ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

எல்லாமே அடடே ரகம்தான்! வாட்ஸ்அப்பில் வரப்போகும் 5 அசத்தல் அப்டேட்டுகள்.!

எல்லாமே அடடே ரகம்தான்! வாட்ஸ்அப்பில் வரப்போகும் 5 அசத்தல் அப்டேட்டுகள்.!

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

WhatsApp Update | வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் சௌகரியம் கருதி மேலும் புதிய வசதிகளை வாட்ஸ்அப் அறிமுகம் செய்கிறது. அவற்றை இப்போது தெரிந்து கொள்வோம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

காலையில் எழுந்ததும் ஒரு குட் மார்னிங் மெசேஜ் அனுப்புவதில் தொடங்கி, இரவு தூங்கும் முன்பாக குட் நைட் மெசேஜ் அனுப்புவது வரையில் நமது குடும்ப உறவுகள், நண்பர்கள், சக அலுவலக ஊழியர்களோடு தொடர்பில் இருக்க வாட்ஸ் அப் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இதில், அடுத்து வரக் கூடிய அப்டேட்டுகளை நாம் முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்டால், அந்த வசதிகளை பயன்படுத்தி நமக்கு தொடர்புடையவர்களை அசத்தலாம் அல்லவா!

ஏற்கனவே சாட்டிங் வசதிகள், எமோஜி, கேளிக்கை வசதிகள் என பல அப்டேட்டுகளை வாட்ஸ்அப் வழங்கியிருக்கிறது. அத்துடன் பயனாளர்களின் தனியுரிமை பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இத்தகைய சூழலில், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் சௌகரியம் கருதி மேலும் புதிய வசதிகளை வாட்ஸ்அப் அறிமுகம் செய்கிறது. அவற்றை இப்போது தெரிந்து கொள்வோம்.

1. ஸ்கிரீன்சாட் பிளாக்கிங் :

ஸ்க்ரீன்சாட் எடுப்பதை பிளாக் செய்யும் வசதி ஒன்றை வாட்ஸ்அப் மேம்படுத்தி வருகிறது. தற்போதைய சூழலில், பீட்டா யூசர்களுக்கு மட்டும் இந்த வசதி கிடைத்து வருகிறது. அனைத்துப் யூசர்களுக்கும் இந்த வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது. நண்பர்கள் மற்றும் இதர நபர்களுடன், ஒருமுறை மட்டும் பார்வையிடும் வகையில் புகைப்படங்களை நாம் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்கள் அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொள்வதை தடுப்பதற்கான பிளாக்கிங் வசதியை வாட்ஸ்அப் வழங்குகிறது.

2. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் ஹைப்பர் லிங்க் வைக்கலாம் :

இதுவரையில் உங்கள் மனவோட்டத்தை பிரதிபலிக்கும் புகைப்படம், வீடியோ போன்றவற்றை மட்டுமே வாட்ஸ்அப் ஸ்டேடஸ் பகுதியில் பகிர்ந்து வந்த நீங்கள், இனி இணையதள முகவரிகளையும் பகிர்ந்து கொள்ளலாம். தொடர்புடைய லிங்க்-ஐ கிளிக் செய்ததும் ஓப்பன் ஆகும் வகையில் இந்த வசதி வர இருக்கிறது.

ரீல்ஸ், யூடியூப் வீடியோ செய்பவர்கள், தங்கள் ப்ராடக்டுகளை ப்ரோமோஷன் செய்பவர்களுக்கு இது பயனுள்ளதாக அமையும்.

Also Read : இந்த ஆப்களால் உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்டிற்கு ஆபத்து - மெட்டா எச்சரிக்கை

3. வாட்ஸ்அப் ப்ரீமியம் :

வாட்ஸ்அப் பிசினஸ் யூசர்களுக்கு ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கும் நடவடிக்கையை வாட்ஸ்அப் மேற்கொண்டு வருகிறது. டெல்கிராம் ப்ரீமியம் போலவே, இதிலும் வாடிக்கையாளர்கள் செலுத்தும் கட்டணத்திற்கு ஏற்ப கூடுதல் வசதிகள் கிடைக்க இருக்கின்றன. உதாரணத்திற்கு 4 டிவைஸ்களை நீங்கள் ஒரே அக்கவுண்டுடன் இணைத்து கொள்ளலாம்.

4. பிசினஸ் டூல் டேப் :

வாட்ஸ்அப் பிசினஸ் வாடிக்கையாளர்களுக்கு ஹோம் பேஜ் பக்கத்தில் புதிய டேப் ஓப்பன் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட இருக்கிறது. இடதுபக்கம் உள்ள கேமரா டேப்-ஐ நீக்கிவிட்டு, பிசினஸ் டூல்ஸ் தொடர்பான அனைத்தையும் செட்டிங்ஸ் மெனு செல்லாமல் தேர்வு செய்து கொள்ளும் ஒருங்கிணைந்த டேப் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய இருக்கிறது.

Also Read : ரூ.15,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் பட்டியல்.! 

5. வாட்ஸ்அப் சைடுபார் மற்றும் ஸ்டேட்டஸ் ரிப்ளை :

இதுவரையிலும் நண்பர்கள் வைத்த ஸ்டேடஸ்களுக்கு நீங்கள் பதில் அனுப்ப முடியாது என்ற நிலை இருந்தது. இனி நீங்கள் ரிப்ளை செய்வதற்கான ஆப்சன் வர இருக்கிறது. ஆனால், இது டெஸ்க்டாப் ஆப்-பில் மட்டுமே பயன்படும். அதேபோன்று நமது ஃபோனில் ரிப்ளை செய்வதைப் போன்ற அதே வசதி டெஸ்க்டாப் யூசர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. ஸ்டேட்டஸ், செட்டிங்ஸ், ஃபுரொபைல் போன்றவற்றை எளிதாக தேர்வு செய்யும் வகையில் சைட் பார் வர இருக்கிறது.

Published by:Selvi M
First published:

Tags: Technology, Whatsapp Update