14 மாநிலங்களில் வீழ்ச்சியை சந்தித்த ஏர்டெல்!

மாதிரிப் படம்

பயனாளர்களின்  எண்ணிக்கை குறைந்துள்ளது தொடர்பாக தனது 26 வட்டங்களுக்கு ஏர்டெல் தரவுகளை அனுப்பியது. இந்த தரவுகளில் குளறுபடி இருந்ததையடுத்து திருத்தப்பட்ட தரவுகளை ஏர்டெல் மீண்டும் அனுப்பியுள்ளது. 

 • Share this:
  ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் கடந்த மே மாதத்தில் 46 லட்சம் பயனாளர்களை இழந்த நிலையில், எந்தெந்த மாநிலங்களில் பயனாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்ற தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

  இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான ஏர்டெல் கடந்த மே மாதத்தில் 46 .13 லட்சம் பயனாளர்களை  இழந்துள்ளது  இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்  (டிராய்) வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, கடந்த மே மாதத்தில் இந்திய மொபைல் சந்தை  62.70 லட்சம் பயனாளர்களை  இழந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  இந்நிலையில், பயனாளர்களின்  எண்ணிக்கை குறைந்துள்ளது தொடர்பாக தனது 26 வட்டங்களுக்கு ஏர்டெல் தரவுகளை அனுப்பியது. இந்த தரவுகளில் குளறுபடி இருந்ததையடுத்து திருத்தப்பட்ட தரவுகளை ஏர்டெல் மீண்டும் அனுப்பியுள்ளது.  அதன்படி இந்திய அளவில் 1.3 சதவீதம் வீழ்ச்சியை அந்நிறுவனம் சந்தித்துள்ளது.

  இதையும் படிங்க: ஒரே மாதத்தில் 46 லட்சம் பயனாளர்களை இழந்த ஏர்டெல்: ஜியோவுக்கு ஏறுமுகம்!


  ஆந்திராவில் 1.3 %, பிகாரில் 0.9%,  டெல்லியில்  2.4%,  குஜராத்தில் 1.9%,  ஹரியானாவில் 2.2%,  இமாச்சல் பிரதேசத்தில் 2%,  கர்நாடகாவில் 2%,  கேரளாவில் 1.4% ,  கொல்கத்தாவில்  1.9%,  மத்திய பிரதேசத்தில் 0.7%,  மகாராஷ்டிராவில் 2%,  மும்பையில் 2.4%,  வடகிழக்கில் 1.1% ஒடிசாவில் 1.2 %,  பஞ்சாபில் 1.9%,  ராஜஸ்தானில் 1.6%, தமிழ்நாட்டில் 2%,  உத்தரப் பிரதேசம் கிழக்கில் 0.9 %,  உத்தரப் பிரதேசம் மேற்கில் 0.9%,  மேற்கு வங்கத்தில் 1.1% வீழ்ச்சியை ஏர்டெல் நிறுவனம் சந்தித்துள்ளது.

  மேலும் படிங்க: ‘இ-ருபி’ புதிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை அறிமுகம்: பயன்படுத்துவது எப்படி?


  முந்தைய தரவுகளுடன் ஒப்பிடும்போது, ஆந்திரா,  டெல்லி, குஜராத், தமிழ்நாடு,  ஹரியானா, இமாச்சல் பிரதேசம்,  ஜம்மு& காஷ்மீர்,  கர்நாடகா, கேரளா, கொல்கத்தா,  மகாராஷ்டிரா, மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய வட்டங்களில் அதிக வீழ்ச்சியை அந்நிறுவனம் சந்தித்துள்ளது. அசாம் வட்டத்தில் மட்டும் 0.1% வளர்ச்சியை அந்நிறுவனம் பெற்றுள்ளது.
  Published by:Murugesh M
  First published: