நமது பிரவுசர்களில் மறைந்து நிற்கும் எக்ஸ்டென்ஷன்கள் மூலமாக இந்த ஆண்டின் முதல் பாதியில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டனர் என்று சைபர் பாதுகாப்பு சார்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, கடந்த 2021ஆம் ஆண்டில் இதேபோன்ற அபாயங்களால் பாதிக்கப்பட்ட 70 சதவீத பயனாளர்களை விஞ்சுகின்ற வகையில் தற்போதைய பாதிப்பு உள்ளது.
இது தொடர்பாக கேஸ்பெர்ஸ்கி வைரஸ் புரொடெக்ஷன் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஆட் ஆன் என்ற பெயரில், அப்பாவித்தனமாக காட்சி அளிக்கும் பிரவுசர் எக்ஸ்டென்ஷன் மூலமாக சைபர் கிரிமினல்கள் ஊடுருவி வருகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.
கூகுள் டிரான்ஸ்லேட்டர், பிடிஎஃப் கர்வெர்டர் உள்ளிட்ட பிரபல ஆப்கள்:
பயனாளர்கள் பயன்படுத்தும் பிரபல ஆப்களான கூகுள் டிரான்ஸ்லேட்டர் மற்றும் இதர ஆப்களான பிடிஎஃப் கன்வெர்டர் அல்லது வீடியோ டவுன்லோடர் போன்ற எக்ஸ்டென்ஷன்கள் அபாயங்களைக் கொண்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் விளம்பரங்கள் என்ற பெயரில் நமது பிரவுஸிங் ஹிஸ்டரி, லாக் இன் விவரங்கள் போன்றவற்றைத் திரட்டுகின்றனர்.
இதுகுறித்து மூத்த பாதுகாப்பு ஆய்வாளர் ஆண்டன் இவானவ் கூறுகையில், “நமது டேட்டாவை பார்க்க வேண்டிய தேவையற்ற ஒருவரிடம் பகிர்ந்து கொள்கின்றனர். அது ஆபத்தானது’’ என்று தெரிவித்தார். பிரவுஸர் எக்ஸ்டென்ஷன் என்ற பெயரில் மிகுந்த அபாயங்களைக் கொண்டுள்ள ஆட் ஆன் ஒன்று ஆட்வேர் (adware) ஆகும். இது ஸ்கிரீனில் தோன்றும் தேவையற்ற விளம்பரங்களைத் தடுப்பதற்கான ஆட் ஆன் ஆகும்.
Also Read : ஆண்ட்ராய்டு 13 வந்தாச்சு... உங்கள் மொபைலுக்கு டவுன்லோடு செய்வது எப்படி?
அந்த விளம்பரங்கள் பெரும்பாலும் பிரவுஸர் ஹிஸ்டரி அடிப்படையில் தோன்றுபவை ஆகும். பயனாளர்கள் ஆர்வங்களைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ற நிறுவனங்களின் பக்கங்களுக்கு நம்மைத் திசைதிருப்பி, அங்குப் பணம் ஈட்டுவதற்கான வழிமுறையைப் பின்பற்றுகின்றனர். கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் 4.3 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களிடம் இந்த ஆட்வேர் எக்ஸ்டென்ஷன் இருந்துள்ளது என்று கேஸ்பெர்ஸ்கிரி நிறுவன ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நடவடிக்கை எடுக்கும் கூகுள் நிறுவனம்:
முன்னதாக, மால்வேர் கொண்ட 106 ஆட் ஆன்களை கூகுள் நிறுவனம் கடந்த 2020ஆம் ஆண்டு தனது பிரவுசரில் இருந்து நீக்கியது. மொத்தத்தில் மாலிசியஸ் எக்ஸ்டென்ஷன் கொண்ட ஆட் ஆன்களை 32 மில்லியன் மடங்கு டவுன்லோடு செய்துள்ளானர். இதனால், மில்லியன் கணக்கான பயனாளர்களின் டேட்டா பாதுகாப்பு அபாயத்தில் உள்ளது. பெரும்பாலான ஆட் ஆன்களை தர்ட் பார்டி நிறுவனங்கள் விநியோகம் செய்வதால் இதை அவ்வளவு எளிதாகத் தடுக்க முடியாது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Google, Internet, Personal data theft