துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி - முதல்வர் நேரில் சென்று நலம் விசாரிப்பு

வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • Share this:
சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றிரவு சிகிச்சை பெற சென்ற ஓ.பன்னீர்செல்வம் மருத்துவர்கள் அறிவுரையின்படி அங்கேயே அனுமதிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து பிற்பகல் 12.30 மணியளவில் ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மேலும், அதிமுகவின் மூத்த தலைவர்களும் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.

வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாவும், பரிசோதனைக்கு பிறகு இன்று மாலையே அவர் வீடு திரும்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது.First published: May 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading