Home /News /technology /

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது 5G..! அதிவேக இணையம் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது 5G..! அதிவேக இணையம் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

5ஜி தொழில்நுட்பம்

5ஜி தொழில்நுட்பம்

4G உடன் ஒப்பிடும்போது, ​​5G என்பது அதிக திறன் கொண்டது. தற்போது நடைமுறையில் உள்ள 4G சேவையானது ஒரு நொடிக்கு 150 மெகா பைட்ஸ் வரையிலான வேகத்தில் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் 5G சேவையின் டவுன்லோடு ஸ்பீடு நொடிக்கு 10 ஜிகா பைட்ஸ் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
இந்தியாவில் இப்போது திரும்பிய திசையெல்லாம் 5ஜி காய்ச்சல் தீயாய் பரவி வருகிறது. சோசியல் மீடியாவை திறந்தாலே போதும், இந்தியாவிற்கு விரைவில் 5ஜி சேவை கிடைக்க உள்ளதை வரவேற்கும் விதமாகவும், கலாய்க்கும் விதமாகவும் மீம்ஸ்கள் குவிந்து கிடக்கின்றன. இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 4ஜி சேவையை விட பத்து மடங்கு வேகம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

5ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் ஜூலையிலும், வர்த்தகம் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினந்தன்றும் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே 5G நெட்வொர்க் என்றால் என்ன?, அதன் நன்மைகள் என்ன?, யூஸர்கள் அதில் என்ன மாதிரியான விஷயங்களை எதிர்பார்க்கலாம்?, வேகம் மற்றும் செயல்திறன் எப்படி இருக்கும் என பல கேள்விகள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இந்தியா போன்று தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் நாட்டில் 5ஜி சேவைகள் குறித்து பலருக்கும் பல கேள்விகள் எழுவது இயல்பான ஒன்றாக தான் இருக்கும். சமீப காலமாக 5ஜி சேவை குறித்து வலம் வந்து கொண்டிருக்கும் சில கேள்விகளுக்கு இங்கே விடை கொடுத்துள்ளோம்.

5G என்றால் என்ன?

​​5G என்ற வார்த்தையானது அதிவேகமான இணைய சேவை, (மல்டி-ஜிபிபிஎஸ் உச்ச வேகம்), குறைந்த காத்திருப்பு நேரம், அதிக நம்பகத்தன்மை, பெரிய நெட்வொர்க் திறன், அதிகமாக கிடைக்கும் தன்மை மற்றும் ஒரே மாதிரியான லேட்டஸ்ட் தரவு நிலை போன்றவற்றை உள்ளடக்கியது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இப்போதிருக்கும் வேகத்தை விட கூடுதல் வேகத்தில் அப்லோடு மற்றும் டவுன்லோடு உள்ளிட்ட அனைத்தையும் ​​5G மூலம் செய்ய முடியும்.

5G சேவையை லோ-பேண்ட், மிட்-பேண்ட் அல்லது ஹை-பேண்ட் என மூன்று வகைகளாக பிரிக்கலாம். மில்லிமீட்டர் வேவ் 24 ஜிகாஹெர்ட்ஸ் வரை 54 ஜிகாஹெர்ட்ஸ் வரை செயல்படுத்தப்படலாம். இப்போது, ​​லோ-பேண்ட் 5G ஆனது ஜிகாஹெர்ட்ஸ் முதல் 900 ஜிகாஹெர்ட்ஸ் வரையிலான 4G போன்ற அதிர்வெண் வரம்பைப் பயன்படுத்துகிறது. மிட்-பேண்ட் 5G ஆனது 1.7 ஜிகாஹெர்ட்ஸ் முதல் 4.7 ஜிகாஹெர்ட்ஸ் வரையிலான அதிர்வெண்களை பயன்படுத்துகிறது.

மேலும் ஹை-பேண்ட் 5G ஆனது 24-47 ஜிகாஹெர்ட்ஸ் அதிர்வெண்களைப் பயன்படுத்துகிறது. இந்தியாவில் இந்த 5ஆம் தலைமுறை சேவை 20 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் மொத்தம் 72097.85 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலம் விடப்பட உள்ளது.

இந்தியாவில் எந்த 5G பேண்ட் பயன்படுத்தப்படும்?

தற்போது நடைமுறையில் இருக்கும் 4ஜி சேவையை விடவும் 10 மடங்கு வேகமாக சேவை வழங்கும் திறன் கொண்ட 5G தொழில்நுட்ப அடிப்படையிலான சேவைகளை மிட் மற்றும் ஹை பேண்ட் ஸ்பெக்ட்ரம் டெலிகாம் சேவை வழங்குநர்களால் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4G மற்றும் 5G இடையே உள்ள வித்தியாசம் என்ன?

4G உடன் ஒப்பிடும்போது, ​​5G என்பது அதிக திறன் கொண்டது. தற்போது நடைமுறையில் உள்ள 4G சேவையானது ஒரு நொடிக்கு 150 மெகா பைட்ஸ் வரையிலான வேகத்தில் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் 5G சேவையின் டவுன்லோடு ஸ்பீடு நொடிக்கு 10 ஜிகா பைட்ஸ் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் 4G நெட்வொர்க்குகளில் அப்லோடு ஸ்பீடு விநாடிக்கு 50 மெகா பைட்ஸ் என வைத்துக்கொண்டால், 5G நெட்வொர்க்கில்நொடிக்கு 1 ஜிகாபைட்ஸ் வரை அப்லோடு ஸ்பீடு இருக்கும்.

Also read... ஐரோப்பிய ஒன்றியத்தின் நுகர்வோர் நல சட்டங்களை ஏற்க வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு கால அவகாசம்

இந்தியாவில் 4ஜியை விட 5ஜி அதிக விலை கொண்டதாக இருக்குமா?

இந்தியாவில் 5G திட்டங்களின் விலை எப்படி இருக்கும் என்பது பற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஆனால் தற்போது நாம் செலுத்தி வரும் 4G கட்டணங்களை விட, நிச்சயம் 5G சேவைக்கான கட்டணம் அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. உலகிலேயே மலிவான விலைக்கு இணையசேவை வழங்கும் நாடாக இந்தியா உள்ளது, இது எக்காரணம் கொண்டு மாறாது என வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: 5G technology, India

அடுத்த செய்தி