இந்தியாவின் பெரு நகரங்களில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 1,852 இணையதளக் குற்றங்கள் நடைபெறுவதாக ‘குயிக் ஹீல்’ ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் இருக்கும் இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மென்பொருள் நிறுவனமான குயிக் ஹீல் தனது 2019-ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 1,852 இணையதளக் குற்றங்கள் நடப்பதாகக் கூறப்படுள்ளது. பெரு நகரங்களான மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் பெங்களூரு ஆகிய நான்கு நகரங்களில் தான் அதிக அளவு இணையதளக் குற்றங்கள் நடக்கின்றன.
மஹாராஷ்ட்ரா, டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களில் தான் அதிகமாக இணையதளக் குற்றங்கள் நிகழ்கின்றன. கடந்த ஒரு வருடத்தில் மட்டும், விண்டோஸ் இயங்குதளம் இருக்கும் கனிணி மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல்ஃபோன்களில் தான் அதிகமான குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. விண்டோஸ் இயங்குதளம் இருக்கும் கனிணிகளில் மட்டும் 97.3 கோடி குற்றங்கள் கடந்த ஒரு வருடத்தில் நடந்துள்ளன. கனிணி மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல்ஃபோன்கள் பயன்படுத்துபவர்கள், தேவையில்லாத ஆப்களையோ, மென்பொருட்களையோ பயன்படுத்த வேண்டாம் என்கிறார்கள் குயிக் ஹீல் ஆய்வாளர்கள்.
மேலும் வாசிக்க...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cyber attack