ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

முதல் ட்விட் செய்தவர் இவர்தான்- ட்விட்டர் பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்!

முதல் ட்விட் செய்தவர் இவர்தான்- ட்விட்டர் பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்!

ட்விட்டர்

ட்விட்டர்

ட்விட்டர் ஆரம்பிக்கப்பட்ட புதிதில் “worship"  என்ற அம்சத்தை உருவாக்க முயன்றது

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் ஒப்பந்தம் மூலமாக ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியது ஊடகங்கள் மற்றும் சோசியல் மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பெரும் போராட்டத்திற்கு பிறகு ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க், தற்போதைய நிர்வாகம் மீது தனக்கு நம்பிக்கையில்லை எனக்கூறி சிஇஓ பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை பணியை விட்டு நீக்கியுள்ளது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

  எலான் மஸ்க்கிற்கும் ட்விட்டர் நிர்வாகத்திற்கும் இடையிலான மோதல் முதல் பராக் அகர்வாலுக்கு கிடைக்க உள்ள செட்டில்மெண்ட் வரை பலவற்றைப் பற்றியும் நீங்கள் அறிந்திருக்கக்கூடும். ஆனால் ட்விட்டர் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் நடந்த சுவாரஸ்யமான, யாருமே அறிந்திடாத சில சம்பவங்களை உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

  1. ட்விட்டரின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியை பற்றி பதிவு செய்யப்பட்டுள்ள நிக் பில்டனின் புத்தகத்தின் படி, ட்விட்டருக்கு முதன் முதலில் என்ன மாதிரியான பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன என்ற தகவல் கிடைத்துள்ளது. ஆம், ட்விட்டருக்கு முதலில் Hatching Twitter, Twitch, Smssy மற்றும் Friendstalker போன்ற பெயர்களை வைக்கலாம் என்றுதான் ஆலோசித்து வந்துள்ளனர்.

  2. ட்விட்டர் என்ற சோசியல் மீடியா பிளாட்பார்ம் உருவாக்கப்பட்ட போது, அதன் இணை நிறுவனர்களில் ஒருவரான டோர்சிதான் முதல் ட்வீட்டை பதிவு செய்தார். 2006ம் ஆண்டு, மார்ச் 21ம் தேதி சரியாக மாலை 4.50 மணிக்கு ட்வீட் செய்ததார். இந்த ட்வீட் இப்போது 50 ஆயிரத்திற்கும் அதிகமானோரால் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. மற்றொரு இணை நிறுவனரான பிஸ் ஸ்டோனை அடுத்த சில நிமிடங்களில் இரண்டாவது ஆளாக ட்வீட் செய்திருந்தார். ட்விட்டர் கணக்கை முதன் முறையாக தொடங்கிய அனைவருக்கும் ஆட்டோமெட்டிக்காக “Just setting up my twttr” என்ற ட்வீட் போஸ்ட் ஆனது.

  Read More: உலக சந்தையில் அறிமுகம் ஆகும் ஃப்ளிப் மாடல் மோடோ ரேசர் 2022 - இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா?

   3. ட்விட்டரில் ஒரு பதிவை போஸ்ட் செய்ய வேண்டும் என்றால் வெறும் 140 எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற வரம்பு இருந்தது. இதனிடையே ட்விட்டர் பிரபலமான சோசியல் மீடியாவாக உருவெடுத்ததோடு, மில்லியன் கணக்கான யூஸர்களின் கோரிக்கையை ஏற்று 2017ம் ஆண்டு 140 எழுத்துக்கள் என்ற வரம்பு 280 ஆக உயர்த்தப்பட்டது.

  4. ஏப்ரல் 2009ம் ஆண்டு, பிரபல நடிகரான ஆஷ்டன் குட்சர், செய்திதளமான சிஎன்என்-யைப் பின்னுக்குத்தள்ளி ஒரு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட முதல் ட்விட்டர் யூஸர் என்ற பெருமையைப் பெற்றார்.

