Home /News /technology /

5ஜி சேவை பொருளாதார வளர்ச்சிக்கும், இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்திற்கும் உதவும் - எரிக்சன் எம்.டி.!

5ஜி சேவை பொருளாதார வளர்ச்சிக்கும், இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்திற்கும் உதவும் - எரிக்சன் எம்.டி.!

nitin bansal

nitin bansal

5G services in India | வரவிருக்கும் 5ஜி சேவைகள் மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலம் குறித்தும் நிதின் பன்சால் (எம்டி, இந்தியா & ஹெட்-நெட்வொர்க்ஸ், சவுத்ஈஸ்ட் ஏசியா, ஓசியானியா அன்ட் இந்தியா, எரிக்சன்) நெட்வொர்க் 18க்கு பேட்டி அளித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
ஒவ்வொரு மொபைல் போன் யூசரின் மனதிலும் உள்ள கேள்வி - இந்தியாவில் 5ஜி சேவை எப்போது தொடங்கப்படும் என்பதே. தொலைத்தொடர்புத் துறையின் (DoT) கூற்றுப்படி, 5ஜி சேவைகள் இந்த 2022 ஆண்டிலேயே கிடைக்கும். முதற்கட்டமாக 5ஜி சேவைகள் முதலில் 13 இந்திய நகரங்களில் வழங்கப்படும் என்றும், அதை தொடர்ந்து மீதமுள்ள நகரங்களில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, சென்னை, லக்னோ, புனே, டெல்லி மற்றும் மும்பை ஆகிய 13 நகரங்களில், முதற்கட்டமாக 5ஜி சேவை வழங்கப்படும் என தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்தும், வரவிருக்கும் 5ஜி சேவைகள் மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலம் குறித்தும் நிதின் பன்சால் (எம்டி, இந்தியா & ஹெட்-நெட்வொர்க்ஸ், சவுத்ஈஸ்ட் ஏசியா, ஓசியானியா அன்ட் இந்தியா, எரிக்சன்) நெட்வொர்க் 18க்கு பேட்டி அளித்துள்ளார். அதில் சில முக்கியமான புள்ளிகள் இதோ:

நமக்கு ஏன் 5ஜி தேவை?

5ஜி இந்தியாவின் அடுத்த கட்ட பொருளாதார வளர்ச்சியை திறக்கும். ஆரம்பத்தில், 5ஜி ஆனது, தகவல் தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு, நுகர்வோரின் வளர்ந்து வரும் டேட்டா தேவைகளை மிகவும் திறமையாக நிர்வகிக்க உதவும். மேம்படுத்தப்பட்ட மொபைல் பிராட்பேண்ட் பற்றிய எரிக்சனின் பொருளாதார ஆய்வின்படி, தற்போதைய 4ஜி ஐ விட 5ஜி க்கு ஒரு ஜிகாபைட்டுக்கு 10 மடங்கு குறைந்த செலவே ஆகும்.

5ஜி ஆனது டேட்டா தேவைகளை மிகவும் திறமையாக நிர்வகிக்க ஆபரேட்டர்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், அவர்களுக்கான புதிய வருவாய் வழிகளை திறக்கவும் உதவும். உலகம் முழுவதும், 5ஜி ஏற்கனவே நான்காவது தொழில்துறை புரட்சியை 'கிக்ஸ்டார்ட்' செய்துவிட்டது. இந்தியாவில் உற்பத்தி, சுகாதாரம், எரிசக்தி மற்றும் பயன்பாடுகள், பொது பாதுகாப்பு, வாகனம், கல்வி மற்றும் பல துறைகளில் 5ஜி சேவைகள் டிஜிட்டல் மாற்றத்தை செயல்படுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.எவ்வளவு விரைவில் வாடிக்கையாளர்கள் 5ஜி க்கு மாறத் தயாராக இருக்கிறார்கள்? அவர்கள் 5ஜி-க்காக பிரீமியம் செலுத்த தயாராக இருக்கிறார்களா?

எரிக்சன் நுகர்வோர் ஆய்வக ஆய்வின்படி, 40 மில்லியன் ஸ்மார்ட்போன் யூசர்கள், நாட்டில் 5ஜி அறிமுகமான முதல் வருடத்திலேயே பிரீமியம் செலுத்தும் விருப்பத்துடன் 5ஜி ஐப் பயன்படுத்துவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Also Read : ஏர்டெல் கஸ்டமர் கேர் என்ற பெயரில் மோசடி - உஷார்

இந்தியாவில் வலுவான 5ஜி இணைப்பை உருவாக்க என்னென்ன திட்டங்கள் தேவைப்படும்?

ஒரு வலுவான 5ஜி இணைப்புக்கு நியாயமான விலையில் அனைத்து பேண்ட்களிலும் போதுமான ஸ்பெக்ட்ரம் தேவைப்படும். 5ஜி தொழில்நுட்பம் இந்தியாவிற்கு கொண்டு வரும் 'நீண்ட கால நன்மைகளை' கருத்தில் கொண்டு, இது ஒரு முக்கியமான உள்கட்டமைப்பாகவும், 'டிஜிட்டல் இந்தியா' பார்வையை உணரக்கூடிய அடித்தளமாகவும் பார்க்கப்பட வேண்டும்.

Also Read : உங்க ஃபேஸ்புக் அக்கவுண்ட் 'ஹேக்' செய்து விட்டார்களா? உடனே Recover செய்வது எப்படி?

5ஜி ஏலத்தை இந்தியா மிகவும் தாமதப்படுத்துகிறதா?

5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட பிற சந்தைகளைப் பார்க்கும்போது, ​​இந்தியா பின்தங்கியிருக்கவில்லை. 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஸ்பெக்ட்ரம் ஏலம் திட்டமிடப்பட்டிருப்பதால், ஆண்டின் இரண்டாம் பாதியில் 5ஜி வெளியீட்டை எதிர்பார்க்கலாம். நுகர்வோர் பார்வையில், இந்தியாவில் 5ஜி மீதுஅதிக ஆர்வம் உள்ளது. வலுவான மொபைல் பிராட்பேண்ட் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலில் அரசாங்கத்தின் கவனம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால் , 5ஜி தொழில்நுட்பத்தின் நீண்டகால சமூக-பொருளாதார பலனைப் பெற இந்தியா தயாராக உள்ளது.எரிக்சனின் உலகளாவிய 5ஜி செயல்பாடுகள் மற்றும் நுகர்வோரின் 'ரெஸ்பான்ஸ்' பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

121 லைவ் நெட்வொர்க்குகளின் வழியாக எங்களுக்கு கிடைத்துள்ள உலகளாவிய 5ஜி செயல்பாட்டு அனுபவமானது, இந்திய ஆபரேட்டர்கள் 4ஜி இலிருந்து 5ஜிக்கு தடையின்றி பரிணமிக்க உதவும். பிற சந்தைகளில் நாங்கள் பயன்படுத்தும் சில உலகளாவிய பயன்பாட்டு நிகழ்வுகள் இந்தியாவில் மாற்றியமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படலாம்.

Also Read : ஆபத்து!! உடனே கூகுள் குரோம் அப்டேட் பண்ணுங்க... மத்திய அரசு எச்சரிக்கை!

டிஜிட்டல் உருமாற்றப் பயணத்தில் எரிக்சன் நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களை எவ்வாறு ஆதரிக்கிறது?

இந்தியாவில், எங்கள் ஆபரேட்டர் மற்றும் அகடெமிக் கூட்டாளர்களுடன் நாட்டிற்குத் தொடர்புடைய பல 5ஜி பயன்பாட்டு நிகழ்வுகளை நாங்கள் சோதித்து உருவாக்கி வருகிறோம். வெற்றிகரமாக நடத்தப்பட்ட பல்வேறு 5ஜி கள சோதனைகள் நாட்டில் 5ஜி சேவைகளை வெளியிடுவதற்கான களத்தை அமைத்துள்ளன. இதன் விளைவாக, பாரதி ஏர்டெல் மற்றும் எரிக்சன் இந்தியாவின் முதல் 5ஜி லைவ் நெட்வொர்க்கை ஹைதராபாத் மற்றும் குருகிராம் மற்றும் மானேசரில் சோதனை செய்து காட்டியது.

Also Read : வாட்ஸ் அப் அக்கவுண்ட்கள் திருட கூடும் - ஜாக்கிரதை!

இதை தொடர்ந்து இந்தியாவின் முதல் 5ஜி கிராமப்புற சோதனை டெல்லி/என்சிஆர் புறநகரில் உள்ள பாய்பூர் பிராமணன் கிராமத்தில் நடைபெற்றது. மேலும் எரிக்சன் நிறுவனம் வோடாபோன் ஐடியா லிமிடெட் (VIL) உடன் கூட்டு சேர்ந்து, நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு சுகாதார சேவையை அடைய உதவும் 5ஜி-யின் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இந்த சோதனையின் ஒரு பகுதியாக, தொலைத்தொடர்பு நிறுவனம் கடந்த நவம்பரில் 4 ஜிபிபிஎஸ் வேகத்தை வெளிப்படுத்தியது.
Published by:Selvi M
First published:

Tags: 5G technology, India, Technology

அடுத்த செய்தி