டேட்டா பிளான் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



ஏற்கனவே கூகுளின் விலை குறைவான 5ஜி ஸ்மார்ட்போனுடன் ஜியோ இணைந்து சந்தையில் புதிய ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது என்பதை பற்றி அனைவருமே அறிவோம். இதைப் பற்றிய செய்தியும் விரைவில் உறுதிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : உங்களிடம் இருக்கும் 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி சேவைகள் பயன்படுத்த முடியுமா?

ஸ்மார்ட்ஃபோன்களும் விலை அதிகமாக இருக்கிறது, அதில் பயன்படுத்தக்கூடிய 5g டேட்டா திட்டங்களும் விலை அதிகமாக இருக்கிறது. ஆனால் இவை இரண்டும் ஒன்று சேர்ந்து ஒரு பேக்கேஜாக வழங்கப்படும் பொழுது பல தரப்பில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் குறைவான விலையில் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



இந்தியாவில் முதலில் மெட்ரோ நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் நாடு முழுவதும் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் ஜியோ சேவையை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும், வோடபோன் ஐடியா, ஏர்டெல் ஆகிய முன்னணி நெட்வொர்க் நிறுவனங்கள் 5ஜி நெட்வொர்க்கை இந்தியா முழுவதும் அதிகப்பட்சம் இரண்டு ஆண்டுக்குள் நிறுவுவதாக தெரிவித்துள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: 5G technology, India, Technology

அடுத்த செய்தி