வாட்ஸ்அப் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் செய்தி சேவைகளில் ஒன்றாகும். பேஸ்புக்கிற்குச் சொந்தமான செய்தியிடல் ஆப் பயனர் அனுபவத்தை சிறப்பாகச் செய்ய அதன் திறமைக்கு பயனுள்ள அம்சங்களைச் சேர்த்துக் கொண்டே இருக்கிறது. இந்த ஆப்-ல் உள்ள செட்டிங்ஸ் பிரிவில் பல அம்சங்கள் மறைக்கப்பட்டுள்ளன. அவை பயன்படுத்த மிகவும் வசதியானது. அதன்படி வாட்ஸ்அப் பயன்பாட்டை எளிதாக்குவதற்கும் மிகவும் வசதியானதாக்கவும் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் குறித்து காண்போம்.
நீல நிற டிக் இல்லாமல் செய்தி வாசிக்கப்பட்டதா என்பதை எவ்வாறு சரிபார்க்கலாம்
வாட்ஸ்அப்பில் யாராவது வாசிப்பு பகுதியை முடக்கியிருந்தால், நீல நிற டிக் தோன்றாது. எனவே அந்த நபர் வாட்ஸ்அப் செய்திகளைப் படித்தாரா இல்லையா என்பதை அறிந்து கொள்வது கடினம். ஆனால் இதற்கு ஒரு தீர்வு உள்ளது. நீங்கள் அந்த நபருக்கு வாட்ஸ்அப்பில் ஆடியோ செய்தியை அனுப்பலாம். எனவே, அவர்கள் நீல நிற டிக்கை முடக்கியிருந்தால் கூட, பயனர் ஆடியோ செய்தியை சரிபார்த்தாரா என்பது உங்களுக்குத் தெரியும். ஏனென்றால், ஆடியோ செய்திகளுக்கு நீல நிற டிக் அம்சங்கள் மாறாது.
உங்கள் முக்கியமான செய்திகளைக் எவ்வாறு கண்காணிக்கலாம்:
தகவல்தொடர்புக்கான சிறந்த செய்தியிடல் பயன்பாடுகளில் ஒன்று வாட்ஸ்அப். எனவே, ஒரு நபர் ஒரு முக்கியமான செய்தியை அனுப்பும் போது, அதை நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அணுக விரும்பலாம். அதுபோன்ற சமயங்களில் நீங்கள் செய்தியை நட்சத்திரமாக குறிக்க வேண்டும். இதனால் நீங்கள் தேவைப்படும் நேரத்தில் அந்த செய்தியை அணுக தேட வேண்டியதில்லை. ஒரு அரட்டையில் இருக்கும் முக்கியமான செய்திகள் மற்றும் கோப்புகள் கொண்ட செய்தியை நீண்ட நேரம் (லாங் பிரஸ்) பிரஸ் செய்து, பின்னர் அதில் தோன்றும் நட்சத்திர ஐகானை அழுத்தவும். மேல் வலது மூலையில் அமைந்துள்ள மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானைப் பார்வையிடுவதன் மூலம் நீங்கள் நட்சத்திரமிட்ட செய்திகளைக் காணலாம்.
வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்ட அனைத்து ஆடியோ, வீடியோ கோப்புகள் அல்லது புகைப்படங்களை எவ்வாறு சரிபார்க்கலாம்
அனைத்து புகைப்படங்கள், அல்லது வீடியோக்கள், ஆடியோ அல்லது வாட்ஸ்அப்பில் பயன்படுத்தப்படும் Gif புகைப்படங்களை தனித்தனியாக சரிபார்க்க எளிதான வழி உள்ளது. வாட்ஸ்அப் பயன்பாட்டைத் திறந்து தேடல் பட்டனை அழுத்தவும். இங்கே, நீங்கள் குறிப்பிட்ட விருப்பங்களைக் காண்பீர்கள். அவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்ததும், அதற்கேற்ப கோப்புகளை ஆப் காண்பிக்கும். அவற்றில் புகைப்படங்கள், அல்லது gifக்கள் அல்லது பிற கோப்புகளின் தொகுப்பைப் பெற்றதும். அதை நீங்கள் எந்த தொடர்புக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம். நீங்கள் எந்த அரட்டையில் குறிப்பிட்ட கோப்பைப் பயன்படுத்துகிறீர்கள் அல்லது பார்த்தீர்கள் என்பதையும் உங்களால் சரிபார்க்க முடியும்.
வாட்ஸ்அப்பில் 5MB-ஐ விட பெரிய கோப்புகளை நீக்குவது எப்படி
உங்கள் மொபைலில் சேமிப்பு இடம் இல்லாமல் இருந்தால், 5MB ஐ விட பெரிய கோப்புகள் என்ன என்பதை சரிபார்த்து அவற்றை உடனே நீக்குவது தான் சிறந்த வழியாகும். அதற்கு நீங்கள் settings > storage and data > Manage storage என்ற ஆப்சன்களுக்கு செல்லவும். அங்கே, 5MB-ஐ விட பெரியது என்ற ஒரு விருப்பத்தைக் காண்பீர்கள். அதனை தேர்வு செய்யும் போது வாட்ஸ்அப்-ல் உள்ள அனைத்து பெரிய கோப்புகளையும் காண்பிக்கும். அதில் தேவைப்பட்ட கோப்புகளை நீக்கலாம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இடத்தை மிக விரைவாக விடுவிக்கவும் உதவும்.
அரட்டையைத் திறக்காமல் whatsapp web-ல் செய்திகளைப் எவ்வாறு படிப்பது
இந்த அம்சத்தை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம். நீங்கள் whatsapp web-இல் ஒரு செய்தியைப் பெறும் போது, உங்கள் மவுஸ் கர்சரை அரட்டையில் வைத்தால் போதும், அதைத் திறக்க வேண்டாம். கர்சரை அரட்டையில் வைக்கும் போது புதிதாகப் பெறப்பட்ட செய்திகளை காண்பிக்கும். எனவே, நீங்கள் whatsapp web-ஐ பயன்படுத்துகிறீர்கள் என்றால், அரட்டையைத் திறக்காமல் எல்லா செய்திகளையும் படிக்க இதுவே ஒரே வழி.