தகவல் தொழில்நுட்ப சட்டம் 2021 இன் படி வாட்ஸ்அப்பில் எத்தனை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன மற்றும் நிறுவனம் எத்தனை கணக்குகளை முடக்கியுள்ளன என்பதைப் பற்றிய ஒவ்வொரு மாதமும் வாட்ஸ்அப் நிறுவனம் அறிக்கை வெளியிட வேண்டும். மெடா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் தனது ஜூன் 1, 2022 முதல் ஜூன் 30, 2022 க்கான அறிக்கையை வெளியிட்டது. அதன்படி ஜூன் மாதத்தில், 22 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் நிறுவனம் ஏன் சில கணக்குகளை முடக்குகிறது.?
மெசேஜ் செயலி தானே எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று பலரும் வாட்ஸ் ஆப் செயலியை தவறான முறையில் பயன்படுத்தி வந்தனர். அவ்வாறு செய்யக்கூடாது என்பதற்காகவே வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு விதிமுறைகளை அமல் படுத்தியது. அந்த விதிமுறைகளை மீறும் பட்சத்தில் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்படும் என்பதை சில மாதங்களுக்கு முன்பே இந்நிறுவனம் வெளியிட்டது. எனவே, வேறு யூசர்கள் மேற்கொள்ளும் புகார்களின் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் சில ஆயிரங்கள் முதல் லட்சக்கணக்கான இந்திய வாட்ஸ்அப் கணக்குகள் தடைசெய்யப்பட்டு வருகின்றது.
என்ன காரணங்களுக்காக வாட்ஸ்அப் கணக்கு மீது புகார் அளிக்கலாம்.?
இந்திய வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள சேவை விதிமுறைகளை மீறும் கணக்குகள், முறையான அங்கீகாரம் பெறாமல் ஒரே நேரத்தில் ஸ்பாம் செய்திகளை அனுப்பக்கூடிய கணக்குகள், சாதி, மத, இன மோதல்கள், வன்முறைச் சம்பவங்கள் ஏற்படுத்துபவையாக இருக்கும் கணக்குகள், பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுக்கும் கணக்குகள் ஆகியவை தடை செய்யப்படும்.
யூசர்கள் வாட்ஸ்அப் கணக்கு மீது எவ்வாறு புகார் அளிக்கலாம்.?
முறைகேடான அல்லது ஸ்பாம் கணக்கு என்று அறிந்த கணக்குகள் பற்றிய புகாரை
grievance_officer_wa@support.whatsapp.com என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம். மேலும், வாட்ஸ்அப் ஒரு உதவி மையத்தை உருவாக்கியுள்ளது. அதில் யூசர்கள் தங்கள் சந்தேகங்களை முன்வைக்கலாம். மேலும், இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் கிரீவன்ஸ் சென்டருக்கு தங்கள் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் புகார்களை கடிதம் மூலமாக அனுப்பலாம்.
ஒரு குறிப்பிட்ட வாட்ஸ்அப் கணக்கைப் பற்றி புகார் அளிக்கும் போது, அந்த எண்ணின் நாட்டின் குறியீடுடன் அனுப்ப வேண்டும். உதாரணமாக இந்திய வாட்ஸ்அப் எண்ணை புகார் அளித்தால், +91 என்பதை சேர்க்க வேண்டும்.
Also Read : முன்னணி மியூசிக் செயலிகளுக்கு போட்டியாகக் களமிறங்கும் டிக்டாக் மியூசிக்.!
உங்கள் புகாரை வாட்ஸ்அப் பெற்ற பின்னர் என்ன நடக்கும்
நீங்கள் ஒரு வாட்ஸ்அப் கணக்கையோ அல்லது குழுவை பற்றியோ புகார் அளித்தால், அந்த கணக்கு அல்லது குழுவில் இருந்து புகார் அளித்த யூசரின் கணக்குக்கு அனுப்பப்பட்ட கடைசி ஐந்து செய்திகளை வாட்ஸ்அப் நிறுவனம் ஆய்வு செய்யும். புகார் அளித்த நபரின் பிரைவசிக்காக, அந்த விவரங்களும் அவருக்குத் தெரிவிக்கப்படும்.
தனிப்பட்ட புகாராக இல்லாமல், வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் செய்தி, புகைப்படங்கள், வீடியோக்களையும் ‘report’ என்ற ஆப்ஷன் மூலம் புகார் செய்யலாம்.
Also Read : சர்ச்சையில் சிக்கிய இன்ஸ்டாகிராம்... திடீரென எடுத்த அதிரடி முடிவு.!
2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து இப்போது வரை 80 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகளை தடை செய்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.