1Gbps வேகத்திறன்...1000 ஜிபி இலவச டேட்டா...கவரும் ஏர்டெல் V-Fiber ப்ராட்பேண்ட்!

ஜியோ, ஸ்பெக்ட்ரா, ACT, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் 1Gbps வேகத்திறன் உடனான ப்ராட்பேண்ட் சேவையை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

1Gbps வேகத்திறன்...1000 ஜிபி இலவச டேட்டா...கவரும் ஏர்டெல் V-Fiber ப்ராட்பேண்ட்!
ஏர்டெல் ப்ராட்பேண்ட் சேவை
  • News18
  • Last Updated: September 17, 2019, 11:54 AM IST
  • Share this:
வீடுகளில் பயன்படுத்தும் வகையிலான ப்ராட்பேண்ட் சேவைகளை இன்றைய போட்டிக்கு ஏற்ப அப்டேட் செய்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.

புதிய ப்ளான் அடிப்படையில் 700 ரூபாய் முதலே ப்ராட்பேண்ட் இணைப்பு கிடைக்கின்றன. இதனுடன் 1,000 ஜிபி வரையிலான இலவச டேட்டா, எல்லையில்லா டேட்டா பயன்பாடுகளுக்கென 1Gbps வேகத்திறன் என ஏர்டெல் அம்சங்கள் கவரும் விதமாக உள்ளன. மொத்தமாக 40 Mbps தொடங்கி 1 Gbps வரையிலான வேகத்திறன் கொண்ட ஐந்து விதமான ப்ராட்பேண்ட் ப்ளான்கள் வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் 1 Gbps வேகத்திறன் கொண்ட ப்ராட்பேண்ட் சேவை வழங்கும் சில நிறுவனங்களுள் ஏர்டெல் தற்போது இணைந்துள்ளது. ஜியோவின் 1 Gbps ஜியோ ஃபைபர் ப்ராண்ட்பேண்ட் சேவை அறிமுகத்துக்குப் பின்னர் ஏர்டெல் நிறுவனமும் போட்டியிடத் தயாராகவே களம் இறங்கியுள்ளது.


புதிய 799 ரூபாய் திட்டத்தின் கீழ் மாதம் 40 Mbps வேகத்திறன் உடனான 100 ஜிபி இன்டர்நெட் சேவை, எல்லையில்லா லோக்கல் மற்றும் எஸ்டிடி லேண்ட்லைன் டெலிபோன் சேவை வழங்கப்படுகிறது. 6 மாதத்துக்கான சந்தாவை முழுமையாக செலுத்துவோருக்குக் கூடுதலாக 200 ஜிபி டேட்டா வழங்கப்பட உள்ளது. இதனுடன் ஏர்டெல் டிவி ப்ரீமியம் சந்தாவும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும்.

இரண்டாவதாக 1099 ரூபாய்க்கான திட்டம் உள்ளது. இதில், 100Mbps மாதம் 300 ஜிபி டேட்டா, ஏர்டெல் Xstream ப்ரீமியம், ஜீ5 ப்ரீமியம், ஓராண்டுக்கான அமேசான் ப்ரைம், மூன்று மாதங்களுக்கான நெட்ஃப்ளிக்ஸ் சந்தா கிடைக்கும். இதனுடன் லேண்ட்லைன் டெலிபோன் அழைப்புகள் இலவசம்.

ஏர்டெல் ப்ரீமியம் திட்டம் 1,599 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 300Mbps வேகத்திறன் உடன் மாதம் 600 ஜிபி டேட்டா, ஏர்டெல் Xstream ப்ரீமியம், ஜீ5 ப்ரீமியம், ஓராண்டுக்கான அமேசான் ப்ரைம், மூன்று மாதங்களுக்கான நெட்ஃப்ளிக்ஸ் சந்தா கிடைக்கும். எல்லையில்லா லோக்கல் மற்றும் எஸ்டிடி டெலிபோன் சேவைகள் இலவசம்.

Loading...

ஜியோ, ஸ்பெக்ட்ரா, ACT, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் 1Gbps வேகத்திறன் உடனான ப்ராட்பேண்ட் சேவையை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: டாப் 10 ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் அதிக இடங்களில் சாம்சங்... முதலிடத்தைப் பிடித்த போன் எது?

யூ டியூப் படையுடன் விஜய்
First published: September 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...