நெட் டேட்டா போதவில்லையா..? தினமும் 3 ஜிபி டேட்டா அள்ளித்தரும் ஜியோ, ஏர்டெல், வோடபோன்..

நெட் டேட்டா போதவில்லையா..?  தினமும் 3 ஜிபி டேட்டா அள்ளித்தரும் ஜியோ, ஏர்டெல், வோடபோன்..
தொலைதொடர்பு சேவைகள்
  • Share this:
வீட்டில் இருந்து வேலை பார்க்கிறீங்களா..? நெட் டேட்டா போதவில்லையா..? தினமும் 3 ஜிபி டேட்டா அள்ளித்தரும் ஜியோ, ஏர்டெல், வோடபோன்..

கொரோனா தொற்று காரணமாக உலகமே வீட்டுக்குள் முடங்கி உள்ளது. சில அத்தியாவசிய தேவைகளுக்கான வணிகம் தவிர மற்றவை முடங்கிவிட்டன. மக்கள் நடமாட்டத்தை குறைக்க நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.

சிலர் வீட்டில் இருந்தே கணினியில் பணியாற்றுகின்றனர். அவரக்ளுக்கு போதிய இண்டெர்நெட் கிடைக்காமல் தினமும் அல்லல்படும் சூழலும் அறிய முடிகிறது.


சிலர் டிக்டாக், யூடியூப், என வீடியோ தளங்களில் மூழ்கி கிடப்பதாலும்,நெட் தீர்ந்துவிடுகிறது.

இதற்கெல்லாம் தீர்வாக, தினமும் 3 ஜிபி டேட்டா கொண்ட பிரத்யேக பிளான்கள் உங்களுக்காக இங்கு பட்டியலிடுகிறோம்.

1. ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio)ரிலையன்ஸ் ஜியோ பயன்படுத்துவோருக்கு 3 ஜிபி டேட்டா கொண்ட பிளான் ₹349 விலையில் கிடைக்கிறது. 38 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பிளானில் வழக்கமான அனைத்து இலவச திட்டங்களும் அடங்கும்.

2. வோடபோன் (Vodafone):

வோடபோன் நெட்வொர்க்கை பயன்படுத்துவோருக்கு 3 ஜிபி டேட்டா கொண்ட பிளான்கள் இரண்டு விலையில்கிடைக்கிறது. ₹349 க்கு ரீசார்ஜ் செய்தால் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கும், ஆனால் 56 நாட்கள் வேலிடிட்டி. ₹599க்கு ரீசார்ஜ் செய்தால், 84 நாட்கள் வேலிடிட்டி உடன் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கும்.

3. ஏர்டெல் (Airtel) :

ஏர்டெல் சேவையில் ₹398க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கும் . அதேபோல் ₹558க்கு ரீசார்ஜ் செய்தால் 56 வேலிடிட்டியில் கிடைக்கும்.
First published: March 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading