இந்தியாவில் 100 நாட்களில் 5ஜி தொழில்நுட்ப சோதனை! ஹூவே உடனா?

இந்தியா முடிவெடுக்கும் முன்னரே ஹூவே நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் நுழைய விருப்பம் இருப்பதாக அவசரப்படுத்தி வருவது மேலும் பல கேள்விகளை எழச் செய்கிறது.

Web Desk | news18
Updated: June 4, 2019, 4:49 PM IST
இந்தியாவில் 100 நாட்களில் 5ஜி தொழில்நுட்ப சோதனை! ஹூவே உடனா?
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: June 4, 2019, 4:49 PM IST
இன்னும் 100 நாட்களில் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்துக்கான சோதனை ஓட்டம் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் வளர்ந்த நாடுகள் தற்போது 5ஜி தொழில்நுட்ப சோதனையைத் தொடங்கிவிட்டனர். இந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. 5ஜி அலைக்கற்றையைப் பெறப்போகும் மொபைல் நிறுவனங்களுக்கான ஏலமும் இந்த ஆண்டுக்குள் நிறைவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் முன்னணியில் இருக்கும் EE நிறுவனம் 5ஜி பயன்படுத்தத் தயாராகிவிட்டது. இதேபோல், ஐக்கிய நாடுகளின் வோடஃபோன் நிறுவனமும் வருகிற ஜூலை முதல் 5ஜி பயன்படுத்த ஆயத்தமாகி உள்ளதாக அறிவித்துள்ளது.


வளர்ந்த நாடுகள் மட்டும் கையில் எடுத்துள்ள தொழில்நுட்பத்தை இந்தியாவும் தற்போது கையில் எடுத்துள்ளது. இந்தியாவின் ட்ராய், 20 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை ஏலம் விட உள்ளது. இதில் ஒரு மெகாஹெர்ட்ஸ் 492 கோடி ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய ஹூவே வரும் எனக் கூறப்பட்டதற்கே சர்வதேச அளவில் கடுமையான எச்சரிக்கை அறிவிப்புகள் பிரிட்டனை நோக்கிப் பாய்ந்தன. இந்தியாவிலும் ஹூவே தான் முன்னெடுக்குமா என்ற கேள்வி உள்ளது.

இந்தியா முடிவெடுக்கும் முன்னரே ஹூவே நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் நுழைய விருப்பம் இருப்பதாக அவசரப்படுத்தி வருவது மேலும் பல கேள்விகளை எழச் செய்கிறது.

Loading...

மேலும் பார்க்க: ’ஹூவே மீது கவனம் இருக்கட்டும்’- பிரிட்டனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
First published: June 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...