ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிகவேகமாக வாகனம் ஓட்டிய வழக்கில் பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் கைது!

அதிகவேகமாக வாகனம் ஓட்டிய வழக்கில் பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் கைது!

டிடிஎஃப் வாசன்

டிடிஎஃப் வாசன்

இதற்கு முன் போத்தனூர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் டிடிஎப்  வாசன் ஜாமின் பெற்ற நிலையில், சூலூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் ஜாமின் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  பிரபல யூ டியூபர் டி.டி.எஃப் வாசனை கோவை மாவட்டம் சூலூர் காவல்துறையினர்  கைது செய்து பின்னர் காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.

  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் Twin throttlers என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்தும், நீண்ட தூரம் பயணித்தும் அதை வீடியோவாக பதிவிட்டு 2k  கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்.

  இவர் சமீபத்தில், கோவை கொச்சின் பைபாஸ் சாலையில் டிக் டாக் பிரபலம் ஜி.பி முத்துவை பின் இருக்கையில் வைத்துக்கொண்டு அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டியதற்காக டி.டி.எஃப் வாசன் மீது சூலூர் காவல் நிலையத்தில் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

  இதற்கு முன் போத்தனூர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் டிடிஎப்  வாசன் ஜாமின் பெற்ற நிலையில், சூலூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் ஜாமின் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

  இதையும் வாசிக்க: 'ஓசி பேருந்து’ என விளையாட்டாக பேசியதை தவறாக புரிந்துக் கொண்டனர் - அமைச்சர் பொன்முடி விளக்கம்

  இன்று மாலை தென்னம்பாளையம் அருகே வாகன சோதனையின் போது டி.டி.எப் வாசனை சூலூர் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து சில மணி நேரங்களில் அவரை காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Bike race, Coimbatore, Police arrested