Home /News /technology /

இந்தியா, மியான்மார் வன்முறைகளுக்கு காரணமாகிறதா ஃபேஸ்புக் பதிவுகள்- மெட்டா அறிக்கையில் தகவல்

இந்தியா, மியான்மார் வன்முறைகளுக்கு காரணமாகிறதா ஃபேஸ்புக் பதிவுகள்- மெட்டா அறிக்கையில் தகவல்

மெட்டா

மெட்டா

பயனர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகளவில் மெட்டா மிகப்பெரிய சந்தையாகும். இதில் வெளியாகும் செய்திகள் பலரது கவனத்தை தன்பால் இழுக்கும். முக்கியமாக மனித உரிமை, வன்கொடுமை முதலான உள்ளடக்கங்கள் மற்றவர்களை தூண்டுவதாக இருந்தால், அது ஆபத்தின் உச்சமாக மாறிவிடும்.

மேலும் படிக்கவும் ...
இந்தியா மற்றும் மியான்மர் போன்ற இடங்களில்  வன்முறையைத் தூண்டும் ஆன்லைன் துஷ்பிரயோகங்களுக்கு காரணமாக இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, பேஸ்புக் உரிமையாளர் மெட்டா அதன் முதல் ஆண்டு மனித உரிமைகள் அறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்டது.

பயனர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகளவில் மெட்டா மிகப்பெரிய சந்தையாகும். இதில் வெளியாகும் செய்திகள் பலரது கவனத்தை தன்பால் இழுக்கும். அப்படி இருக்கும் நிலையில் இந்த உள்ளடக்கங்களில் அதன் பொறுப்பு பெரிதாக உள்ளது. முக்கியமாக மனித உரிமை, வன்கொடுமை முதலான உள்ளடக்கங்கள் மற்றவர்களை தூண்டுவதாக இருந்தால், அது ஆபத்தின் உச்சமாக மாறிவிடும்.

அப்படி பல  மனித உரிமை மீறல்கள், வன்முறைகளுக்கு மெட்டா நிறுவன பயனர்களின் உள்ளிடுகள் காரணமாக இருந்து வருகிறது. சமூக ஊடக பதிவுகள் மூலம் வன்முறை நிகழும் சம்பவங்கள் அண்மை காலங்களாக அதிகரித்துள்ளன.  அதை  முறைப்படுத்தும் செயல் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் சிக்கனம் காட்டும் கூகுள்!

அம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு உள்ளிட்ட மனித உரிமைக் குழுக்கள், ஜனவரி மாதம் அனுப்பிய கூட்டுக் கடிதத்தில் மெட்டா நிறுவனம்  மீது  குற்றம் சாட்டி, இந்திய மதிப்பீட்டை முழுமையாக வெளியிடக் கோரியுள்ளன.

இதன் காரணமாக, மெட்டாவின் சட்ட நிறுவனமான ஃபோலி ஹோக்கையால் ஒரு அறிக்கை உருவாக்கப்பட்டது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், இந்தியாவின் சர்ச்சைக்குரிய மனித உரிமைகள் மதிப்பீட்டின் சுருக்கத்தை உள்ளடக்கி ஆராயப்பட்டது.

அதன் சுருக்கத்தில், "விரோதம், பாகுபாடு அல்லது வன்முறையைத் தூண்டும் வெறுப்பு கருத்துக்கள் " உட்பட, மெட்டாவின் தளங்களை உள்ளடக்கிய "முக்கியமான மனித உரிமை அபாயங்களுக்கான" சாத்தியக்கூறுகளை மதிப்பிட்டுள்ளது. ஆனால் மதிப்பீடு, "சார்பு குற்றச்சாட்டுகளை" ஆராயவில்லை.

மனித உரிமைகள் கண்காணிப்பு ஆராய்ச்சியாளர் டெபோரா பிரவுன் மெட்டா நிறுவனத்தின் அறிக்கை குறித்து கூறுகையில், “இது இந்தியாவில் வெறுப்புப் பேச்சு பரவுவதில் மெட்டா நிறுவனத்தின் பங்கை அந்நிறுவனத்திற்கு உணர்த்தும். இந்த  சிக்கலைத் தீர்க்க அந்நிறுவனம் செய்ய வேண்டிய அர்ப்பணிப்புகளைப் புரிந்துகொள்வதற்கு உதவும்" என்றார்.

பல ஆண்டுகளாக மனித உரிமைக் குழுக்கள், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள் இந்தியாவில் பதற்றங்களை தூண்டுவது பற்றி எச்சரிக்கைகளை எழுப்பி வருகின்றன.

மெட்டா தனது அறிக்கையில், இந்தியாவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து வருவதாகவும், ஆனால் மற்ற உரிமைகள் மதிப்பீடுகளைப் போல அவற்றை செயல்படுத்த உறுதியளிக்கவில்லை என்றும் கூறியுள்ளது.

வித்தியாசம் பற்றி கேட்கப்பட்டபோது, ​​மெட்டா மனித உரிமைகள் இயக்குனர் மிராண்டா சிசன்ஸ், "பாதிக்கப்பட்ட பங்குதாரர்கள், பணியாளர்கள் அல்லது வணிக ரகசியத்தன்மையின் சட்டபூர்வமான தேவைகளுக்கு" ஏற்படும் அபாயங்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் வழிகாட்டுதல்களை பயன்படுத்துவதாக கூறியுள்ளார்
Published by:Ilakkiya GP
First published:

Tags: Facebook, Facebook Post, Human rights activist

அடுத்த செய்தி