இயந்திரமயமாக்கல்: அடுத்த ஆண்டுக்குள் ஐ.டி.துறையில் பறிபோகும் 30 லட்சம் வேலைவாய்ப்பு!

மாதிரிப் படம்

இந்தியாவில் ஒரு கோடியே 60 லட்சம் பேர் ஐ.டி. துறையில் பணியாற்றி வரும்நிலையில், இதில் 90 லட்சம் பேர் குறைந்த திறன் உடைய  சேவைகளிலும் பி.பி.ஓ. நிலைகளிலும் பணியாற்றி வருவதாக நாஸ்காம் கூறுகிறது.  இந்த 90 லட்சம் பேரில் இயந்திரமயமாக்கல் தாக்கம் காரணமாக  30 லட்சம் பேர் வரை 2022ம் ஆண்டுக்குள்  தங்களது வேலையை இழக்கக் கூடும்

  • Share this:
இந்தியாவில் இயந்திரமயமாக்கல் காரணமாக  ஐ.டி.துறையில்  2022க்குள் 30 லட்சம் பேர் வேலையை இழப்பார்கள் என  ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இயந்திரமயமாக்கல் என்பது தற்போது அனைத்து துறைகளிலும் வேகமாக அரங்கேறி வருகிறது. குறிப்பாக ஐ.டி. எனபடும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இயந்திரமயமாக்கல் வேகமாக நடந்தேறி வருகிறது வருகிறது.  இந்தியாவில் உள்நாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில்  ஒரு கோடியே 60 லட்சம் பேர் பணியாற்றி வரும் நிலையில், 2022ம் ஆண்டுக்குள் 30 லட்சம் பேர் தங்களின் வேலையை இழப்பார்கள் என்று ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.

இந்தியாவில் ஒரு கோடியே 60 லட்சம் பேர் ஐ.டி. துறையில் பணியாற்றி வரும்நிலையில், இதில் 90 லட்சம் பேர் குறைந்த திறன் உடைய  சேவைகளிலும் பி.பி.ஓ. நிலைகளிலும் பணியாற்றி வருவதாக நாஸ்காம் கூறுகிறது.  இந்த 90 லட்சம் பேரில் இயந்திரமயமாக்கல் தாக்கம் காரணமாக  30 லட்சம் பேர் வரை 2022ம் ஆண்டுக்குள்  தங்களது வேலையை இழக்கக் கூடும் என  அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில், 7 லட்சம் பேர் நேரிடையாக இயந்திரங்கள் மூலம் பணி வாய்ப்பை இழப்பர்.  மீதமுள்ளவர்கள், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பிற ஐ.டி. ஊழியர்களின் திறன் மேம்பாடு ஆகியவை காரணமாக பணி வாய்ப்பை இழக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதியவரை நிர்வாணப் படம் எடுத்து மிரட்டல்: 3 பெண்கள் கைது!..

டி.சி.எஸ். இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெசிஎல், டெக் மகேந்திரா மற்றும் காக்னிசெண்ட்  ஆகிய நிறுவனங்கள் பணியிடங்களை குறைக்க திட்டமிட்டு வருவதாக தோன்றுகிறது.  இதன் மூலம்   ஊதியமாகவும், பிற செலவினங்களாகும் 100 பில்லியன் டாலர் பணத்தை  நிறுவனங்கள் மிச்சப்படுத்தக் கூடும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதேபோல்,  பல்வேறு நாடுகளும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த தங்களின் வேலைகளை மீண்டும் உள்நாட்டிலேயே செய்ய முனைப்பு காட்டி வருகின்றன.  தங்கள் நாட்டு மக்கள் அல்லது. ஆர்.பி.ஏ. முறையில் இந்த வேலைகளை செய்ய அவை திட்டமிட்டுள்ளன. இந்திய ஐ.டி. துறையில் வேலைவாய்ப்பு குறைய இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஆர்.பி.ஏ. எனப்படும் ரோபோ செயல்முறை ஆட்டோமேசன் என்பது ரோபாக்கள் மூலம்  பணிகளை செய்வது அல்ல. அதற்கு மாறாக மென்பொருட்கள் மூலம்  பணிகளை மேற்கொள்ளும் முறையாகும்.  இதன் மூலம் பணி நேரம், பணியாளர்களின் எண்ணிக்கை போன்றவற்றை குறைக்க முடியும்.

மேலும் படிக்க.. அலோபதி குறித்து தவறான கருத்து: பாபா ராம்தேவ் மீது வழக்குப் பதிவு..   

எனினும், இந்த அறிக்கை தவறானது என இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான  நாஸ்காம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் 1,38,000 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாக நாஸ்காம் கூறியுள்ளது.

 
Published by:Murugesh M
First published: