மண்டல ஊரடங்கு அமலாக்க குழு மூன்று மடங்காக அதிகரிப்பு - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

மாதிரிப் படம்

  • Share this:
    பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு அறிவித்துள்ள வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த நியமிக்கப்பட்டுள்ள மண்டல ஊரடங்கு அமலாக்க குழு மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நடைமுறைப்படுத்த மண்டலத்திற்கு ஒரு குழு என மொத்தம் 15 மண்டல ஊரடங்கு அமலாக்க குழுக்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    சென்னையில் இதுவரை அரசின் கட்டுப்பாடுகளை மீறியதாக 11,105 தனி நபர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறிய தனிநபர், கடை, நிறுவனங்கள் என மொத்தம் ரூ.2.52 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் ஊரடங்கை நடைமுறைப்படுத்த ஒரு மண்டலத்திற்கு ஒரு அமலாக்க குழு அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒரு மண்டலத்திற்கு 3 அமலாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து 15 மண்டல குழுக்கள் இருந்த நிலையில் தற்போது 45 குழுக்கள் நாளை முதல் தீவிரமாக கண்காணித்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். அமலாக்க குழுவில் மாநகராட்சி வருவாய் துறை அலுவலர், ஒரு காவலர் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published: