• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • இந்த தீபாவளியில் மிஸ் பண்ணக்கூடாத “சிறந்த 5 ஸ்மார்ட் வாட்சுகள்” - குறைந்த விலையில் வாங்கலாம்!

இந்த தீபாவளியில் மிஸ் பண்ணக்கூடாத “சிறந்த 5 ஸ்மார்ட் வாட்சுகள்” - குறைந்த விலையில் வாங்கலாம்!

Smart Watches

Smart Watches

ஆஃபர் விலையில், இந்த தீபாவளிக்கு வாங்க கூடிய சிறந்த 5 ஸ்மார்ட் வாட்சுகளை இங்கு பார்க்கலாம்.

  • Share this:
தீபாவளியை முன்னிட்டு ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற அனைத்து நிறுவனங்களும் அதிரடி ஆஃபர்களை அறிவித்து வருகின்றது. இதில் ஆப்பிள்,சாம்சங்,மொப்வொய் மற்றும் ஃபிட்பிட் ஆகிய ஸ்மார்ட் வாட்சுகளை தீபாவளி சலுகையாக மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆஃபர் விலையில், இந்த தீபாவளிக்கு வாங்க கூடிய சிறந்த 5 ஸ்மார்ட் வாட்சுகளை இங்கு பார்க்கலாம்.

சாம்சங் கேலக்சி வாட்ச் 4 :

நீங்கள் சாம்சங் நிறுவனத்தின் பிரியராக இருந்தால் ‘சாம்சங் கேலக்சி வாட்ச் 4’ வாங்கலாம். இதில் இதய துடிப்பு கண்காணிப்பு, SpO2 கண்காணிப்பு மற்றும் தூக்க பகுப்பாய்வு, எலக்ட்ரோ கார்டியோகிராம் (ECG) மற்றும் மாதவிடாய் சுழற்சிகளை பகுப்பாய்வு செய்வது என ஸ்மார்ட் வாட்சுகளுக்கான எல்லா அம்சங்களுடன் வருகிறது. இது 44 மி.மீ புளூடூத் வசதியை பெற்றுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் வாட்ச் சாம்சங் பே மற்றும் கூகுள் பே சேவைகளையும் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ. 26,999 ஆகும். அமேசான் ஆஃபரில் ரூ.2000 குறைத்து ரூ.24,997 க்கு பெற்றுக் கொள்ளலாம்.

Also read:  ஒரு ரூபாய் அனுப்பினால் ரூ.51 கிடைக்கும் – வாட்ஸ்அப் அறிவித்துள்ள கேஷ்பேக் ஆஃபர் விவரம் இதோ!

ஆப்பிள் வாட்ச் எஸ்இ :

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் ஆன எஸ்இயை (SE) அமேசான் பண்டிகை கால விற்பனையில், மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. தீபாவளி ஆஃபரில் மிஸ் பண்ணக்கூடாத சிறந்த ஸ்மார்ட் வாட்ச் இதுவாகும். 44 மி.மீ வேரியண்ட்டில் ஜிபிஎஸ் வசதியுடன் வரும் இந்த வாட்ச், தீபாவளி சலுகையில் ரூ.27,900க்கு வாங்கலாம். இதேபோல 40 மி.மீ வடிவில் ஸ்பேஸ் கிரேவில் வரும் வேரியண்ட்டை ரூ. 33,900 லிருந்து 25,900க்கு விற்பனை செய்கிறது அமேசான்.

ஓப்போ வாட்ச் :

நீங்கள் ஒரு நல்ல ‘ WearOS ‘ ஸ்மார்ட் வாட்சினை தேடுகிறீர்கள் என்றால், இது உங்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் ஆக இருக்கும். இது ஆப்பிளின் ஸ்மார்ட் வாட்ச் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 3100 SoC, 5 ATM நீர்-எதிர்ப்பு போன்ற பலவசதிகளை கொண்டுள்ளது. 41 மி.மீ அளவுள்ள இந்த ஸ்மார்ட் வாட்ச் ரூ.14,990 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டினை வைத்து வாங்கும் போது 10 சதவீதம் தள்ளுபடி பெறலாம்.

Also read: 2022ல் வெளியாகும் ஹூண்டாய் க்ரெட்டா கார் – என்ன ஸ்பெஷல்?

ஃபிட்பிட் வெர்சா 3 :

ஃபிட்பிட் வெர்சா 3 ஃபிட்னஸ் பிரியர்களுக்கு என்று சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த ‘ஃபிட்பிட் வெர்சா 3’. இது அமேசானில் ரூ. 17,849க்கு கிடைக்கிறது. இந்த வாட்சில் ஜிபிஎஸ், டிஜிட்டல் அசிஸ்டண்ட் , பில்ட் இன் ஸ்பீக்கர், ஃபிட்பிட் பே, 1.58-இன்ச் AMOLED டிஸ்ப்ளே ஆகிய வசதிகளை கொண்டிருக்கிறது. மேலும் தூக்க கண்காணிப்பு, இதய துடிப்பு கண்காணிப்பு, SpO2 கண்காணிப்பு, தோல் வெப்பநிலை கண்காணிப்பு, மாதவிடாய் சுகாதார கண்காணிப்பு மற்றும் உடற்பயிற்சிக்கான புள்ளிவிவரங்கள் என ஆல் இன் ஒன் ஸ்மார்ட் வாட்ச் ஆக இருக்கிறது.

டிக்வாட்ச் இ3 :

டிக்வாட்ச் இ3 (TicWatch E3) குவால்காம் ஸ்னாப்டிராகன் 4100 சிப்புடன் வருகிறது. தீபாவளியை முன்னிட்டு ரூ.4,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது. அமேசானில் இதனை 15,999க்கு வாங்கி கொள்ளலாம். தற்போது வரவிருக்கும் ‘Wear OS 3’ அப்டேட்டுடன் இந்த வாட்ச் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: