கொரோனா வைரஸ் தாக்கம்: 2020 ஐபோன் மாடல் வெளியாவது தாமதமாகும் என அறிவிப்பு!

குறிப்பிட்ட சில தயாரிப்புப் பணிகளை இந்தியத் தொழிற்சாலைகளுக்கு ஆப்பிள் நிறுவனம் மாற்றியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம்: 2020 ஐபோன் மாடல் வெளியாவது தாமதமாகும் என அறிவிப்பு!
ஐபோன் 11
  • News18
  • Last Updated: February 10, 2020, 7:33 PM IST
  • Share this:
கொரோனா வைரஸ் தாக்குதலால் 2020-ம் ஆண்டுக்கான புதிய ஐபோன் மாடல் வெளியாவதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.

ஆப்பிள் சாதனங்கள் விநியோகத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால் புதிய மாடல் போன்கள் வெளியாவதில் காலதாமதம் ஏற்படும். ஆப்பிள் நிறுவனத்தில் சப்ளையர்களான ஃபாக்ஸ்கான் மற்றும் பெகாட்ரன் ஆகிய நிறுவனங்களில் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை எனத் தெரிகிறது.

விரைவில் ஐபோன் 11 மற்றும் உலகின் மலிவான ஐபோன்களான ஐபோன் 9 மற்றும் ஐபோன் SE2 ஆகியவற்றின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதர ஐபோன் உற்பத்தித் தொழிற்சாலைகளில் பணியாட்கள் யாரும் விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.


குறிப்பிட்ட சில தயாரிப்புப் பணிகளை இந்தியத் தொழிற்சாலைகளுக்கு ஆப்பிள் நிறுவனம் மாற்றியுள்ளது. ஆனால், சப்ளையர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே விற்பனை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: இந்த ஆண்ட்ராய்டு ஆப்ஸ் உங்கள் மொபைலில் உள்ளதா? உடனே ‘டெலிட்’ செய்துவிடுங்கள்!
First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்