Home /News /technology /

5ஜி தொழில்நுட்பத்தால் 65% உயர்ந்துள்ள வேலை வாய்ப்பு..!

5ஜி தொழில்நுட்பத்தால் 65% உயர்ந்துள்ள வேலை வாய்ப்பு..!

5ஜி

5ஜி

புதிய தொழில்நுட்பம் நடைமுறைக்கு வரும் போது அதற்கான புதிய சாதனங்கள், சோதனைகள், சாத்தியப்படும் தொழில்நுட்பக் கோளாறுகள், அதை சரி செய்யும் முறைகள், என்று பல வேலைகள் இருக்கும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் 5ஜி தொழில்நுட்பத்தை  புழக்கத்தில் கொண்டு வரும் முயற்சிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்களின் வேலை வாய்ப்புகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இணைய சேவை நிறுவனங்கள், தொலைபேசி நிறுவனங்கள், மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் சென்ற மாத  பணி சேர்க்கை மட்டும் 65 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2022 ஜனவரியில் 5,265 ஆக இருந்த வேலை வாய்ப்புகள் கடந்த ஜூலையில் 8,667 ஆக அதிகரித்துள்ளது.

புதிய தொழில்நுட்பம் நடைமுறைக்கு வரும் போது அதற்கான புதிய சாதனங்கள், சோதனைகள், சாத்தியப்படும் தொழில்நுட்பக் கோளாறுகள், அதை சரி செய்யும் முறைகள், என்று பல வேலைகள் இருக்கும். இதை செய்து சிறப்பான சேவை கொடுக்க வேண்டும் என்பதே பெரு நிறுவனங்களின் நோக்கமாக இருக்கும். இதைச் செய்ய தொழில்நுட்பம் சார்ந்த பணியாட்கள் தேவைப்படுவர்.

இணைய சேவை நிறுவனங்கள்..
சென்ற மாதம் இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடந்தது. ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் பெரும் பங்குகளை அள்ளியது. அதோடு பாரதி ஏர்டெல், வோடபோன், அதானி நிறுவனங்களும் 5ஜி அலைக்கற்றைகளை வாங்கியுள்ளது. பாரதி ஏர்டெல் தனது 5ஜி சேவையை இந்த ஆகஸ்ட் முடிவுக்குள் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜியோ நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப்  பயன்படுத்தி விரைவில் தங்கள் சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதன் 5ஜி கோர் கிளவுட் தொழில்நுட்பத்தைத் தயாரிக்கவும், பல்வேறு முறைகளில், பல்வேறு சாதனங்களில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சோதனைகளை செய்யவும் சிறந்த தொழில்நுட்ப ஆட்களை பணியில் சேர்த்து வருகிறது.

வோடபோன் நிறுவனம் 'ஸ்மார்ட் மொபிலிட்டி' எனப்படும் 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தி செயல்படும் கார் முதலிய வாகன செயல்பாட்டு  சோதனை செய்து வருகிறது. இதற்காக மொபிலிட்டி டெஸ்டிங் ஆட்களை பணியமர்த்தி வருகிறது.

தொழில்நுட்ப சாதன நிறுவனங்கள்..
கைபேசிகள், டேப்லெட்கள், கணினிகள் போன்ற உபகரணங்களில் 5ஜி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் வசதிகளை மேம்படுத்தும் பணி கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. இப்போது 5ஜி சேவை புழக்கத்திற்கு வரும் இறுதி நிலைக்கு வந்துவிட்டதால் சாதனங்களின் தயார்நிலையை உறுதிப்படும் வேலையில் தொழிற்சாதன நிறுவங்கள் இறங்கியுள்ளன.

ஆப்பிள் நிறுவனம் தங்கள் 5ஜி ப்ரோடோகால்கள் சரி பார்க்க ஆர்.எப் சிஸ்டம் வடிவமைப்பாளர்களை பணியமர்த்தி வருகிறது. இவர்கள் 5ஜி மட்டுமல்லாது 6ஜி சேவைகளுக்கும் ஆப்பிள் நிறுவன சாதனைகளை மேம்படுத்தி வருகின்றனர்.

பிரபல நோக்கியா நிறுவனமும் 5ஜி சேவைக்கான தங்கள் ஆய்வகத்தை ஆஸ்திரேலியாவில் அமைத்துள்ளது. அதற்காக பட்டம் பெற்ற  தொழிநுட்ப பணியாட்களை பணியில் சேர்த்து வருகிறது. ஜனவரி 2022 முதல் 6ஜி சேவை பற்றிய ஆய்விற்காக 130 பேரை வேலையில் சேர்த்துள்ளது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: 5G technology, Airtel, Apple iphone, Jio, Job vacancies, Nokia

அடுத்த செய்தி