வந்துவிட்டது துணி மடிக்கும் ரோபோ: இனி வாஷிங் மிஷின் துவைத்தால் இந்த ரோபோ மடித்துவிடும்

இந்த ரோபோ மூன்றே நொடியில் துணியை மடித்துவிடும் ஆற்றல் கொண்டது.

news18
Updated: July 12, 2019, 7:29 PM IST
வந்துவிட்டது துணி மடிக்கும் ரோபோ: இனி வாஷிங் மிஷின் துவைத்தால் இந்த ரோபோ மடித்துவிடும்
துணி மடிக்கும் ரோபோ
news18
Updated: July 12, 2019, 7:29 PM IST
என்னதான் துணியை வாஷிங் மிஷின் துவைத்தாலும் அதை மடிப்பது தற்போது பெரும் சிரமாகிவிட்டது. துவைத்த துணிகளை அப்படியே போட்டு வைப்பதால் அறையைக் குப்பைக் கூடமாக மாற்றிவிடும்.

இனி அந்தக் கவலையும் வேண்டாம் வந்துவிட்டது துணி மடிக்கும் இயந்திரம். ஆம், நைஜீரியாவைச் சேர்ந்த 12 வயது ஃபாதியா அப்துல்லாஹி என்ற சிறுமிதான் இந்த ரோபோவைக் கண்டுபிடித்துள்ளார்.

கோடிங் மூலம் இந்த ரோபோவை உருவாக்க 11 வயதிலிருந்தே முயற்சியைத் துவங்கியுள்ளார். ”வீட்டில் பெரும்பாலோனோர் துவைத்த துணிகளை மடிப்பதற்கு மிகவும் சிரமப் படுகின்றனர். அதனால்தான் இந்த ரோபோவை உருவாக்கினேன்” என்றுக் கூறியுல்ளார் ஃபாதியா.


ஃபாதியா அப்துல்லாஹி


இந்த ரோபோ மூன்றே நொடியில்  துணியை மடித்துவிடும் ஆற்றல் கொண்டது. அதற்கு நீங்கள் துணியை அதன் மேல் வைத்தால் போது. இதோடு மேலும் அந்த ரோபோவுக்கு கூடுதல் அம்சங்கள் சேர்க்கும் விதமாக மீண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முற்றிலுமாக வடிவமைத்த பின் சந்தைக்கு வரும் என்று மீடியாவிடம் கூறியுள்ளார்.இந்த ரோபோவை மிகவும் எளிமையான முறையில் தயாரித்துள்ளார் ஃபாதியா. சில ஊக்குகள், EV3 brick என்னும் புரோக்ராம் சர்க்யூட் , விட்டங்கள் என அதிக செலவுகளே இல்லாமல் தயாரித்துள்ளார்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து நெட்டிசன்கள் சிறுமியின் கண்டுப்பிடிப்பை பாராட்டி வருகின்றனர்.
First published: July 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...