பண்டிகை காலம் வந்தாலே ஏராளமான பொருட்களை தள்ளுபடி விலையில் விற்க தொடங்கி விடுவார்கள். அதற்கேற்ப நாமும் எண்ணற்ற பொருட்களை வாங்கி குவித்து விடுவோம். தொழிற்நுட்ப வளர்ச்சியினால் ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. ஆனால் சில சமயங்களில் போலியான வெப்சைட்களிலோ அல்லது நமது அக்கவுண்ட்டை வேறொருவர் பயன்படுத்துவது போன்ற பிரச்சனைகளை நாம் சந்திக்க கூடும்.
கொரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து 600% அளவுக்கு சைபர் குற்றங்கள் பெருகியுள்ளது. எனவே பாதுகாப்பான முறையில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய, கூகுள் நிறுவனம் சில முக்கிய வழிமுறைகளை கண்டறிந்துள்ளது. அவை என்னென்ன என்பதை இனி தெரிந்து கொள்வோம்.
தனித்துவமான பாஸ்வேர்டை உருவாக்குங்கள் :
நம்மில் பலர் செய்யும் பொதுவான தவறு இது தான். அதாவது நாம் உருவாக்கும் பாஸ்வேர்டு மிக எளிமையானதாக இருக்க நமது பெயர், பிறந்த தேதி, பிடித்தமான ஒன்றின் பெயர் போன்றவற்றை பாஸ்வேர்டாக வைப்போம். இதை ஹேக்கர்கள் எளிதில் கண்டுபிடித்து விடுவதால், எப்போதும் 8 எழுத்துக்களுக்கு மேல் நம்பர் மற்றும் ஸ்பெஷல் கேரக்டர்களை கொண்டு பாஸ்வேர்டு உருவாக்குங்கள்.
பாஸ்வேர்டு மேனேஜர் பயன்படுத்துங்கள் :
எல்லா வகையான பாஸ்வேர்டுகளையும் சேமித்து, எளிதில் பயன்படுத்த பாஸ்வேர்டு மேனேஜரை பயன்படுத்து நல்லது. இதனால் கடினமான பாஸ்வேர்டுகளையும் உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் உபயோகம் செய்யலாம். ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்டுகளை டைப் செய்வதற்கு பதில், பாஸ்வேர்டு மேனேஜர் பயன்படுத்தி ஒரு கிளிக் மூலம் இதை எளிதாக்குங்கள்.
மொபைல் எண் அல்லது இமெயில் முகவரி சிறந்தது :
உங்களின் அக்கவுண்ட்டில் எதாவது சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் நடந்தால் அவற்றை உடனே உங்களுக்கு தெரிவிக்க, உங்களின் மொபைல் நம்பர் அல்லது இமெயில் முகவரி நீங்கள் பயன்படுத்த கூடிய வெப்சைட் அல்லது ஆப்களின் நிறுவனங்களுக்கு தேவைப்படும். எனவே பாதுகாப்பு பயன்பாட்டிற்காக இவற்றை எப்போதும் செட் அப் செய்து வைத்து கொள்ளுங்கள்.
2 ஸ்டெப் வெரிஃபிகேஷன் :
பாதுகாப்பான முறையில் உங்களின் அக்கவுண்ட்டை பயன்படுத்த 2 ஸ்டெப் வெரிஃபிகேஷன் என்கிற வசதியை பயன்படுத்துங்கள். இதனால் உங்களின் பாஸ்வேர்டு மற்றும் செக்கியூரிட்டு கீ மிக பாதுகாப்பான முறையில் இருக்கும். நீங்கள் பயன்படுத்தும் வெப்சைட்களில் இந்த வசதி இருந்தால் அவசியம் இதை செட் அப் செய்திடுங்கள். உங்களின் மொபைல் நம்பர் அல்லது இமெயில் அக்கவுண்ட்டை இந்த 2 ஸ்டெப் வெரிஃபிகேஷன் முறைக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.
Also read... தீபாவளி ஸ்பெஷல் - உங்களுக்கு பிடித்தவர்களுக்கு இந்த ‘கிஃப்ட்ஸ்’ கொடுத்து அசத்துங்கள்!
பாதுகாப்பான வெப்சைட்டா?
ஒவ்வொரு முறையும் நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் முன்னர் அந்த வெப்சைட் பாதுகாப்பானதா என்பதை அறிய "https" என்பது எந்த வெப்சைட்டின் யூ.ஆர்.எல்-இல் இருக்க வேண்டும். வெறும் "http" என இருந்தால் அது பாதுகாப்பான வெப்சைட் கிடையாது. மேலும் நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்து முடித்த பிறகு உங்கள் கார்ட்டில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். ஏனெனில் https இல்லாத சில பாதுகாப்பற்ற வெப்சைட்களில் ஹேக்கர்கள் கூடுதலான பொருட்களை உங்களின் கார்ட்டில் சேர்த்து விடுவர். இதனால் நீங்கள் அவற்றிற்கு பணம் செலுத்தும்படி ஆகி விடலாம்.
மேற்சொன்ன வழிமுறைகளை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் ஆன்லைன் ஷாப்பிங் செய்யுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Online shopping