கூகுளுக்குச் சொந்தமான யூடியூப், 2022 இன் முதல் மூன்று மாதங்களில் உலகில் உள்ள வேறு எந்த நாட்டையும் விட அதிகமான வீடியோக்களை இந்தியாவில் நீக்கியுள்ளது. அதன் உலகளாவிய சமூக வழிகாட்டுதல்கள் அமலாக்க அறிக்கையில், இந்தியாவில் 11 லட்சத்திற்கும் அதிகமான வீடியோக்களை அகற்றியுள்ளதாக கூறியுள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக 3,58,134 வீடியோக்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. இவற்றில் 91 சதவீத வீடியோக்கள் யூடியூப் நிறுவனத்தின் மென்பொருள்கள் மூலம் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.
மேலும், மார்ச் 2022 உடன் முடிவடைந்த காலாண்டில் உலகளவில் 44 லட்சம் யூடியூப் சேனல்களை நிறுத்தியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 90 நாட்களுக்குள் நிறுவனத்தின் வழிகாட்டுதல்களை மூன்று முறை மீறினால், சேனல் அகற்றப்படும். இது, அந்தச் சேனலால் பதிவிட்டிருந்த வீடியோக்களையும் அகற்றுவதற்கு வழிவகுக்கிறது.
A
lso Read : இலவசமாக 1GB டேட்டாவை வழங்கும் ஏர்டெல்
ஸ்பேம் மற்றும் தவறான வீடியோக்களை பதிவிடு செய்வதால் சேனல்கள் அகற்றப்படுவதற்கு முதன்மைக் காரணமாகும், இது அனைத்து சேனல் நீக்கத்தில் 90 சதவீதம் காரணமாகும். வீடியோக்களை நீக்கியதில் முக்கிய காரணங்களாக குழந்தை பாதுகாப்பு மற்றும் வன்முறை உள்ளடக்கம் ஆகியவை முறையே 24.9% வீடியோக்களை அகற்றியுள்ளன. மேலும் 16.9% வீடியோக்களில் நிர்வாணம் இருந்ததால் அவை அகற்றப்பட்டன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.