Home /News /technology /

5G Cars: 5ஜி வசதி கொண்ட கார்கள் உலக அளவில் ஏற்படுத்த கூடிய மாற்றங்கள்...

5G Cars: 5ஜி வசதி கொண்ட கார்கள் உலக அளவில் ஏற்படுத்த கூடிய மாற்றங்கள்...

5ஜி வசதி கொண்ட கார்கள்

5ஜி வசதி கொண்ட கார்கள்

தற்போது 5ஜி இணைய வசதி பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது. அமெரிக்கா, ஐரோப்பா, சீனா போன்ற நாடுகளில் 5ஜி வசதி கொண்ட கார்களை பலர் வாங்கி வருகின்றனர். தற்போது இந்நாடுகளில் விற்கப்படும் கார்களில் பெரும்பாலும் 5ஜி வசதி சேர்க்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்கவும் ...
வாழ்நாளில் எப்படியாவது ஒரு காரை வாங்கி விட வேண்டும் என்கிற கனவு பலருக்கும் இருக்கும். குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களுக்கு கார் என்பது நீண்ட கால எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இதில் கார் பிரியர்களுக்கு காரை பற்றிய பல கனவுகள் இருக்கும். கார் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும், இந்த புது வசதி அதில் செய்திருக்க வேண்டும், அந்த பழைய வசதி இருக்க கூடாது போன்ற எண்ணற்ற தேர்வுகள் இருக்க கூடும். தொழில்நுட்பம் அதிக அளவில் வளர்ச்சியடைய தொடங்கியதில் இருந்தே கார்களில் புத்தம் புதிய வசதிகளை உற்பத்தியாளர்கள் கொண்டு வந்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக தற்போது 5ஜி இணைய வசதி பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது. அமெரிக்கா, ஐரோப்பா, சீனா போன்ற நாடுகளில் 5ஜி வசதி கொண்ட கார்களை பலர் வாங்கி வருகின்றனர். தற்போது இந்நாடுகளில் விற்கப்படும் கார்களில் பெரும்பாலும் 5ஜி வசதி சேர்க்கப்பட்டு வருகிறது. இது வாகன உற்பத்தியாளர்களின் விற்பனைக்கு பிறகு வாகனங்களின் மதிப்பை மேம்படுத்த உதவுகிறதை. மேலும் இது எஞ்சிய வாகன மதிப்புகளின் கணக்கீட்டை மாற்றக் கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கினறன.

இதன்படி அனைத்து கார்களிலும் 5ஜி வசதி பொருத்தப்பட்டவுடன், வாகன உற்பத்தியாளர்கள் வருடாந்தர உத்தரவாதச் செலவுத் தவிர்ப்பில் $40 பில்லியன் டாலர் பெற முடியும் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நுகர்வோர்கள் ஆண்டு குத்தகை அல்லது கடன் சேமிப்பில் $32 பில்லியன் டாலரை சேமிக்க முடியும்; இதன் விற்பனையின் போது கார் டீலர்கள் வருவாயில் சுமார் $24 பில்லியன் டாலர் வருடாந்திர மேம்பாட்டில் சேமிப்பார்கள்.

ALSO READ |  பனாமா பேப்பர்ஸ் வழக்கு : விசாரணைக்கு நேரில் ஆஜராக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன்

ஸ்ட்ராடிஜி அனலிட்டிஸ் (Strategy Analytics) என்கிற சந்தை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய புதிய ஆய்வின்படி, மாசுகளை வெளியிடும் வாகனங்களை குறைப்பதன் மூலம் எதிர்பார்க்கப்படும் சமூக ஆதாயங்களை விடவும் இது அதிகமாகவும், அதற்கு மேலும் இதில் அதிகம் சேமிக்கலாம் என்று கூறியுள்ளது. கார்களில் உள்ள 5ஜி வசதி இணைப்பின் உதவியுடன், சுய-ஓட்டுநர் வாகன இயக்கத்தை எளிதாக்கலாம். மேலும் சாலையில் கார்களின் மோதல்களைத் தவிர்க்கவும் இது உதவும்.

வருங்காலங்களில் 5ஜி வசதி இணைக்கப்பட்ட கார்களின் விற்பனை வருவாய் அதிகரிக்கும். இதன்மூலம் விற்பனை பங்கும் பல மடங்காக உயரும். அந்த வகையில், குத்தகை விடப்படும் கார்கள், புதிய கார்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தை மதிப்பில் இதனால் அதிக தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்று ஸ்ட்ராடிஜி அனலிட்டிஸ் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் ரோஜர் லான்க்டாட் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ |  பூண்டு பயிரிட இரண்டரை லட்சம் செலவு செய்து பாதி விலை கூட கிடைக்கவில்லை- விவசாயி என்ன செய்தார் தெரியுமா?

எல்லாவற்றிலும் 5ஜி வசதி இணைக்கப்பட உள்ளதால், பெரிய மாற்றங்கள் இனி வரும் நாட்களில் உண்டாகும். இதன்மூலம் பல தரப்பினருக்கு அதிக லாபமும் ஏற்பட உள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: 5G technology, Automobile, Car

அடுத்த செய்தி