  5. ட்விட்டர் ஆரம்பிக்கப்பட்ட புதிதில் “worship" என்ற அம்சத்தை உருவாக்க முயன்றது. இந்த அம்சத்தை கிளிக் செய்வதன் மூலமாக சம்பந்தப்பட்ட நபரின் பதிவுகளைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள முடியும் என வடிவமைக்கப்படவிருந்தது. ஆனால் அதனை ட்விட்டர் கடைசி வரை செய்யவில்லை.

  "வழிபாட்டு" அம்சத்தை உருவாக்கும் யோசனையுடன் விளையாடியது. ஒரு நபரின் ஒவ்வொரு செய்தியையும் நீங்கள் வணங்கினால் பெறலாம் என்ற எண்ணம் இருந்தது. இந்த அம்சம் ஒருபோதும் வரவில்லை

  6. ட்விட்டருக்கு பெயரும் புகழும் சேர்ப்பதே அதன் ஹேஷ்டேக்குகள் தான், அமெரிக்காவில் போடப்படும் ஹேஷ்டேக்குகள் ஆண்டிப்பட்டி வரை ட்ரெண்ட் செய்யப்படுவது உண்டு. இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ட்விட்டரில் ஹேஷ்டேக் என்ற முறையை அந்த நிறுவனமோ, பணியாளர்களோ உருவாக்கவில்லையாம். ட்விட்டரில் ஹேஷ்டேக் என்ற நடைமுறை யூஸர் ஒருவர் மூலமாக ஆரம்பமாகியுள்ளது. 2007ம் ஆண்டு கிறிஸ் மெசினா என்ற நபர் @ChrisMessina என்ற அக்கவுண்டில் இருந்து “குழுக்களுக்கு # (பவுண்டு) பயன்படுத்துவதைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள். #barcamp-யில் உள்ளதைப் போல?" என பதிவிட்டிருந்தார். இவர் தான் ஹேஷ்டேக்கின் காட்பாதர் ஆவார்.

  7. ட்விட்டரில் “ஹேஷ்டேக்” இருப்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் “கேஷ் டேக்” என்ற ஒன்று இருப்பதை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், டாலர் குறியீட்டைக் கொண்ட கேஷ் டேக் பங்குச்சந்தை மற்றும் பணம் சம்பந்தமான செய்திகளைப் பதிவிடும்போது பயன்படுத்தப்படுகிறது.

  8. ட்விட்டர் ஐகானில் நாம் பார்க்கும் பறவை சிம்பிளுக்கு லாரி பர்ட் எனப் பெயர். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல முன்னாள் கூடைப்பந்து வீரரும், பாஸ்டன் செல்டிக்ஸ் அணியின் சிறந்த வீரராக வலம் வந்துவருமான லாரி பர்டின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

  9. 2013 ஆம் ஆண்டு உலக இளைஞர் தினத்தின் போது வாடிகன் சமூக வலைத்தளங்களுக்கான மிக முக்கியமான படியை எடுத்து வைத்தது. அன்றைய தினம் போப்பின் ட்விட்டரை பின்தொடர்வதன் மூலமாக வாடிகனின் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாம் என்றும், இதன் மூலம் ஆன்மாவை தூய்மைப்படுத்துவதற்காக நீங்கள் செலவிடும் நேரம் குறையும் என்றும் அறிவித்தது.

  Read More: EB பில் இப்படியும் கட்டலாமா..? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே

  10. ட்விட்டரைக் கைப்பற்ற எலான் மஸ்க் மட்டுமல்ல மற்றொரு பில்லியனரும் கடுமையாக முயன்றுள்ளார். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க இரண்டு முறை முயற்சி செய்தார். ஆனால் அவர் கொடுத்த ஆபரை ஏற்க ட்விட்டர் நிர்வாகம் அப்போது மறுத்துவிட்டது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Twitter