இன்று உலகம் முழுவதும் முக்கிய பேசுபொருளாக மாறி இருப்பது ஓபன் ஏஐ-ஆல் வடிவமைக்கப்பட்ட சாட் ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு தான். இந்த செயற்கை நுண்ணறிவுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆதரவும், பலர் இதற்கு எதிராகவும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சாட் ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவின் மூலம் மனிதர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் இதிலிருந்து பெற முடியும். வரலாற்று ஆய்வுகள், கணக்கீடுகள், கவிதைகள், கதைகள் போன்ற அனைத்து விஷயங்களையும் இந்த செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் நாம் தெரிந்து கொள்ள முடியும்.
மேலும் இது செயல்படும் விதம் கிட்டத்தட்ட மனிதர்கள் எப்படி தங்களுக்குள் பேசி கொள்வார்களோ அது போலவே இருக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர். கேள்விக்கு மேல் கேள்வி கேட்கும் போது அதை புரிந்து கொள்ளும் வகையிலும், தன் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அதனை ஒப்புக்கொள்ளும் வகையிலும் இந்த செயற்கை நுண்ணறிவு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையிலேயே இந்த சாட்ஜிபிடி மட்டும்தான் இப்படிப்பட்ட செயல்களை செய்யும் முதல் செயற்கை நுண்ணறிவு அல்ல. சாட்சி ஜிபிடி போலவே ஏற்கனவே பல்வேறு செயற்கை நுண்ணறிவுகள் நமக்கு எளிதில் அணுகும் வகையில் உள்ளன.
சாட் சோனிக் ( chat sonic) : சாட் ஜிபிடி போலவே அனைத்து விதங்களிலும் நன்றாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் சாட்சோனிக் எனப்படும் செயற்கை நுண்ணறிவு. கிட்டத்தட்ட அனைத்து விதங்களிலும் சாட் ஜிபிடியை முறியடிக்கும் விதத்தில் சாட்சோனிக் வடிவமைப்பு உள்ளது. கூகுளின் தரவுகளை பயன்படுத்தி நாம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலை இது அளிக்கிறது. மேலும் மிக எளிதாக வாய்ஸ் கமான்ட் மூலமாகவே நாம் சாட் சோனிக்கை தொடர்பு கொள்ளலாம். அந்த செயற்கை நுண்ணறிவு குரல் மூலமே நமக்கு பதிலை அளிக்கும்.
Read More : உங்க மொபைலை பாதுகாக்கும் BharOS..? சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுவது என்ன?
டீப்எல் ரைட்(DeepL write) :
டீப்எல் ரைட் எனப்படும் செயற்கை நுண்ணறிவானது எழுதுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு வடிவமைப்பாவும். இதனை பயன்படுத்தி உங்களால் ஆங்கிலம் மற்றும் ஜெர்மானிய மொழியில் நீங்கள் விரும்பிய அனைத்தையும் எழுதிக் கொள்ள முடியும். இலக்கணம் மட்டுமின்றி மற்றும் பல பிழைகளையும் திருத்தங்களையும் சுட்டிக்காட்டி நீங்கள் விரும்பிய வடிவத்தில் உங்களால் கட்டுரைகளை உருவாக்க முடியும். ஆனால் இது சோதனை நிலையில்தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை இலவசமாகவும், அனைவரும் பயன்படுத்தும் வகையிலும் சேவையை அழித்து வருகிறது.
யூ சாட்(You chat) : யூசாட் எனப்படுவது கிட்டத்தட்ட சர்ச்என்ஜினை போல் செயல்படும் ஒரு அமைப்பு. இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி செயல்படுகிறது. இணையத்தில் உள்ள சிறந்த தகவல்களை ஒன்று சேர்த்து உங்களுக்கு இது முடிவுகளை அளிக்கும். இதன் சிறப்பம்சமே இதை பயன்படுத்த எந்தவித விளம்பரங்களும் காட்டப்படுவதில்லை என்பதும் மிகவும் பாதுகாப்பாகவும் இருப்பதும் ஆகும். மேலும் இதனை பயன்படுத்த நீங்கள் எந்தவித கட்டணத்தையும் செலுத்த வேண்டியது இல்லை.
சாக்ரடிக்(Socratic) : குழந்தைகள் தங்கள் வீட்டு பாடங்களை செய்வதற்கு இந்த செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறது. கணிதம், அறிவியல் போன்ற அனைத்து படங்களின் சந்தேகங்களையும் நாம் தீர்த்து கொள்ள முடியும். மேலும் ஆசிரியர்களின் உதவியுடன் ஒவ்வொரு பாடத்திற்கும் தெளிவான விளக்கங்களும் இதில் அளிக்கப்படுகின்றன.
சின்சில்லா (ChinChilla) : இது சாட் சிபிடி விட மிக அதிக அளவில் வசதிகளையும் பயன்களையும் நமக்கு வழங்குகிறது. டீப் மைன்ட்-ஆல் உருவாக்கப்பட்ட இந்த செயற்கை நுண்ணறிவு Gopher போலவே உருவாக்கப்பட்டாலும், அதனை விட சாக்ரடிக் 4மடங்கு அதிக தரவுகளை நமக்கு அளிக்கிறது. .
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Technology