இன்று நாம் வாங்கும் பல பொருட்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்தவையாகவே உள்ளது. குழந்தைகளுக்கு வாங்கும் துணிகள் முதல் பெரியவர்களுக்கு தேவைப்படும் மொபைல், லேப்டாப் போன்றவை வரை பெரும்பாலான பொருட்களை இன்று ஆன்லைனில் வாங்கி வருகிறோம். பல பொருட்கள் ஆன்லைனில் கிடைத்தாலும் அவற்றில் எது குறைந்த விலையில் தரமாக இருக்கிறதோ அதையே மக்கள் விரும்பி வாங்குவார்கள். தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வரவுள்ளதால் பலர் ஆன்லைன் ஷாப்பிங் செய்து கொண்டிருப்பீர்கள்.
உங்களுக்கு தேவையான பொருட்களை குறைவான விலையில் சிறந்த தள்ளுபடிகளுடன் வாங்குவதற்கு கூகுள் நிறுவனம் சில எளிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக கூகுள் குரோம் பிரவுசரை பயன்படுத்தி வாங்குவோருக்கு இது முற்றிலும் பயன்படும் வகையில் உள்ளது. இந்த வசதிகள் சில ஆண்ட்ராய்டு போன்களில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஐபோன் யூசர்களுக்கு இன்னும் சில வாரங்களில் இந்த அப்டேட் வெளிவர உள்ளது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விலை குறைப்பு டிராக்கிங் :
கூகுள் குரோமில் தற்போது வரவுள்ள புதிய வசதியின்படி, நீங்கள் ஷாப்பிங் செய்கின்ற பொருளின் விலை குறைப்பு விவரங்களை அதன் டேப்பை திறந்தவுடன் வரும்படியாக கொண்டு வரப்பட உள்ளது. இந்த வசதி தற்போது அமெரிக்காவை சேர்ந்த ஆண்ட்ராய்டு போன் யூசர்களுக்கு மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் ஐபோன் யூசர்களுக்கு இந்த சிறப்பம்சம் வரவுள்ளது என்று கூகுள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆஃப்லைன் ஷாப்பிங் :
நீங்கள் ஏதாவது கடைக்கு சென்று ஷாப்பிங் செய்யும்போது, அங்கு சென்று உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் குரோமை திறந்து கொள்ளவும். பிறகு அட்ரஸ் பாரில் கேமிரா ஐகானை டேப் செய்து கூகுள் லென்ஸை ஓபன் செய்து அந்த புராடக்ட்டை ஸ்கேன் செய்யுங்கள். இதன் மூலம் அதே போன்ற புராடக்ட் ஆன்லைனில் இருந்தால் குரோமில் உங்களுக்கு வரிசையாக காட்டப்படும். இதில் சிறந்ததை நீங்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
கார்ட்டில் உள்ளவை :
நீங்கள் எந்த தளத்தை பார்வையிட்டாலும் அதில் உங்களுக்கு கூடுதலாக 'Your Carts' என்கிற வசதியை கூகுள் குரோமில் புது அப்டேட்டாக சேர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள விண்டோஸ் மற்றும் மேக் ஓஎஸ் பயன்படுத்துவோருக்கு இந்த கூகுள் குரோம் அப்டேட் தற்போது செயல்படும்.
பாஸ்வேர்டு :
தற்போது ஒருசில ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு தனித்துவமான, பாதுகாப்பு கொண்ட பாஸ்வேர்டுகளை குரோம் உதவியுடன் உருவாக்க முடியும். மேலும் தங்களது எதிர்கால பயன்பாட்டிற்கு லாக்-இன் விவரங்களை சேமித்து கொள்ளவும் முடியும்.
Also read... ஜனவரியில் அறிமுகமாகும் புதிய Samsung Galaxy S21 FE ஸ்மார்ட்ஃபோன்!
செக்-அவுட் :
மிக எளிதான முறையில் உங்களின் ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தை முடிக்க, உங்களின் முகவரி மற்றும் பேமண்ட் விவரங்களை ஆட்டோஃபில் செய்யும் வசதியும் குரோமில் வரவுள்ளது. இதன்படி பேமெண்ட் செக்-அவுட் செய்யும் நேரத்தில் உங்களின் பில்லிங் அட்ரஸ் மற்றும் ஷிப்பிங் விவரங்களை தானாக அந்த தளத்தின் மூலம் எடுத்துக்கொள்ளப்படும். மேலும் புதிய பக்கத்தை திறக்கும்போது, அதை சேமிக்க வேண்டுமா என்று குரோமில் இருந்து உங்களுக்கு பாப்-அப் மெசேஜ் வரும். இப்படி உங்கள் வசதிக்கேற்ப இதை சேமித்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Google