Smartphone: இந்தியாவில் தங்கள் உற்பத்தியை நிறுத்திய பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்!

கோப்புப் படம்

இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் பெரிய மற்றும் சிறிய பிராண்டுகள் பல சரிவை சந்தித்தன.

  • Share this:
இந்திய ஸ்மார்ட்போன் சந்தை எப்போதுமே மிகவும் போட்டித்தன்மையுடையது. தினமும் வரும் புதுப்புது அப்டேட்டுகளால் அனைத்து மொபைல் பிராண்டுகளும் தங்களது இடத்தை தக்கவைக்க முடியாது. 2014-2015ம் ஆண்டில், இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் பெரிய மற்றும் சிறிய பிராண்டுகள் பல சரிவை சந்தித்தன. அந்த நிறுவனங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

LG Electronics

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் தென் கொரியாவில் உள்ள சியோல் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு மின்னணு நிறுவனம் ஆகும். ஏப்ரல் 2021ல் எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் தனது மொபைல் வணிக பிரிவை மூடுவதாக அறிவித்தது. உலகளவில் புதுமையான கைபேசிகளை அறிமுகப்படுத்தினாலும், ஸ்மார்ட்போன் சந்தையில் எல்ஜியால் நீண்ட நாள் தாக்குபிடிக்க முடியவில்லை. தற்போதுள்ள மொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு சர்விஸ் மற்றும் சாப்டுவேர் அப்டேட்டுகளை சில காலம் வழங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சோனி

சோனி குழுமம் ஜப்பான் நாட்டிலுள்ள டோக்கியோ நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் கணிணி தயாரிப்புத் துறையிலும், மின்னணு சாதனங்கள் உற்பத்தியிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனிடையே மே 2019ல், விற்பனை குறைத்ததால் சோனி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. இந்தியாவில் மட்டுமின்றி தென் அமெரிக்கா, மேற்கு ஆசியா, தெற்காசியா, ஓசியானியா போன்ற நாடுகளிலும் விற்பனையை நிறுத்தியது.

HTC

தைவானிய பிராண்ட் எச்.டி.சி இந்திய சந்தையில் இருந்து வெளியேறியது. எனினும் 2019ம் ஆண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மற்றொரு மறுபிரவேசம் செய்ய முயற்சித்தது, ஆனால் அது பலனளிக்கவில்லை. இந்தியாவில் சீன மொபைல் தயாரிப்பாளர்களிடமிருந்து எச்.டி.சி ஒரு பெரிய பங்கை வாங்கியது, இறுதியில் இந்தியாவில் தொலைபேசிகளின் விற்பனையை நேரடியாக நிறுத்த முடிவு செய்தது.

BlackBerry Mobile

இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில், QWERTY ஸ்மார்ட்போன்களுடன் தனக்கென ஒரு ஒரு அடையாளத்தை பிளாக்பெர்ரி நிறுவனம் உருவாக்கியது, ஆனால் அண்ட்ராய்டு மற்றும் iOS பிரபலமடைந்து வருவதால் இந்நிறுவனத்தால் மேலும் தொடர்ந்து நடைபோட முடியவில்லை. இறுதியில் பிளாக்பெர்ரி மொபைல் ஆகஸ்ட் 2020-க்கு பிறகு உற்பத்தி பங்குதாரர் டி.சி.எல் உடனான ஒப்பந்தத்தின் காலாவதியுடன் மூடப்பட்டது.

Also read... Windows 11: அசத்தல் லுக்கில் புதிய அம்சங்களுடன் Windows 11 OS-ஐ வெளியிட்ட மைக்ரோசாப்ட்!

LeEco

லீகோ இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மிகுந்த ஆடம்பரத்துடன் நுழைந்தது. ஆனால் அந்நிறுவனம் வருமானத்தை பெருக்குவதற்கு பதிலாக அதிக பணத்தை வீணாக செவழித்து கொண்டிருந்தது. இறுதியில், நஷ்டம் ஏற்பட்டடால் 2017ல் மூடப்பட்டது.

Meizu

Meizu-வும் சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆகும். இது ஷியோமி போன்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் நோக்கத்தில் மலிவு விலையில் அதிக ஹார்வேர் பார்ஸ்டுகள் அடங்கிய போன்களை வழங்கியது. இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் சில பிரபலமடைந்த போதிலும் இந்த பிராண்டு தனது வணிகத்தை இந்தியாவில் சிறப்பாக நிர்வகிக்க முடியவில்லை, எனவே மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

​Spice

ஸ்பைஸ் மொபைல்கள் பட்ஜெட் பிரிவில் வெளிவந்த ஒரு பிரபலமான இந்தியா ஸ்மார்ட்போன் பிராண்டாகும். ஆனால் மற்ற நிறுவனங்களின் கடுமையான போட்டி காரணமாக இந்நிறுவனம் மூடப்பட வேண்டியிருந்தது.

Qiku

Qiku மற்றொரு ஸ்மார்ட்போன் பிராண்டாகும், இது 2014ம் ஆண்டில் தொடங்கப்பட்டது மற்றும் குறைந்த விலையில் அதிக ஹார்வேர் பார்ஸ்டுகள் அடங்கிய போன்களை வழங்கியதன் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்தது. Qiku நிறுவனம் இரண்டு கைபேசிகளை அறிமுகப்படுத்தியது, எனினும் ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு அடையாளத்தை உருவாக்க முடியவில்லை.

Panasonic

பேனசோனிக் நிறுவனம் ஒசாக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு ஜப்பானிய பன்னாட்டு நிறுவனம். பேனசோனிக் நிறுவனத்தின் முக்கியமான வணிக பொருட்கள் - தொலைக்காட்சிகள், நுகர்வோர் பொருட்கள், ஸ்மார்ட்போன் மற்றும் பிற மின்னணு சாதனங்கள் ஆகும். மலிவு விலையில் ஸ்மார்ட்போன் சந்தையில் சிறிது காலம் போராடிய பிறகு, பேனசோனிக் இறுதியில் ஸ்மார்ட்போன் தயாரிப்பை கைவிட்டது.

Videocon

வீடியோகான் நிறுவனத்தின் தலைமையகம் மும்பையில் உள்ளது. மலிவு விலையில் பல மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியது, ஆனால் இந்த பிராண்ட் சந்தையில் லாபத்தை பெற முடியவில்லை, எனவே இறுதியில் தொலைபேசிகளின் விற்பனையை நிறுத்த வேண்டியிருந்தது.

iBall

ஐபால் கிராமப்புறங்களை குறிவைத்து பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை உருவாக்க முயற்சித்தது. ஆனால் ஓப்போ, சியோமி, விவோ போன்ற சீன பிராண்டுகளின் கடுமையான போட்டி காரணமாக iBall நிறுவனத்தால் நீடித்திருக்க முடியவில்லை.

InFocus

இன்ஃபோகஸ் ஒரு அமெரிக்க ஸ்மார்ட்போன் நிறுவனம் ஆகும், இது இரண்டு கைபேசிகளை அறிமுகப்படுத்திய பின்னர் திடீரென இந்தியாவில் தொலைபேசிகளின் விற்பனையை நிறுத்தியது.

இதுதவிர Alcatel, ​iVoomi, YU ஆகிய ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்கள் தயாரிப்பை இந்தியாவில் நிறுத்தியுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: