ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

மைக்ரோசாப்ட் பெயரில் பகீர் மோசடி.. பைரேட்டட் வெர்ஷன் பயன்படுத்துகிறீர்களா? உஷார்

மைக்ரோசாப்ட் பெயரில் பகீர் மோசடி.. பைரேட்டட் வெர்ஷன் பயன்படுத்துகிறீர்களா? உஷார்

Windows

Windows

ஒரு கணினிக்கு ஒரு முறைதான் லைசென்ஸ் வாங்கி பயன்படுத்த முடியும். ஆனால் பலரும் பைரேட்டட் வெர்ஷன் பயன்படுத்துகின்றனர்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பெயரில் போலி இணைய தளத்தை உருவாக்கி போலி கால் சென்டர் நடத்திய கும்பலை சேர்ந்த 3 பேரை சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கணினி பயன்படுத்துபவர்கள் ஒவ்வொருவரும் மைக்ரோசாப்ட் மென்பொருள் லைசென்ஸ் பெறுவதற்கு சுமார் 9 ஆயிரம் ரூபாய் நிறுவனத்திற்கு செலுத்தி ஆன்லைனில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.ஒரு கணினிக்கு ஒரு முறைதான் லைசென்ஸ் வாங்கி பயன்படுத்த முடியும். ஆனால் இதை தவறாக பயன்படுத்தி பைரட்டேட் வெர்ஷன் என்ற அடிப்படையில் பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்கள்,ஒரிஜினல் லைசன்ஸ் மைக்ரோசாப் நிறுவனத்திடம் வாங்காமல் பயன்படுத்தி வருகின்றனர். குறைந்த விலைக்கு கிடைக்கும் என்ற அடிப்படையில் பைரேட்டட் வெர்ஷன் பயன்படுத்துகின்றனர்.

இது போன்று பைரேட்டட் வெர்ஷனை பயன்படுத்துவர்களை குறிவைத்து, குறைந்த விலைக்கு மைக்ரோசாப்ட் மென்பொருள் வாங்குபவர்களை மோசடி செய்கின்றனர்.

இதையும் படிங்க:  வெளிநாட்டு ஆன்லைன் சூதாட்டம் மூலம் தமிழகத்தில் ₹10 கோடி மோசடி செய்த மென்பொறியாளர்கள்

இதனை சாதகமாக பயன்படுத்தி பல மோசடிக் கும்பல்கள் போலி கால்சென்டர் மூலமாகவும் ஈமெயில் அனுப்பியும் மோசடி செய்கின்றனர். உலகம் முழுவதும் போலி மைக்ரோசாப்ட் மென்பொருள் மூலம் பலரும் மோசடிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் போலி கால் சென்டர் நடத்தி மோசடி செய்யும் கும்பல் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த அடிப்படையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் சிபிசிஐடி சைபர் செல் பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளது.

இதையும் படிங்க:  பிட்காயினை விரும்பும் பெண்கள்.. Shiba Inu கிரிப்டோகரன்சியை விரும்பும் ஆண்கள் - WazirX ஆய்வில் தகவல்

இந்த புகாரின் அடிப்படையில் ஆயிரக்கணக்கானோர் இந்த மோசடிக் கும்பலிடம் சிக்கி உள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக ஈமெயில் மற்றும் போலி கால் சென்டர் மூலம் மைக்ரோசாப்ட் மென்பொருள் தேவைப்படும் கணினி பயன்பாட்டாளர்களை அணுகி மோசடி செய்கின்றனர். குறைந்த விலைக்கு மைக்ரோசாப்ட் லைசன்ஸ் தருவதாகக் கூறி பதிவிறக்கம் செய்ய வைக்கின்றனர். ஒரு மாதத்திற்கு இலவசமாக பயன்படுத்தலாம் என்று ஆசைவார்த்தை காட்டி கிரெடிட் கார்டு மூலமாக போலி மைக்ரோசாஃப்ட் மென்பொருளை மோசடிக் கும்பல் கொடுக்கின்றது.

இந்த கும்பல் தொடர்பான எட்டு இடங்களில் எட்டு சிபிசிஐடி தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக அம்பத்தூரில் itrope டெக்னாலஜி எனப்படும் போலி கால் சென்டர் நடத்தும் இடத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது போல் பிம்பத்தை உருவாக்கி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணையதளத்தை போலியாக வைத்து மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக இந்த மோசடிக் கும்பலை தொடர்பு கொள்வதற்கு இலவச இணைப்பு எண்களும் கொடுத்து கணினி பயன்பாட்டாளர்களை ஏமாற்றியுள்ளனர்.

இதையும் படிங்க:  ‘தடுக்க முடியலைனா பாலியல் வன்புணர்வை என்ஜாய் பன்னுங்க’ - காங்கிரஸ் எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை

குறிப்பாக மோசடி கும்பலிடம் சிக்குபவர்களின் கணினியை ரிமோட் ஆக்சஸ் கண்ட்ரோல் என்ற முறையில்,இருந்த இடத்தில் இருந்தபடியே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றனர்.அதன் பின் கணினியில் பிரச்சினைகளை உருவாக்கி, அதை சரி செய்து தருவது போல் சேவை அளித்து மோசடி செய்கின்றனர்.

இவ்வாறு மோசடி செய்யும் கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அம்பத்தூரில் செயல்படும் தனியார் நிறுவன இயக்குனர் ராஜேஷ் ப்லோமான் மற்றும் விவேக் முகமது உமர் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய ஆவணங்களையும் சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த மோசடி கும்பல் உலக அளவில் பலரையும் மோசடி செய்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கும்பலோடு தொடர்புடைய பலரும் இந்தியா முழுவதும் போலி கால் சென்டர்களை உருவாக்கி மைக்ரோசாப்ட் மென்பொருள் பயன்பாட்டாளர்கள் மோசடி செய்து வருகின்றனர்.  இதை பயன்படுத்தும் கணினி பயன்பாட்டாளர்கள் கணினியில் வைரஸை பதிவிறக்கம் செய்ய வைத்து டேட்டாக்களை திருடு வதாகவும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:   காதலியின் கணவரிடம் இருந்து தப்ப 5வது மாடியில் இருந்து குதித்த இளைஞர் மரணம்

பலவிதமான வைரஸ்கள் மூலம் டேட்டாக்களை திருடுவதோடு மட்டுமல்லாமல் கணினியை செயல் பட விடாமல் தடுக்கின்றனர். இதனை சரிசெய்ய கால் சென்டரை அணுகுமாறு,பதிவிறக்கம் செய்யப்பட்ட போலி மைக்ரோசாப்ட் இணையதளம் மூலமாகவே மெயில் அனுப்புகின்றனர்.

மேலும் இந்தப் போலி மைக்ரோசாப்ட் மென்பொருள் மூலமாக கிரெடிட் கார்டு உள்ளிட்ட வங்கி தகவல்களையும் திருடி மோசடியில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.

தொடர்ந்து பிடிபட்ட மூவரிடமும் சிபிசிஐடி சைபர் கிரைம் போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி , நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைத்தனர். தமிழகத்திலும் மற்ற மாநிலங்களிலும் எவ்வளவு பிறரை ஏமாற்றி உள்ளார்கள் எனவும், இவர்களோடு தொடர்புடைய மற்ற கும்பல் குறித்தும் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Cyber crime, Cyber fraud, Microsoft, Online crime