யூஸர்களின் பர்சனல் டேட்டாக்களை லீக் செய்யும் அபாயத்தில் இருக்கும் Play Store-ன் 19,000 ஆப்ஸ்கள்.!

mobile apps

கூகுள் ஆப் ஸ்டோரை சமீபத்தில் சரிபார்த்த போது,ஒன்றல்ல இரண்டல்ல, நூறல்ல சுமார் 19,000-க்கும் மேற்பட்ட ஆப்ஸ்கள் யூசர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடியவை என்பது கண்டறியப்பட்டு உள்ளது.

  • Share this:
ஆண்ட்ராய்டு டிவைஸ்களில் ஆப்ஸ்களை டவுன்லோட் செய்வதற்கான மிக பாதுகாப்பான சோர்ஸாக கூகுள் ப்ளே ஸ்டோர் கருதப்படுகிறது. ப்ளே ஸ்டோரில் பொழுதுபோக்கு அம்சங்கள், விளையாட்டு, ஆரோக்கியம் என பலதரப்பட்ட லட்சக்கணக்கான ஆப்ஸ்கள் காணப்படுகின்றன. ஆனால் உங்கள் டிவைஸின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்த கூடிய ஆப்ஸ்கள் சமீபத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. கூகுள் ஆப் ஸ்டோரை சமீபத்தில் சரிபார்த்த போது,ஒன்றல்ல இரண்டல்ல, நூறல்ல சுமார் 19,000-க்கும் மேற்பட்ட ஆப்ஸ்கள் யூசர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடியவை என்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இதன் மூலம் கூகுள் ப்ளேஸ்டோரில் உள்ள 19,000-க்கும் மேற்பட்ட ஆப்ஸ்கள் யூஸர்களின் தனிப்பட்ட டேட்டாக்களை லீக் செய்யும் ஆபத்து இருக்கிறது. கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள இந்த ஆயிரக்கணக்கான ஆப்ஸ்கள் பாதுகாப்பற்றவை என்பதை டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனமான Avast கண்டறிந்துள்ளது. இந்த ஆப்ஸ்கள் யூஸர்களின் ஸ்மார்ட் போன் போன்ற ஆண்ட்ராய்டு டிவைஸ்களின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று Avast நிறுவனம் கூறி இருக்கிறது.

இது தொடர்பாக பல தகவல்களை தெரிவித்துள்ள டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனமான Avast ஃபயர்பேஸ் டேட்டாவில் (Firebase data) காணப்படும் முக்கியமான தவறான உள்ளமைவு காரணமாக, பெரும்பாலான ஆப்ஸ்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சுமார் 19,300-க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள் யூசர்களின் தனிப்பட்ட டேட்டாக்களை அம்பலப்படுத்தும் ஆபத்தில் இருக்கின்றன என கூறி இருக்கிறது. ஃபயர்பேஸ் என்பது யூஸர்களின் டேட்டாக்களை சேமிக்க ஆண்ட்ராய்டு டெவலப்பர்களால் பயன்படுத்தப்படும் ஒரு டூல் ஆகும்.

ஆப்ஸ்களால் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களான யூஸர்களின் பெயர்கள், முகவரிகள், லொகேஷன் டேட்டாக்கள் மற்றும் சில சமயங்களில் பாஸ்வேர்ட்கள் போன்றவை லீக் ஆகும் டேட்டாக்களில் அடங்கும் என்று இது தொடர்பான அறிக்கையில் Avast நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Also read:  தாலிபான்கள் கையகப்படுத்திய பிறகு காபுலில் தரையிறங்கிய முதல் வெளிநாட்டு விமானம் – எந்த நாட்டுடையது?

Avast Threat Labs ஆராய்ச்சியாளர்கள் சுமார் 180,300-க்கும் மேற்பட்ட பொதுவில் கிடைக்கும் ஃபயர்பேஸ் நிகழ்வுகளை சோதித்த போது, அவற்றில் சுமார் 10% ஓபனாக இருப்பதை .கண்டறிந்தனர். இவை ஒவ்வொன்றும் ஒரு தரவு மீறல் நிகழ்வு அபாயமாக மாற காத்திருக்கிறது. அப்படி நடந்தால் அது முக்கியமான வணிக, சட்ட மற்றும் ஒழுங்குமுறை அபாயங்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஃபயர்பேஸ் அடிப்படையிலான ஆப்ஸ்களின் 10% யூஸர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தில் இருக்கக்கூடும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த பாதுகாப்பு குறைபாடு பற்றி Avast நிறுவனம், கூகுளுக்கு எச்சரிக்கை செய்து இருக்கிறது. இதன் அடிப்படையில் குறைபாடுகள் காணப்படும் ஆப்ஸ்களின் டெவலப்பர்கள் உரிய நடவடிக்கை எடுக்க விரைவில் கூகுள் அறிவுறுத்தும் என்று தெரிகிறது.

Also read:   ஓசூர் தொழிற்சாலையை உலக வரைபடத்தில் மையப்படுத்தும் ஓலா நிறுவனத்தின் சூப்பர் பிளான்!

யூஸர்களை சிக்கலில் விழ வைக்க கூடிய குறைபாடுடைய ஆப்ஸ்களாக கண்டறியப்பட்டுளளவை பெரும்பாலும் லைஃப் ஸ்டைல், கேமிங், ஃபுட் டெலிவரி மற்றும் இ மெயில் ஆகியவற்றுடன் தொடர்புடையவை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆப்ஸ்களால் ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா பிராந்தியத்தில் உள்ள யூஸர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் Avast நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: