Home /News /technology /

ஒரே நாளில் 250 பில்லியன் டாலர்களை இழந்த ஃபேஸ்புக் - முக்கியமான 6 காரணங்கள்!

ஒரே நாளில் 250 பில்லியன் டாலர்களை இழந்த ஃபேஸ்புக் - முக்கியமான 6 காரணங்கள்!

Facebook

Facebook

யூஸர்களிடையே ஃபேஸ்புக் பயன்பாடு குறைந்துள்ளது, ஆப்பிள் ஆப் கண்காணிப்பின் வெளிப்படைத் தன்மை, டிக்டாக் உடனான கடினமான போட்டி, மெட்டாவர்ஸ் எனப்படும் மெய்நிகர் உலகை கட்டமைக்க அதிக செலவு செய்வது, கூகுள் ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் வரும் வருவாயில் பெரும்பங்கை எடுத்துக்கொள்வது, மாநிலங்களின் புது சட்டங்கள் ஆகியவை பங்குகள் சரிய காரணமாக கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
ஃபேஸ்புக் நிறுவனத்தின் மெட்டா ஒரே நாளில் 26 சதவீதம் குறைந்து வரலாறு காணாத அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மெட்டா என மாற்றப்பட்ட பிறகு வெளியான முதல் காலாண்டு வருவாய் அறிக்கை நேற்று வெளியான நிலையில், அதன் பங்குச்சந்தை மதிப்பில் 26 சதவீதம் சரிந்து, ஒரே நாளில் 251 பில்லியன் டாலரை இழந்துள்ளது. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என சோசியல் மீடியா நெட்வொர்க்கை கையில் வைத்துள்ள ஜாம்பவான் நிறுவனமான மெட்டா அதன் பங்குச்சந்தை மதிப்பில் கடும் இழப்பை சந்தித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக மெட்டா நிறுவன சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் தனிப்பட்ட முறையில் தனது நிகர மதிப்பில் இருந்து 24 சதவீதம், அதாவது 29 பில்லியனை இழந்துள்ளார். அதுமட்டுமின்றி ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கணிப்பின் படி நிகழ் நேர உலக பணக்காரர்கள் பட்டியலிலும் மார்க் ஜுக்கர்பெர்க் டாப் 10 இடத்தை இழந்துள்ளார்.

மெட்டா நிறுவனம் ஒரே நாளில் இழந்த 251 பில்லியன் டாலர் என்பதை எளிமையாக புரியும் வகையில் பார்ப்பது என்றால், இந்த தொகையை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தலா 34.25 டாலர் வீதம் பிரித்து கொடுக்கலாம். ஒரு டாலரின் எடை ஒரு கிராம் என வைத்துக்கொண்டால், 250 பில்லியன் என்பது 551,155,655 பவுண்ட் ஆகும். பூமியின் மிகப்பெரிய உயிரினமான ஆப்பிரிக்க யானையின் எடை கூட 42,396 பவுண்ட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சரிவுக்கு பிந்தைய மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 84.8 பில்லியன் டாலர் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா பில்லியனர்களான முகேஷ் அம்பானி, கெளதம் அதானி ஆகியோருக்கு அடுத்தபடியாக 12வது இடத்திற்கு மார்க் தள்ளப்பட்டுள்ளார்.

காலாண்டு கணிப்பின் படி, ஃபேஸ்புக் நிறுவனம் முதன் முறையாக தனது தினசரி பயனாளர்களின் எண்ணிக்கை மற்றும் எதிர்பார்த்ததை விட குறைவான விளம்பர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. டிக்-டாக், யூ-டியூப் போன்ற நிறுவனங்களுடன் அதிகரித்த போட்டி, மற்றும் ஆப்பிள் நிறுவனம் புதிதாய் அறிமுகம் செய்த தனிநபர் தகவல் பாதுகாப்பு மாற்றத்தால் Meta நிறுவனம் விளம்பர வருவாயை இழந்தது பங்கு வீழ்ச்சியடைய காரணமாக கூறப்படுகிறது.

Also read... இந்தியர்களின் 1.32 கோடி வாட்ஸ்அப் கணக்குகள் 6 மாதங்களில் நீக்கம்

மெட்டா நிறுவனம் சரிவை சந்திக்க 6 காரணங்கள் கணிக்கப்பட்டுள்ளன.

யூஸர்களிடையே ஃபேஸ்புக் பயன்பாடு குறைந்துள்ளது, ஆப்பிள் ஆப் கண்காணிப்பின் வெளிப்படைத் தன்மை, டிக்டாக் உடனான கடினமான போட்டி, மெட்டாவர்ஸ் எனப்படும் மெய்நிகர் உலகை கட்டமைக்க அதிக செலவு செய்வது, கூகுள் ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் வரும் வருவாயில் பெரும்பங்கை எடுத்துக்கொள்வது, மாநிலங்களின் புது சட்டங்கள் ஆகியவை பங்குகள் சரிய காரணமாக கூறப்படுகிறது. நேற்று மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 322 பில்லியன் டாலரில் இருந்து 237 பில்லியன் டாலராக சரிந்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Facebook

அடுத்த செய்தி