ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

சந்திரன்.. சூரியன்.. 7 நிமிடங்கள் இருளாகும்.. 2023இல் வரவிருக்கும் நான்கு கிரகணங்கள்..!

சந்திரன்.. சூரியன்.. 7 நிமிடங்கள் இருளாகும்.. 2023இல் வரவிருக்கும் நான்கு கிரகணங்கள்..!

2023 கிரகணங்கள்

2023 கிரகணங்கள்

முதல் சூரிய கிரகணம் தான் ஸ்பெஷல் என்று வானியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் என்ன தெரியுமா...பார்ப்போம் !

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஒவ்வொரு ஆண்டு தொடங்கியதும் அந்த ஆண்டில் எத்தனை விடுமுறைகள் என்பதை பார்ப்போம். அதே போல வான நடவடிக்கைகளில் ஆர்வம் உள்ள நபர்கள் வானியலில் இந்த வருடம் என்னென்ன நிகழ்விகள் நடக்க இருக்கிறது என்பதை ஆராய்வர்.

அப்படி பார்க்கும்போது 2023 ஆம் ஆண்டில் மொத்தம் நான்கு கிரகணங்கள் ஏற்படும் என்று அறிக்கைகள் கூறுகின்றன. இரண்டு சூரிய கிரகணங்கள் மற்றும் இரண்டு சந்திர கிரகணங்கள்  இருக்கும்.அதில் முதல் சூரிய கிரகணம் தான் ஸ்பெஷல் என்று வானியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் என்ன தெரியுமா...பார்ப்போம் !

2023 இன் முதல் கிரகணம்

2023 ஆண்டின் முதல் சூரிய கிரகணம்  ஏப்ரல் 20, 2023 அன்று நிகழும். இந்து நாட்காட்டியின்படி, சூரிய கிரகணம் காலை 7.04 மணிக்கு தொடங்கி மதியம் 12.29 வரை தொடரும். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இது ஒரு முழு சூரிய கிரகணத்தின் உச்சம் சுமார் 7 ​​நிமிடங்கள் மற்றும் 32 வினாடிகள் நீடிக்கலாம் என்று கணித்துள்ளனர். அதிகபட்சமாக 12 நிமிடங்கள் மற்றும் 29 வினாடிகள் கூட நீடிக்கலாம்.

இதனால் உலகம் 7.32 நிமிடங்கள் இருளில் மூழ்கலாம் என்று கருதுகின்றனர்.  இந்த சூரிய கிரகணத்தை தெற்கு ஆசியா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல் மற்றும் அண்டார்டிக்காவில் உள்ளவர்களால் பார்க்க முடியும். ஆனால்  இந்தியாவில் காணப்படாது.

இரண்டாவது கிரகணம்

2023 இன் முதல் சந்திர கிரகணம்  முதல் சூரிய கிரகணத்திற்கு 15 நாட்களுக்குப் பிறகு, மே 5, 2023 அன்று  ஏற்படும். இந்து நாட்காட்டியின்படி, சந்திர கிரகணம் இரவு 8.45 மணிக்கு தொடங்கி அதிகாலை 1 மணிக்கு முடிவடையும்.

நாசாவின் தகவலின்படி, இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஆனது ஒரு பெனும்பிரல் லூனார் எக்லிப்ஸ் (Penumbral Lunar Eclipse) ஆக இருக்கும். அதாவது பூமியின் நேரடி நிழல் நிலவின் மீது விழாது. பக்க நிழல் விழுவதால் ஏற்படும் கிரகணம் இது.  ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியாவில் உள்ளவர்களுக்கு மட்டுமே இது தெரியும்.

 மூன்றாவது கிரகணம்

இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 14, 2023 அன்று நிகழும். இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் காணப்படாது. இது மேற்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அட்லாண்டிகா மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் காணப்படும்.

அதோடு இது அனுலார் சோலார் எக்லிப்ஸ் (Annular solar eclipse), அதாவது முழுமையாக சூரியன் மறையாது. நடுப்பகுதி மறைந்து சுற்றி வட்ட வளையம் மட்டும் காணப்படும்.

நான்காவது கிரகணம்

2023 ஆம் ஆண்டின் கடைசி கிரகணம் அக்டோபர் 29, 2023 அன்று நிகழும். இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் அதிகாலை 1:06 மணிக்கு தொடங்கி மதியம் 2:22 மணிக்கு முடிவடையும். இந்த சந்திர கிரகணம் மட்டும் தான் இந்தியாவில் தெரியும். இந்த சந்திர கிரகணம் பகுதி கிரகணமாக அமையும். அதாவது பாதி சந்திரன் மட்டும் மறைந்து மீளும்.

நான்கு கிரகணங்களில் ஒன்று தான் இந்தியாவில் தெரியும் என்றாலும் மற்ற மூன்றையும் நாசாவின் இணையதளத்தில் பார்த்து மகிழலாம். அனால் ஒருபோதும் வெறும் கண்ணால் பார்க்க முயலாதீர்கள். கண் நிரந்தர சேதத்திற்கு உள்ளாகும். எக்ஸ்-ரே கண்ணாடிகள், இதற்காக தனியாக கிடைக்கும் சிறப்பு குண்டிகள், ஆய்வக தொலைநோக்கிகள் கொண்டு மட்டும் பாருங்கள்.

First published:

Tags: Lunar eclipse, Solar eclipse