முன்னதாக, மெட்டா (Meta) நிறுவனம் அதன் ஃபேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் புதிய மேம்படுத்தப்பட்ட 3டி அவதார்களை (3D Avatars) அறிமுகப்படுத்தி இருந்தது. தற்போது அவைகள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த 3டி அவதார்ஸ் அம்சம் ஏற்கனவே பல நாடுகளில் வெளியிடப்பட்டு இருந்தாலும் கூட இப்போது தான் இந்தியாவில் முதன் முதலாக பயன்படுத்த கிடைக்கின்றன. இதன் மூலம் நாட்டில் உள்ள பலவகையான மெட்டா யூசர்கள், தாங்களாகவே ஒரு 3டி அவதார்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.
இங்கே ஒரு 3டி அவதார் என்பது ஒருவரின் கார்ட்டூன் எடிஷன் ஆகும். இது விர்ச்சுவல் செட்டிங்கில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை உருவகப்படுத்தி காட்டும் ஒரு அம்சம் ஆகும். இது உங்கள் உண்மையான தோற்றத்தின் ஒரு துல்லியமான நகல் ஆக இருக்கலாம் அல்லது உங்கள் டிஜிட்டல் வெர்ஷன் ஆக இருக்கலாம். பேஸ்புக்கில் ஒரு அவதாரை உருவாக்கியதும், அதை ஃபேஸ்புக், மெசஞ்சர் ஆப், இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் மற்றும் டிஎம்-கள் மற்றும் மெட்டா க்வெஸ்ட் (Meta Quest) ஹெட்செட் ஆகியவற்றில் பயன்படுத்தலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
சுவாரசியமாக இந்த புதுப்பிக்கப்பட்ட 3டி அவதார் அம்சமானது, உங்கள் அவதாரில் காக்லியர் இம்ப்ளான்ட் (Cochlear implant) மற்றும் ஓவர்-தி-இயர் ஹியரிங் ஹெட்ஸ் (over-the-ear hearing aids) போன்ற கருவிகளைச் சேர்ப்பதற்கான விருப்பங்களையும் வழங்கும். ஃபேஸ்புக்கில் ஸ்டிக்கர்களில் தோன்றும் சக்கர நாற்காலிகளும் இதில் அடங்கும். மேலும் மெட்டா நிறுவனம், சில முக வடிவங்கள் மற்றும் ஸ்கின் ஷேடர்களிலும் நுட்பமான மாற்றங்களைச் செய்து, அவதார்களை மிகவும் உண்மையானதாகவும் மாற்றியுள்ளது.
ஃபேஸ்புக் மொபைல் ஆப் வழியாக உங்கள் அவதாரை உருவாக்குவது எப்படி?
1. உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஃபேஸ்புக் ஆப்பிற்கு சென்று பின் மெனுவிற்கு (Menu) செல்லவும்
2. ஸ்க்ரோல் செய்து அவதார் (Avatar) என்கிற விருப்பத்தை கண்டறிந்து பின் 'எடிட் யுவர் அவதார்' (Edit your Avatar) என்பதை கிளிக் செய்யவும்.
3. இப்போது ஆடைகள், முக வடிவங்கள், கண் வடிவங்கள், சிகை அலங்காரங்கள் போன்ற உங்கள் அவதாரை கஸ்டமைஸ் செய்யும் நிறைய விருப்பங்களை காண்பீர்கள். அதையெல்லாம் பயன்படுத்தி உங்கள் அவதாரை உங்கள் விருப்பப்படி உருவாக்கவும்.
4. பின்னர், நீங்கள் புதிதாக உருவாக்கிய 3டி அவதாரை ஷேர் செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் 'அவதார்ஸ்' விருப்பத்திற்கு செல்ல வேண்டும்.
5. பிறகு ஸ்க்ரோல் செய்து கீழே உள்ள ஷேர் டூ ஃபீட் (Share to Feed) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும். அவ்வளவு தான்!
இதை நீங்கள் மெசஞ்சர் ஆப் வழியாகவும் செய்யலாம். அதற்கு உங்கள் ப்ரொஃபைல் போட்டோவை கிளிக் செய்து பின் "அவதார்" என்கிற விருப்பத்தை அணுக வேண்டும். எவ்வாறாயினும் இது உங்களை ஃபேஸ்புக் ஆப் வழியாக அவதார்-ஐ உருவாக்கும் அதே ஸ்க்ரீனுக்கே உங்களை அழைத்துச் செல்லும். ஒருவேளை நீங்கள் ஃபேஸ்புக்கை இன்ஸ்டால் செய்யவில்லை என்றால் அதைப் பதிவிறக்கும்படி கேட்கப்படுவீர்கள்.
Also see... இந்தியாவில் 5ஜி சேவை தொடக்கம் எப்போது.?
மெசஞ்சர் சாட்களில், உங்கள் அவதார் ஸ்டிக்கர்களை அனுப்புவது எப்படி?
1. மெசஞ்சர் ஆப்பை திறந்து, ஒரு புதிய / ஏற்கனவே உள்ள ஒரு கான்வேர்ஷேஷனை தொடங்கவும் / தொடரவும்.
2. உங்கள் அவதார் ஸ்டிக்கர் பேக்கைக் காண ஸ்டிக்கர்ஸ் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
3. நீங்கள் அனுப்ப விரும்பும் ஸ்டிக்கரைத் தேர்ந்தெடுத்து, அதை அனுப்பவும், அவவ்ளவு தான்!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.