• HOME
 • »
 • NEWS
 • »
 • technology
 • »
 • 4GB RAM, 12K விலை - HONOR 20i vs Realme3 - எந்த போன் வாங்கலாம்?

4GB RAM, 12K விலை - HONOR 20i vs Realme3 - எந்த போன் வாங்கலாம்?

 • Last Updated :
 • Share this:
  12K விலை மதிப்பு கொண்ட பிரிவில் 4GB RAM கொண்ட HONOR 20i மற்றும் Realme3 பகிரங்கமாக போட்டியிடுகின்றன.  உங்கள் தேர்வு என்ன?

  மார்க்கெட் நிலவரம் நாளுக்குள் நாள் மாறிக்கொண்டே வருகிறது, எனவே அதிலிருந்து சரியான ஒன்றை பெறுவது என்பது சவாலாக உள்ளது. ஒவ்வொரு மொபைல் நிறுவனமும் அதன் தனித்துவமான மார்க்கெட்டிங் உத்தி மூலம், அதன் பெயரை பொதுமக்கள் மத்தியில் பிரபலப்படுத்த முயற்சிக்கிறது.

  மொபைல்போன் நிறுவனங்கள் மார்க்கெட்டில் தங்களுக்கென்று ஒரு நிலையான இடத்தை தக்கவைத்துக்கொள்ள சிறந்த தொழில்நுட்ப அம்சங்களை மிகக் குறைவான விலைகளில் வழங்கி வருகின்றன. கூடுதலாக, விவரக்குறிப்புகள் மற்றும் யுனிக் பேக்கேஜிங் மூலம் கேஜெட் வடிவமைப்பு ஆகிய இரண்டும் மொபைல் நிறுவனத்தின் பிராண்ட் இமேஜிக்கு விரும்பிய வெயிட்டேஜை வழங்குகின்றன.  இன்று, 4GB RAM கொண்ட HONOR 20i மற்றும் Realme 3 pro மொபைல் போன்கள் எங்களிடம் உள்ளன. இவை இரண்டும் எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன என்பதை நாம் பார்க்கப்போகிறோம். வாருங்கள் பார்க்கலாம்.
  HONOR மற்றும் Realme – இந்த இரண்டு பிராண்டுகளும் தங்களின் தனித்துவமான நம்பிக்கைகள் மற்றும் மார்க்கெட்டிங் உத்திகள் உடன் குறைவான விலையில் ஒரு சிறந்த டீலை வழங்குவதன் மூலம் சாத்தியமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளனர்.

  ஒரு நம்பமுடியாத விலையில் கேஜெட் கிடைக்கும் போது யார் வேண்டாம் என சொல்வார்கள். எனவே இதைப் பற்றி மக்கள் பரப்பரப்பாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கேள்வி என்னவென்றால், இரண்டு மொபைல் போன்களில் எது 12,000 ரூபாய் விலையில் கிடைக்கிறது? கூறுவது கடினம், ஏனென்றால் மொபைல் மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தை தக்கவைத்துக்கொள்ள இரண்டும் தீவிரமாக போட்டியிடுகின்றன.

  டிசைன் & டிஸ்பிளே
  டிஸ்பிளே மற்றும் டிசைன் அடிப்படையில் பார்க்கும் போது, இரண்டு போன்களும் வாட்டர் டிராப் FHD+ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளன. HONOR 20i ஒரு 15.77 cm (6.21-inch) FHD+ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது மற்றும் Realme 3 pro 16 cm (6.3-inch) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இரண்டு போன்களின் பேனல் தரமும் அளவும் கிட்டதட்ட ஒரேமாதிரியானவை. ஆனால், 8.3mm தடிமன் மற்றும் 172 grams எடை கொண்ட Realme 3 Pro உடன் ஒப்பிடும் போது HONOR 20i, 7.95mm தடிமன் மற்றும் வெறும் 164 grams எடையுடன் மிகவும் இலகுவாகவும் எடைக் குறைவானதாகவும் உள்ளது.  HONOR 20i, கூடுதலாக, அதன் கிரேடியண்ட் பேக் மற்றும் கலர் ஆப்ஷன்கள் உடன் பார்ப்பதற்கு மிக ஸ்டைலிஷ் ஆகவும், பிரம்மாண்டமாகவும் உள்ளது. லைட் பேட்டர்ன் டூயலிட்டி டிசைன் மற்றும் ஸ்பீட்வே பேட்டர்ன் லுக்ஸ் கொண்ட Realme 3 Pro தன் முந்தைய மாடல்களுடன் ஒப்பிடும் போது சற்று மந்தமாக உள்ளது. கலர்கள் அடிப்படையில் பார்க்கும்போது, HONOR 20i மிட்நைட் பிளாக், ஃபாண்டம் ரெட், ஃபாண்டம் ப்ளூ கலர்களில் வருகிறது. அதேவேளையில், Realme 3 லைட்னிங் பர்பிள், நைட்ரோ ப்ளூ, மற்றும் கார்பன் கிரே கலர்களில் வருகிறது.

  ஹார்டுவேர்
  HONOR 20i மொபைல் 2.2GHz octa-core Kirin 710 சிப்செட் ஆல் இயக்கப்படுகிறது மற்றும் GPU Turbo 2.0 ஆல் பூர்த்தி செய்யப்படுகிறது. அதேவேளையில், Realme 3 pro மொபைல் Adreno 616 GPU உடன் 2.2GHz Snapdragon 710 AIE புராசஸர் ஆல் இயக்கப்படுகிறது. HONOR 20i மொபைல் 4GB RAM வகையில் கிடைக்கிறது, அதேசமயம் Realme 4+64GB/ 6+64GB/ 6+128GB என மூன்று வகைகளில் கிடைக்கிறது. ஒட்டுமொத்தத்தில், இரண்டு மொபைல் போன்களும் உங்களுக்குச் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகின்றன மற்றும் உங்கள் அன்றாட பணிகளை தடையின்றி செய்ய உதவுகின்றன.

  கேமரா
  மொபைல் போன்களில் கேமரா ஒரு இன்றியமையாத பகுதி மற்றும் அதை யாராலும் புறக்கணிக்க முடியாது. படம் பிடிக்கும் போது அனைவருமே அழகாக தோற்றமளிக்க விரும்புவர், எனவே ஒருவர் சிறந்த லென்சுகள் பொருத்தப்பட்ட மொபைல் போன்களை கொண்டிருப்பது அவசியம். எனவே கேமரா என்று வரும்போது, Realme 3 Pro மொபைலைக் காட்டிலும் HONOR 20i சிறந்ததாக உள்ளது, ஏனெனில் இது ஒரு ட்ரிபிள் கேமரா செட்அப்பை கொண்டுள்ளது. இது ஒரு 24-மெகாபிக்சல் பிரைமரி கேமராவையும், ஒரு 8-மெகாபிக்சல் வைடு-ஆங்கில் கேமராவையும், மற்றும் 2-மெகாபிக்சல் டெப்த் சென்சாரையும் கொண்டுள்ளது. இருப்பினும், Realme 16 Mp பிரைமரி சென்சார் மற்றும் ஒரு 5 MP செகண்டரி டெப்த்-சென்சிங் கேமரா உடன் டூயல் கேமரா செட்அப்பை கொண்டுள்ளது. அப்ஃபிரண்ட்-யில், HONOR 20i மொபைல் ஹையர் 32MP செல்ஃபி கேமராவை பெறுகிறது, அதேசமயம் Realme 3 Pro மொபைல் 25MP ஃப்ரண்ட்-ஃபேஸிங் சென்சாரைக் கொண்டுள்ளது.

