தூங்கும் போது கூட நம் படுக்கையில் கூடவே இருக்கும் மிக முக்கியமான கேஜெட்டாக இருக்கிறது ஸ்மார்ட் போன்கள். ஆனால் சில காரணங்களால் அவ்வப்போது ஸ்மார்ட் போன்கள் வெடித்து சிதறும் செய்திகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் சிறந்த பிராண்டாக அறியப்படும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் OnePlus Nord 2 5G ஸ்மார்ட் போன் வெடித்ததாக வெளியான செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது போன்ற சம்பவங்கள் பெரும் தீ காயங்கள் சமயத்தில் உயிர் சேதத்தையும் ஏற்படுத்த கூடும் என்பதால் மக்கள் கவனமாக இருப்பது முக்கியம்.
உங்கள் ஸ்மார்ட் போன் ஏன் ஹீட்டாகிறது.?
ஸ்மார்ட் போன்கள் வெடிக்க பல காரணங்கள் உள்ளன. பேட்டரி ஹெல்த் அல்லது ஸ்மார்ட் போனின் ஒட்டுமொத்த வெப்பநிலை போன்ற பல விஷயங்கள் காரணங்களாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஸ்மார்ட்போனின் பேட்டரியே வெடிக்கிறது. இதற்கு பெரும்பாலும் பேட்டரி ஹீட்டாவது அல்லது அதிகரித்த வெப்பநிலை காரணமாகிறது. ஹீட்டிங் பிரச்சனை ஸ்மார்ட் போன் பேட்டரி வெடிப்பிற்கு மட்டும் வழிவகுப்பதில்லை. மாறாக பேட்டரி விரைவில் தீருவது, ஃபோர்ஸ் ஷட்டவுன் அல்லது தீவிர வெப்பநிலை காரணமாக போனின் CPU உருகுதல் போன்ற பிற சிக்கல்களையும் ஏற்படுத்தலாம். இவை அனைத்துமே உங்கள் ஸ்மார்ட் போனை நிரந்தரமாக ரிப்பேராக்க கூடும் என்பதால் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் உங்கள் ஸ்மார்ட் போன் ஓவர் ஹீட்டாவதை தவிர்ப்பது எப்படி என்பதை பார்க்கலாம்..
நேரடி சூரிய ஒளியில் வைப்பதை தவிர்க்கவும்:
உங்கள் ஸ்மார்ட் போன் ஹீட்டாவதை தடுப்பதற்கான எளிய மற்றும் தெளிவான வழி, நேரடி சூரிய ஒளியில் உங்கள் மொபைலை வைப்பதையோ அல்லது பயன்படுத்துவதையோ தவிர்த்து கூலான இடத்தில் வைப்பது மற்றும் பயன்படுத்துவது ஆகும்.
ஒரிஜினல் மற்றும் சர்டிஃபிகேட்டட் சார்ஜர்களை பயன்படுத்துங்கள்:
உங்கள்
ஸ்மார்ட் போனை சார்ஜி செய்ய தரம் குறைந்த அல்லது தவறான சார்ஜரை பயன்படுத்தினால், அது அதிக வெப்பத்தை உண்டாக்கி உங்கள் மொபைல் பேட்டரியை சேதப்படுத்தும். மொபைலுடன் வரும் சார்ஜர் அடாப்டர் வீணாகி விட்டால், நன்கு தெரிந்த ஒரிஜினல் பிராண்டுகள் மற்றும் சர்டிஃபிகேட்டட் சார்ஜர்களை மட்டுமே வாங்கி பயன்படுத்துங்கள்.
also read : வாட்ஸ் அப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த அப்டேட் விரைவில் வருகிறதாம்... குஷியில் பயனர்கள்...
சேதமடைந்த மொபைல்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்:
பிஸிக்கலாக சேதமடைந்த போன்களை தொடர்ந்து பயன்படுத்துவது அவை வெடிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க செய்யும். வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட ஸ்மார்ட் போன்களை பொறுத்தவரை, அதிக கரண்ட் வயர்லெஸ் சார்ஜிங் காயில்கள் மூலம் சுற்றுகின்றன. இந்த காயில்கள் பேக் பேனலில் இருக்கும். எனவே அப்பகுதி சேதமடைந்தால் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட வழிவகுக்கும்.
Also read : இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள Realme 9 4G மொபைல் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
அதிகமாக சார்ஜ் செய்ய வேண்டாம்..
உங்கள் மொபைல் முழுமையாக சார்ஜான பின் அதை டிஸ்கனெக்ட் செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். முழுமையாக சார்ஜ் ஏறிய பின்னும் தொடர்ந்து சார்ஜரில் கனெக்ட் செய்திருப்பது மொபைலை ஹீட்டாக்கும்.
போன் மீதான லோடை குறைக்கவும்..
லொக்கேஷன் சர்விஸ் மற்றும் ப்ளூடூத் போன்றவற்றை தேவை இல்லாத போது ஆஃப் செய்து வைப்பது வெப்பநிலையை குறைக்க உதவும். அதே போல ஸ்கிரினின் பிரைட்னஸை குறைவாக வைப்பது பேட்டரியின் சுமையை குறைக்கிறது. அதிகம் பயன்படுத்தாத ஆப்ஸ்களை அன்இன்ஸ்டால் செய்வது
பேட்டரி திறனை மேம்படுத்துவதோடு, மொபைல் ஹீட்டை குறைக்கவும் உதவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.