முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / மொபைல் பேட்டரிகள் எதனால் தீப்பிடிக்கிறது ? 5 பொதுவான காரணங்கள் இங்கே..

மொபைல் பேட்டரிகள் எதனால் தீப்பிடிக்கிறது ? 5 பொதுவான காரணங்கள் இங்கே..

காட்சி படம்

காட்சி படம்

ஸ்மார்ட்போன்களின் பேட்டரிகள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை வரம்பு வரையில் இருக்கும் போது நன்றாக இருக்கும்.

  • Last Updated :

சமீபத்திய காலமாக மொபைல்களின் பேட்டரி திடீரென வெடிப்பது அல்லது தீ பிடித்து எரிவதன் காரணமாக மக்கள் தீக்காயமடைவது என சில அசம்பாவித நிகழ்வுகள் நடந்து வருகின்றன. மொபைல் வெடித்த சில அசம்பாவித நிகழ்வுகளின் போது சிலர் தங்கள் உயிரையும் இழந்தனர். சமீபத்தில் கூட விமான பயணி ஒருவரின் ஸ்மார்ட்போன் நடுவானில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பலரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஸ்மார்ட்போன்களின் பேட்டரி வெடித்து தீப்பிடிப்பதற்கான சில பொதுவான காரணங்களை இங்கே பார்க்கலாம்..

அதிக ஹீட்டான சூழலில் ஸ்மார்ட் போன்களை நீண்ட நேரம் வைப்பது..

ஸ்மார்ட்போன்களின் பேட்டரிகள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை வரம்பு வரையில் இருக்கும் போது நன்றாக இருக்கும். கடுமையான வெப்பநிலையில் அடிக்கடி மொபைலை வெளிப்படுத்தினால், அப்பழக்கம் பேட்டரிக்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்தும். நேரடி சூரிய ஒளி அல்லது மூடிய காரில் நீண்ட நேரம் இருந்தால் ஸ்மார்ட்போன் நன்றாக ஹீட்டாகி விடும். அதிக வெப்பம் காரணமாக பேட்டரியில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஆக்ஸிஜன் போன்ற வாயுக்கள் உருவாகிறது. இவை ஸ்மார்ட்போன் வெடித்து தீப்பிடிக்க காரணமாக இருக்கலாம்.

ஓவராக சார்ஜ் செய்வது அல்லது சார்ஜ் செய்யும் போது பயன்படுத்துவது..

பல ஸ்மார்ட்போன் யூஸர்கள் தங்கள் மொபைல்களை இரவு தூங்கும் போது சார்ஜ் செய்ய துவங்கினால் காலை எழுந்த பின் தான் மொபைலை எடுப்பார்கள். இது சில நேரங்களில் பேட்டரி அதிகம் ஹிட்டாக வழிவகுக்கும். மேலும் நீண்ட நாட்களாக ஓவர் நைட் சார்ஜ் செய்யம் பழக்கம் கொண்டவர்களின் ஸ்மார்ட்போன் பேட்டரிக்கு சேதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். சில சமயங்களில் ஷார்ட் சர்க்யூட் காரணமாக வெடிப்பும் ஏற்படலாம். அதே போல சார்ஜ் போட்டு கொண்டே மொபைலை பயன்படுத்தும் பழக்கமும் மொபைலுக்கு ஆபத்துகளை ஏற்படுத்த கூடியது.

also read : கொளுத்தும் வெயிலில் உங்கள் ஸ்மார்ட் ஃபோன் சூடாகாமல் தடுப்பது எப்படி.?

தேர்ட்-பார்ட்டி சார்ஜிங் கேபிள் மற்றும் அடாப்டரை பயன்படுத்துவது..

எப்போதும் ஒரிஜினல் கேபிள் மற்றும் அடாப்டருடன் உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யவே நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். வேறு எந்த லோக்கல் அல்லது பிராண்டின் சார்ஜரை பயன்படுத்தினாலும் உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி பாதிக்கப்படலாம். தேர்ட்-பார்ட்டி சார்ஜிங் கேபிள்கள் மற்றும் அடாப்டர்கள் உங்கள் டிவைஸை ஹீட்டாக்குவதோடு, பேட்டரியில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட வழிவகுக்கும்.

battery health status

also read : 5ஜி அட்வான்ஸ்டு: இது 5ஜியில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது? 6ஜி-க்கு இதுதான் அடித்தளமா?

உடைந்த ஸ்மார்ட்போன்..

ஆம், உங்கள் ஸ்மார்ட்போன் மோசமாக உடைந்திருந்தால் கூட வெடிக்க அல்லது தீப்பிடிக்க வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் ஸ்மார்ட்போனின் மோசமான ஹேண்ட்லிங், அதனுள் பேட்டரியையும் சேர்த்தே சேதப்படுத்தும். மொபைலின் மேல் ஆகும் சேதம் பேட்டரியின் மெக்கானிக்கல் அல்லது கெமிக்கல் கூறுகளை பாதிக்கலாம். இதனால் ஏற்படும் ஷார்ட் சர்க்யூட் மற்றும் ஓவர் ஹீட் போன்ற நிகழ்வுகள் மொபைல் வெடிக்க அல்லது தீப்பிடிக்க காரணமாகலாம்.

சிப்செட்டின் ஓவர்லோடிங்..

கேமிங் மற்றும் மல்டி டாஸ்கிங் செய்ய கூடிய மொபைல்கள் விரைவாக ஹீட் ஆகலாம். ஹீட்டாவதற்கு முக்கிய காரணம் அதிகம் வேலை செய்யும் ப்ராசஸர். டிவைஸ்களை பாதுகாக்க அவற்றின் உற்பத்தியாளர்கள் கூலிங் மெக்கானிஸம்ஸ்களை சேர்த்தாலும் கூட, உங்கள் மொபைல் மிகவும் சூடாக இருப்பதை கண்டால் உடனடியாக சில நிமிடங்கள் அதற்கு ரெஸ்ட் கொடுங்கள்.

First published:

Tags: Smartphone