ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இந்தியாவில் BGMI ஆப் தடை செய்யப்பட்டது ஏன்? 3 முக்கிய காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் BGMI ஆப் தடை செய்யப்பட்டது ஏன்? 3 முக்கிய காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்

BGMI

BGMI

இந்தியாவில் ஸ்மார்ட் ஃபோன்களுக்கான மிக பிரபலம் வாய்ந்த கேம் ஆப்-ஆக வலம் வந்து கொண்டிருந்த Battlegrounds Mobile India (பிஜிஎம்ஐ) என்ற விளையாட்டு கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் ஸ்மார்ட் ஃபோன்களுக்கான மிக பிரபலம் வாய்ந்த கேம் ஆப்-ஆக வலம் வந்து கொண்டிருந்த Battlegrounds Mobile India (பிஜிஎம்ஐ) என்ற விளையாட்டு கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதே சமயம், உங்கள் ஃபோனில் ஏற்கனவே பிஜிஎம்ஐ ஆப் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால், அந்த ஆப்-ஐ முழுமையாக நீக்க வேண்டும் என்று இந்திய அரசு விதித்துள்ள கெடு முடிவடையும் வரையில் நீங்கள் அதை பயன்படுத்த முடியும்.

பிஜிஎம்ஐ ஆப் தடை செய்யப்பட்டது ஏன்

பிஜிஎம்ஐ கேம் இந்தியாவில் ஏன் தடை செய்யப்படுகிறது குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமான விளக்கம் எதையும் கொடுக்கவில்லை. அதேசமயம், இந்த ஆப்-பிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூகுள் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து கூகுள் இந்தியா நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “மத்திய அரசிடம் இருந்து வந்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து, தொடர்புடைய ஆப் டெவலப்பருக்கு நாங்கள் இதுகுறித்து தகவல் தெரிவித்ததுடன், அதை இந்தியாவில் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளோம்’’ என்று தெரிவித்தனர்.

ஆக, பிஜிஎம்ஐ கேம் எதனால் தடை செய்யப்பட்டது என்ற கேள்விக்கு சரியான விடை தெரியாமல் இருக்கிறது அல்லவா. அதே சமயம், அரசு தரப்பு வட்டாரங்களில் கிடைத்த தகவல்களின்படி 3 விதமான காரணங்களை செய்தி நிறுவனங்கள் பட்டியலிட்டுள்ளன.

இந்தியாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்ட பப்ஜி-யின் பெயர் மாற்றப்பட்ட வடிவம் தான் பிஜிஎம்ஐ

இந்தியாவில் பப்ஜி விளையாட்டை மத்திய அரசு கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி அறிமுகம் செய்தது. அதற்கு அடுத்த 10 மாதங்களில் பிஜிஎம்ஐ கேம்-ஐ கிராஃப்டான் நிறுவனம் அறிமுகம் செய்தது. ஏற்கனவே இருந்த பப்ஜி விளையாட்டில் இருந்த அதே அம்சங்களுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட சீன ஆப்-களில் பிஜிஎம்ஐ ஆப் மிக பெரிய ஒன்றாகும்.

Also Read : இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடக்கம் - எங்கு தெரியுமா?

பப்ஜி ஆப்-ஐ இந்திய அரசு தடை செய்தபோது சுட்டிக்காட்டப்பட்ட அத்தனை குறைகளையும் சரி செய்துவிட்டதாக பிஜிஎம்ஐ ஆப் நிறுவனம் கூறினாலும், பெயர் மாற்றத்தை தவிர பெரிய அளவுக்கான மாற்றம் எதுவும் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.

விளையாட்டு காரணமாக தாயை கொலை செய்த சிறுவன்

பப்ஜி விளையாட்டினால் ஏற்பட்ட மன மாற்றத்தை தொடர்ந்து, தன் தாயை ஒரு சிறுவன் கொலை செய்ததாக செய்திகளில் வந்த தகவலை மத்திய அரசு சுட்டிக்காட்டுகிறது. இதுதொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசும்போது இந்தியாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்ட சீன ஆப்-கள் இப்போது புதிய பெயரில் வலம் வந்து கொண்டிருப்பது கவலைக்குரிய விஷயம் என்று குறிப்பிட்டார்.

பெட்டிங் மற்றும் ஆப் பர்சேஸ் செய்ய அடிமையாகும் குழந்தைகள்

ஆப்-களில் உள்ள சில வசதிகளை வாங்குவதற்காக குழந்தைகள் லட்சக்கணக்கான ரூபாயை பெற்றோரின் அக்கவுண்ட்களில் இருந்து செலவு செய்ததாக பல செய்திகளை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். பிஜிஎம்ஐ விளையாட்டில் பர்சேஸ் வரம்பு ரூ.7 ஆயிரம் தான் என்றாலும், அதற்காக குழந்தைகள் வீட்டிலேயே திருடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன என்பது கவனத்திற்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

First published:

Tags: PUBG