நவம்பர் 22-ம் தேதி இந்திய கேம் டெவலப்பர்ஸ் மாநாடு... இம்முறை ஹைதராபாத்தில்!

கேம் டெவலப்பர்கள் மட்டுமல்லாது ஆன்லைன் கேம் பிரியர்கள், ரசிகர்கள், கேம் நிறுவனங்கள் என யார் வேண்டுமானாலும் இந்த மாநாட்டில் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 22-ம் தேதி இந்திய கேம் டெவலப்பர்ஸ் மாநாடு... இம்முறை ஹைதராபாத்தில்!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: August 14, 2019, 1:18 PM IST
  • Share this:
ஆன்லைன் கேம்ஸ்களை உருவாக்கும் டெவலப்பர்களுக்கான 11-வது இந்திய மாநாடு இந்தாண்டு ஹைதராபாத்தில் நவம்பர் 22-ம் தேதி முதல் 23-ம் தேதி வரையில் நடைபெறுகிறது.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் நடைபெறும் இந்த இரண்டு நாட்கள் மாநாட்டை தெலங்கானா VFX, அனிமேஷன் மற்றும் கேமிங் சங்கத்துடன் இணைந்து தெலங்கானா அரசும் எடுத்து நடத்துகிறது. சர்வதேச அளவில் கேமிங் தொழில்நுட்பத்தில் இந்தியர்களின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் இந்த மாநாடு கடந்த 2009-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடந்து வருகிறது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் கேமிங் உலகம் பன்மடங்கு வளர்ந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டும் துறையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. சர்வதேச அளவிலும் விரைவில் ஆன்லைன் கேமிங் துறையில் இந்தியா தனி முத்திரையும் பதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


கேம் டெவலப்பர்கள் மட்டுமல்லாது ஆன்லைன் கேம் பிரியர்கள், ரசிகர்கள், கேம் நிறுவனங்கள் என யார் வேண்டுமானாலும் இந்த மாநாட்டில் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் முக்கியத் தலைப்பாக VR மற்றும் ஆண்ட்ராய்டு - iOSக்கான மொபைல் கேமிங் ஆகியவை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: ஸ்மார்ட்ஃபோன்களுக்கு 15% வரையில் கேஷ்பேக்- ரிலையன்ஸ் டிஜிட்டலின் சுதந்திர தின ஆஃபர்..!
First published: August 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்