Home /News /technology /

இந்தியாவில் 19 லட்சம் கணக்குகளை முடக்கியது வாட்ஸ் அப் நிறுவனம்.. காரணம் இதுதான்!

இந்தியாவில் 19 லட்சம் கணக்குகளை முடக்கியது வாட்ஸ் அப் நிறுவனம்.. காரணம் இதுதான்!

காட்சி படம்

காட்சி படம்

இந்தியாவில் கடந்த மே மாதத்தில் மட்டும் 19 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்று வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஸ்மார்ட் ஃபோன் மற்றும் இண்டர்நெட் கனெக்‌ஷன் உள்ள அனைவரும் தவறாமல் பயன்படுத்தி வரும் ஒரு ஆப் என்றால் அது வாட்ஸ் அப் தான். நம் குடும்ப உறவுகள், நண்பர்கள், அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்களோடு உரையாடவும், ஃபோட்டோ, வீடியோ உள்ளிட்ட மீடியாக்களை அனுப்பி வைக்கவும், அதேபோன்று டாக்குமெண்டுகளை பகிர்ந்து கொள்ளவும் வாட்ஸ் அப் மிகவும் உதவிகரமாக இருக்கிறது.

    இது தவிர்த்து, தற்போது பயனாளர்களின் நலன் கருதி பணப்பரிமாற்ற வசதியும் வாட்ஸ்அப்-பில் இடம்பிடித்துள்ளது. அந்த வகையில், ஏதேனும் ஒரு ரூபத்தில் வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது என்னும் சூழலில், மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

    19 லட்சம் கணக்குகள் முடக்கம்:

    இந்தியாவில் கடந்த மே மாதத்தில் மட்டும் 19 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்று வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இந்திய அரசின் புதிய ஐடி விதிகள் - 2021ஐ கடைப்பிடிக்காத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுபோன்று ஐடி விதிகளை கடைப்பிடிக்காத அக்கவுண்ட்களை பேட் அக்கவுண்ட் என்று குறிப்பிடுகின்றனர்.

    கடந்த ஏப்ரல் மாதத்தில், இந்தியாவில் 16.6 லட்சம் பேட் அக்கவுண்ட்கள் முடக்கப்பட்டன என்று வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில ஆண்டுகளில், ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் மற்றும் மிகச் சிறப்பு வாய்ந்த தொழில்நுட்ப பிரிவுகளில் நாங்கள் ஏராளமான முதலீடுகளை செய்துள்ளோம். குறிப்பாக, டேட்டா விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களை பணியமர்த்தி வாட்ஸ் அப் பயனாளர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வாட்ஸ் அப் தளத்தை பாதுகாப்பானதாக வழங்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’’ கூறப்பட்டுள்ளது.

    also read : இனி யாரும் தேவையில்லாத மெசேஜ் அனுப்ப முடியாது.. whatsapp-ன் புதிய அப்டேட்

    பயனாளர்களின் புகார்கள் மீது நடவடிக்கை:

    வாட்ஸ் அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ஆப் மூலமாக முன்வைக்கும் புகார்கள் மீது அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதவிர, சமூக விரோதிகள் தங்கள் தளத்தை தவறாகப் பயன்படுத்தும் நடவடிக்கைகளையும் வாட்ஸ் அப் முறியடித்து வருகின்றது என்று வாட்ஸ் அப் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

    ஐடி விதிகள் சொல்வது என்ன?

    இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகள் 4(1) (டி) - இடைக்கால வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் மீடியா விதிமுறை கொள்கை - 2021 விதிகளை சமூக வலைதளங்கள் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அதாவது, சுமார் 5 மில்லியனுக்கு அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட சமூக வலைதள நிறுவனங்கள், இந்த ஐடி விதிகளின்படி எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அரசுக்கு மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். சமூக வலைதள சேவைகளை சிலர் தவறாகப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

     
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: WhatsApp

    அடுத்த செய்தி