Home /News /tamil-nadu /

யூடியூப் டான் என பில்டப் கொடுத்த பப்ஜி மதன் - தருமபுரியில் சிக்கியது எப்படி?

யூடியூப் டான் என பில்டப் கொடுத்த பப்ஜி மதன் - தருமபுரியில் சிக்கியது எப்படி?

Youtube Video

ஆபாச யூடியூபர் மதன் சிக்கியுள்ள நிலையில் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க உச்சகட்ட நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

  தடைசெய்யப்பட்ட ஆன்லைன் பப்ஜி விளையாட்டின் போது, அடாவடி ஆபாசமாக யூடியூப் பக்கத்தில் பேசிவந்தவர் மதன்குமார் மாணிக்கம். மூன்று ஆண்களுக்கு மேலாக முகத்தை காட்டாமல் தான் யார் என்ற அடையாளத்தை வெளிகாட்டாமல் ஆரவாரமாக ஆபாசமாக தனது யூடியூப் பக்கத்தில் பேசிவந்தார்.

  கேஜிஎப் படத்தின் தீம் மியூசிக் போட்டுக்கொண்டு யூடியூப்பின் டானாக நினைத்து கொண்டு சோலோ கிங் என்று பில்டப் கொடுத்துவந்தார். இவரது பில்டப் பேச்சால் மூளைசலவை செய்யப்பட்ட சிலர் கண்மூடித்தனமாக இவரது ரசிகர்களாகினர். தனது ரசிகர் பட்டாளம் அதிகரிக்க அதிகரிக்க யூடியூப் வருமானமும் பல வழிகளில் பல கோடிகளை சம்பாதிக்க வைத்துள்ளது.

  எல்லை மீறிய மதன்குமார் மாணிக்கத்தின் ஆபாச பேச்சுகள் பற்றி நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியில் கடந்த பத்தாம் தேதி ஒளிப்பரப்பானது. அதை தொடர்ந்து காவல்துறைக்கும் தொடர் புகார்களாக வர தொடங்கியது . நடவடிக்கையை தொடங்கிய போலீசார் சம்மன் அனுப்பிய போதும் விசாரணைக்கு வராது மதன் போலீசாருக்கே போக்கு காட்டி வந்தார்.

  சாட்டையை வீச தொடங்கிய போலீசார் அதிரடியாக செயல்பட்டு மதனின் மனைவியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இருவரும் கணவன் மனைவியாகவே ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வந்தது தெரிந்தது மதனின் ஆபாச பேச்சு யூடியூப் பக்கம் கீர்த்திகா பெயரில் தான் இருந்துள்ளது மேலும் மதனின் யூடியூப் சேனலுக்கு நிர்வாகியாகவும் இருந்துள்ளார்.

  மதன் போலீசாரிடம் இருந்து தப்பிக்க ரகசிய எண்ணை பயன்படுத்துவதாக அவரது மனைவி கொடுத்த ரகசிய தகவலையடுத்து அவரது எண்ணை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். தர்மபுரியில் உறவினர் ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்த மதன் இரண்டுநாட்களாக அங்கிருந்த ஒருவிடுதியில் தங்கி தொடர்ந்து அவர் பற்றிய செய்திகளை தொலைகாட்சிகளில் பார்த்துவந்துள்ளார்.

  ஆனால் அவரது இருப்பிடத்தை உறுதி செய்த போலீசார் வெள்ளிக்கிழமை அதிகாலை டெம்போ வாகனத்தில் சென்று அவரது இருப்பிடத்தை சுற்றிவளைத்தனர். தன்னை யாரும்பிடிக்க முடியாது என்று அடாவடியாக பேசிவந்த மதன் போலீசாரை கண்டவுடன் பயத்தில் போலீசாரின் காலில் விழுந்து கதறியுள்ளார்.

  பெண்களின், சிறார்களின் வாழ்வை கெடுத்தது உண்மைதான் என்னை மன்னித்துவிடுங்கள் என்று கதறியுள்ளார். இவரிடம் இருந்து செல்போன், ஒரு ஆப்பிள் மடிக்கனிணி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர் போலீசார். அத்துடன் மதன் சிதற விட்ட ஆபாச வீடியோக்களை பிற யூடியூப் சேனல்களில் சில்பி விட்ட அவரது கூட்டாளிகள் பற்றிய விபரங்களை பெற்றுள்ள போலீசார் அவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

  Also Read :  வீடியோ எடுத்த பத்திரிகையாளரை பார்த்து "நான் என்ன பிரதமரா?" என்று கேட்ட மதன்!

  உறங்காபுலியாக இரவு முழுவது ஆபாச வீடியோக்களை வெளியிட்டு மதன் பல கோடிகளை சம்பாதித்து நான்கு கோடிக்கு மேல் தனது வங்கி கணக்கில் வைத்திருந்துள்ளார்.இதையடுத்து மதனின் வங்கிகணக்கை முடக்கிய போலீசார் அவரின் இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு சொகுசு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர். ஆடி காரில் சுற்றிய மதனை டெம்போ வண்டியில் ஏற்றிய போலீசார் அவரின் சொந்த ஊரான சேலத்திற்கு அழைத்து சென்று சென்று வீட்டில் இருந்த லேப்டாப் உள்ளிட்ட சில ஆதாரங்களை கைபற்றியுள்ளனர்.

  தன்னுடைய வீடியோவில் வந்து ஆபாசமாக பேச ரூபாய் 5000 , உடல்நலம் சரி இல்லாதவர் போல் பெண்களுக்கு பணம் கொடுத்து நடிக்கவைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. யூடியூப் வருமானத்தை விட நன்கொடை என்ற பெயரில் வாரிசுருட்டியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கைது செய்யப்பட்ட மதனை போலீசார் சென்னை அழைத்து வந்த போது நான் என்ன பிரதமறா என்று கேள்வி கேட்க நீ அக்யூஸ்ட் என்று போலீசார் கூலாக கூறி விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

  இதற்கிடையே சேலத்தில் மதனின் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள் மதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கூறி வழியுறுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மதனிடம் தொடர்ந்து விசாரித்து வரும் போலீசார் மோசடியில் பங்கேற்ற கூட்டாளிகளின் விபரங்களை பெற்று வருகின்றனர்.
  Published by:Vijay R
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள், YouTuber Madan

  அடுத்த செய்தி