  மற்ற கேமரா அம்சங்களான AI-எனபில்டு கேமராக்கள், லோ லைட் கேப்சர்ஸ், போட்ரேட் மோட், பியூடிஃபிகேஷன், போன்ற மற்றும் பல அம்சங்கள் இரண்டு மொபைல் போன்களிலும் உள்ளன., ஆனால் HONOR 20i மொபைலில் உள்ள சூப்பர்நைட் மோட் குறைவான வெளிச்சத்திலும் சிறப்பாக படம் பிடிக்கிறது மற்றும் இதன் சூப்பர் வைட் ஆங்கில்ஸ் உங்களுக்கு 120 டிகிரி FOV-ஐத் தருகிறது.

  பேட்டரி மற்றும் OS
  HONOR 20i மொபைல் 3,400mAh பேட்டரி லைஃப் உடன் வருகிறது, அதேசமயம் Realme Pro 3 மொபைல் 4,045mAh பேட்டரி லைஃபைக் கொண்டுள்ளது. HONOR மொபைலின் EMUI 9.1 கஸ்டம் OS, மல்டிஃபோல்டு மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் அனுபவத்தை மேம்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, HONOR 20i மொபைலில் உள்ள பேட்டரி மேனேஜ்மென்ட் செயல்பாடு உங்கள் மொபைல் போனை ஒரு நாளுக்கும் மேலாக செயல்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது, எனவே இது Realme 3 Pro யின் 045mAh பேட்டரியுடன் சுலபமாக போட்டியிட முடியும். மற்ற சிறந்த அம்சங்களாவன AI மேம்படுத்தப்பட்ட அழைப்புகள், AI விஷன், AI திரை அங்கீகரிப்பான் மற்றும் TUV Rheinland மூலம் சான்றழிக்கப்பட்ட ஐ கேர் ஆகியவை.
  இரண்டு போன்களும் ஆன்ட்ராய்டின் தற்போதைய OS-Pie-யில் இயங்குகின்றன.
  ஆனால் UI பார்வையில், HONOR-யின் EMUI ஆனது Color OS ஐ மிஞ்சுகிறது, ஏனெனில் இது ஸ்கிரோல் செய்வதற்கு எளிதானது மற்றும் விரைவானது.

  விலை:
  இரண்டு மொபைல் போன்களும் (4GB வகை) Amazon மற்றும் Flipkart-யின் ஆன்கோயிங் சலுகையில் ரூ 11,999 க்கு கிடைக்கின்றன. HONOR 20i, கூடுதலாக, 128GB மெமரியை வழங்குகிறது, அதேசமயம் Realme 3 Pro வெறும் 64GB மெமரியை வழங்குகிறது. HONOR 20i 512GB வரைக்குமான எக்ஸ்பேன்டபிள் மெமரியையும் Realme 3 256GB வரைக்குமான எக்ஸ்பேன்டபிள் மெமரியையும் வழங்குகிறது.

  HONOR 20i மற்றும் Realme 3 இரண்டும் ஸ்பெஷிஃபிகேஷன் சோதனையை மிஞ்சிவிட்டன. சிறந்த அம்சங்களை வழங்குவதால் HONOR 20i ஒரு சிறந்த ஸ்மார்ட்போனாக இருக்கும் என நாங்கள் எண்ணுகிறோம். Realme 3 உடன் ஒப்பிடும் போது HONOR 20i சிறந்த காரணங்களுடன் கணிசமான அளவில் முன்னோக்கி உள்ளது. இது பார்ப்பதற்கு ஸ்டைலிஷ் ஆகவும், சிறந்த கேமரா உள்ளக அமைப்புகள், அதிக மெமரி, சிறந்த UI போன்ற பயனர் எதிர்பார்க்கும் சிறந்த அம்சங்களையும் கொண்டுள்ளது.
  இங்கே வாங்கவும்

  20i on Amazon: https://amzn.to/2VIIF0S
  20i on Flipkart: https://bit.ly/2Mken1L

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Yuvaraj V
  First published: